-
-
நூலக நிதியில் உருவான நூலகத்தை அரசு தன்னிச்சையாக மாற்ற முடியுமா? உயர்நீதிமன்றத்தில் தமுஎகச வழக்கு சென்னை, நவ.22- மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமாக அமைக்கப்பட உள்ள அறிவு சார் பூங்கா வளாகத்திற்குள், அனைத்துத் தரப்பினருக்குமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவது பொருத்தமான முடிவல்ல என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கூறியுள்ளது. நூலகத்திற்கென்றே மக்களிடம் வசூலிக்கப்பட்ட வரியில் கட்டப்பட்ட நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதிமுக அரசு, நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி வளாகத்திற்கு இடம் மாற்ற முடிவு செய்திருப்பது தெரிந்ததே. அந்த வளாகத்தில் புதிதாக அறிவு சார் பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், அங்கே இந்த நூலகம் அமைவதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசு அறிவித்திருந்தது. அமைச்சரவையின் இந்த முடிவை எதிர்த்து ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழக்குத் தொடுத்துள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் சார்பில், வழக்கறிஞர் ச. செந்தில்நாதன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். புதனன்று (நவ.23) இந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வுக்குழு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மாற்ற முடியுமா? மாநகர நூலக ஆணைக்குழு நிதியில்தான் இந்த நூலகம் கட்டப்பட்டது. நூலகத்தைப் பராமரிக்க இயலவில்லை என்று ஆணைக்குழு முடிவெடுத்துச் சொன்னால்தான் அரசு வேறு முடிவு எடுக்க வேண்டுமேயன்றி, தானே நேரடியாக இந்த முடிவை எடுக்க இயலாது. மேலும், மக்களிடம் வசூலிக்கப்பட்ட நூலக வரியிலிருந்து கட்டப்பட்ட நூலகக்கட்டடம் ஆணைக்குழுவுக்கே சொந்தமானது. அதை அரசு வேறு நோக்கத்திற்குப் பயன்படுத்த முடியாது என்று சங்கத்தின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது நூலகம் அமைந்துள்ள பகுதியில் அதனால் எவ்விதமான இடையூறும் ஏற்படுவதாக எந்தத் தரப்பிலிருந்தும் புகார் வரவில்லை. இந்நிலையில் அரசு தன்னிச்சையாகவே இந்த முடிவை எடுத்துள்ளது. நிதிநிலை உரையில் சொல்லப்பட்டதா? அரசுத் தரப்பில், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை உரையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால், சட்டமன்ற உரையில், ஒருங்கிணைந்த அறிவு சார் பூங்கா அமைப்பது குறித்துதான் சொல்லப்பட்டிருக்கிறதேயன்றி, அண்ணா நூற்றாண்டு நூலகம் அங்கே நிறுவப்படும் என்பது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அறிவு சார் பூங்கா மாணவர்களுக்காகவும் ஆசிரியர்களுக்காகவுமே அமைக்கப்பட உள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகமோ அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படுவது. அதை அந்த பூங்காவுக்கு மாற்றுவது பொருத்தமல்ல என்று சங்கத்தின் மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு எவ்விதமான கலந்தாலோசனையும் நடத்தவில்லை. பொதுமக்கள் கருத்துக்கூற வாய்ப்பு அளிக்கவில்லை. தற்போதைய நூலகக் கட்டடம் மருத்துவமனைக்குப் பயன்படுமா என்பது குறித்து, மருத்துவக் கட்டட வல்லுநர்களின் கருத்தையும் பெறவில்லை. ஆகவே அரசின் இந்த முடிவு நிதிநிலை அறிக்கைக்குப் பின்னர் எடுக்கப்பட்டதே என்பது தெளிவாகிறது என்றும் சங்கம் கூறியுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பல்வேறு நவீன வசதிகள், ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தெரிவித்துள்ள தமுஎகச, இந்த வசதிகள் அனைத்தையும் புதிய இடத்திற்கு மாற்றுவது நடைமுறை சாத்தியமல்ல என்பதையும் குறிப்பிட்டுள்ளது. தமுஎகச வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை ஏற்கெனவே உள்ள வழக்குகளோடு இணைக்க ஆணையிட்டனர். மூன்று வார காலத்தில் இது விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Wednesday, November 23, 2011
உயர்நீதிமன்றத்தில் தமுஎகச வழக்கு
Thursday, August 12, 2010
குடியாத்தம் போராட்டம்-தோழர்கள் கைது-15 நாள் சிறை
நேற்று இட்ட பதிவின் தொடர்ச்சியாக இன்று நடந்த போராட்டம் பற்றி...
வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு தெருவில் நிற்கும் மக்களை அழைத்துக்கொண்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர்.பி.சம்பத் ,மாநிலச்செய்லாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ்,மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தோழர் லதா, வேலூர் மாவட்டச்செயலாளர் நாராயணன் போன்றோர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேற ஊர்வலமாகப் போன போது இடையில் வழிமறித்த காவல்துறை ஆர்.டி.ஓ வும் வட்டாட்சியரும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதாகவும் பேசித் தீர்க்கலாம் எனவும் தலைவர்களை அழைத்துச்சென்றனர்.
பேச்சு வார்த்தையில் தோழர்கள் அந்த நிலப்பகுதியை மறு நில அளவை (சர்வே) செய்து உண்மையை வெளிக்கொண்டுவர வலியுறுத்தியுள்ளனர்.முதலில் மறுத்துப் பின் கடைசியில் அதற்குச் சம்மதம் தெரிவித்து ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வட்டாட்சியர் அதில் கையொப்பம் இட்டு ஆர்.ட்.ஓ கையொப்பம் இடப்போகும் நேரத்தில் மேலிடத்திலிருந்து ஒரு தொலைபேசி வர ஒன்றும் சொல்லாமல் கொள்ளாமல் வட்டாட்சியரிம் பேசுங்கள் என்று சொல்லிவிட்டு ஆர்.டி.ஓ ‘தப்பி’விட்டார்.ஆர்டிஓ கையெழுத்துப் போடாமல் நான் என்ன செய்ய என்று வட்டாட்சியர் அம்மாவும் மறுத்துவிட தலைவர்களையும் அந்நேரவரை மணிக்கணக்காக நடுரோட்டில் வெயிலில் காத்திருந்த மக்களையும் கைது செய்வதாக காவல்துறை அறிவித்தது.15 நாள் ரிமாண்ட் செய்யப்பட்டுத் தோழர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் இன்னும் தெருவில்தான்.
தமிழ்ச்சினிமாக்களில்தான் இப்படி வில்லன்களுக்கு ஆதரவாக உச்சகட்டத்தில் மேலிடத்திலிருந்து தொலைபேசி வரும்.நிஜ வாழ்க்கையிலும் இன்று அப்படி நடந்துள்ளது காவல்துறை நண்பர்கள் சி.எம் ஆபீசிலிருந்தே அரெஸ்ட் பண்ணச்சொல்லி தகவல் வந்ததாகக் கூறுகிறார்கள்.பற்பல ஆண்டுகளாக வீடுகட்டி நன்கு வாழ்ந்து வந்த மக்கள் வீடுகளைவிட்டுத் துரத்தப்பட்டார்கள்.வடாட்சியர் அலுவலத்தை விட்டு இன்று துரத்தப்பட்டுள்ளனர்.பராசக்தி வசனம்போல மக்கள் ஓடினாள் ஓடினாள் என்று ஓடிக்கொண்டிருக்க மாட்டார்கள்.ஆளுக்கு 50 வீடும் பங்களாவும் என்று மாவட்ட வாரியாக ‘வாழ்ந்து’ கொண்டிருக்கும் உடன்பிறப்புகளின் குடியிருப்புகளுக்குள் வஞ்சிக்கப்பட்ட மக்கள் அணிதிரண்டு நுழைவார்கள் .காவல்துறை பலத்தோடும் கட்சிமாறி திமுகவுக்குள் வரும் இதுபோன்ற தாதாக்களின் தயவிலும் தேர்தலில் கவர் கொடுக்கும் அன்னன் அழகிரியின் ராஜதந்திரத்தை வைத்தும் ரொம்ப காலத்துக்கு வண்டியை ஓட்டிவிட முடியாது.மக்களைத் தெருவுக்குத் துரத்திவிட்டு வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டியாலும் அரிசியாலும் மட்டும் கொடியை நாட்டிவிட முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.
நியாயமான மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டங்களைக்கூட தன் மாசுமருவற்ற ஆட்சிக்கு எதிரான சதி என்றும் கலகம் என்றும் பீதியடையாமல் கலைஞர் தன் பகுத்தறிவின் பரப்புக்குள் நின்று இப்பிரச்னைகளை அணுகவேண்டியது காலத்தின் தேவையாகும்.
