Thursday, July 29, 2010

சிவகாசி-சித்ரா-3

முந்தைய ஒரு பதிவில் சிவகாசி பட்டாசு தாயாரிக்கும்போது  விபத்து ஏற்பட்டுத் தன் முகமும் கைகளும் சிதைந்த  சித்ரா என்கிற பெண்ணைப்பற்றி எழுதியிருந்தது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.என் வேண்டுகோளை ஏற்று சில நண்பர்கள் அப்பெண்ணின் வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பியிருந்தார்கள்.இப்போது மனிதம் என்கிற மனித உரிமை மற்றும் சுற்றுச் சூழல்  அமைப்பினர் அப்பெண்ணுக்கு ஐந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய உதவியிருப்பதாக தகவல் கிடைத்தது.அவர்கள் வலைப்பக்கத்திலிருந்து  சமீபத்திய புகைப்படங்களைக் கீழே தந்துள்ளேன்.இன்னும் கைகள் சரியாகாதது தெரிகிறது.இன்னும் இரண்டு  பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டியுள்ளது.

வாய்ப்புள்ள நண்பர்கள் உதவ வேண்டும்.நான் ஏற்கனவே எழுதிய பதிவில் சித்ராவின் குடும்பத்தினர் பற்றிய விவரமும் முகவரியும் அவர்கள் பெயரில் துவங்கப்பட்ட வங்கிக் கணக்கு விபரமும் தந்துள்ளேன்.அந்த முகவரிக்குத் தொடர்பு கொண்டு நேரடியாக உங்கள் உதவிகளை செய்யவேண்டுகிறேன்.

மனிதம் பற்றி அறிய http://www.manitham.net/

M.chitradevi-sivakasi

sivaksi chithra

1 comment:

Anonymous said...

Dear comrade,We know that ur writings have a will power to some changes in humanbeings mind.It is neceesary for revoluation.Congratues,continue it here. by R.Rengasamy