இன்றைய போராட்டக் காட்சிகள்:
Wednesday, August 11, 2010
நெளிந்துபோன பாத்திரங்களுக்கு நடுவே வெறித்த பார்வையோடு நம் தந்தை அம்பேத்கரின் புகைப்படம்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச்செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ் எழுதிய கட்டுரையைக் கீழே தருகிறேன்.நாளை 12.8.10 காலை குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வீடிழந்த மக்கள் குடியேறும் போராட்டம் நடைபெற இருக்கிறது.இதுபோன்ற கொடுமைகள் நம் கண்முன்னால் அன்றாடம் நடந்து கொண்டிருக்க நாம் மௌன சாட்சிகளாக வாழ நேர்ந்துள்ளது பெரும் அவலம்.குறைந்தபட்சம் அவரவர் வழியில் இச்செய்தியைப் பரப்ப முயற்சிப்போம்.தார்மீக ஆதரவையேனும் அம்மக்களுக்குத் தெரிவிப்போம்.வாய்ப்புள்ள நண்பர்கள் அப்பகுதிக்குச் சென்று அம்மக்களைச் சந்தித்தும் வரலாம் போராட்டத்திலும் பங்கேற்கலாம்.
தரைமட்டமான சமத்துவபுரம் ஒரு நேரடி ரிப்போர்ட் -கே.சாமுவேல்ராஜ்
நகரின் பிரதான பகுதிகளில் இருக் கிற ஏழைகளின் குடிசைகள் வில்லன் களால் இடித்துத் தள்ளப்படுவது போன்ற காட்சிகளை திரைப்படங்களில் பார்த்தி ருக்கிறோம். ஆனால் திரைப்படங்களை மிஞ்சுகிற காட்சி, மக்கள் வீடுகளை விட்டு தலைதெறிக்க வெளியேறி பார்த் துக் கொண்டிருக்கும் போதே பட்டப் பகலில் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்ட கொடூரம், வீதியில் வீசியெறியப்பட்ட மக்கள், என நடந்த நிகழ்ச்சிகளை விவ ரிக்கிறபோது அதிர்ச்சியில் நிலை குலைந்து போனோம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர் 36வது வார்டு, மேல் ஆலத்தூர் சாலை யோரத்தில் வரிசையாக 35 வீடுகள். நூறு ஆண்டுகளைக் கடந்த குடியிருப்பு, ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகிய உரிமைகளுடன் 4வது தலைமுறையினர் அந்த வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அருந்ததியர்கள், ஆதி திராவிடர்கள், லெப்பைப் பிரிவை சேர்ந்த இஸ்லாமி யர்கள் என ஒரு சமத்துவபுரமாகவே அந்த குடியிருப்பு இருந்துள்ளது. எல்லோருமே ஏழைகள், அன்றாடக் கூலிகள்.
சர்வே எண் 674ல் அமைந்துள்ள இந்த குடியிருப்பை ஒட்டியுள்ள நிலத்தை நில புரோக்கர் மொசைக் செல்வம் வாங்கி பிளாட் போடுகிறார். தனது பிளாட்டிற்கும் சாலைக்கும் இடையே உள்ள தரித்திர குடிசைகளை அகற்றிவிட்டால் பிளாட் பொன்முட்டையிடும். இது மொசைக் செல்வத்தின் கணக்கு. உடனே பாட் டாளி மக்கள் கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு தாவி வருகிறார். வந்தவுடன் அமைச்சர் துரைமுருகனாரிடம் ஆசியும் பெற்றாராம். அவ்வளவுதான் அவருக்கு யானைபலம் வருகிறது. வார்டு கவுன் சிலர் பார்த்திபன் பக்க துணையாக வருகிறார்.
தலித் குடியிருப்பின் ஆண்களை கடத்தி வைத்துக் கொண்டு பெண்களை மிரட்டி வெற்றுப்பேப்பர்களில் கையெ ழுத்து பெற்று, வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. மின் வாரியமும் மின்னல் வேகத்தில் ஒத்துழைப்பு கொடுத் துள்ளது. ‘கரசேவைக்கு’ நாள் குறிக்கப் பட்டது. தலித் குடியிருப்பை நிர்மூலமாக் கிட அவர்கள் தேர்வு செய்த நாள் ஏப்ரல் 14, அதாவது டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினம்.
அனைத்து துறைகளையும் கவ னித்துவிட்டு மொசைக் செல்வம் வகை யறா களம் இறங்கியுள்ளது. காலை 10 மணி அளவில் சுமார் 300 அடியாட்கள், ஜே.சி.பி, புல்டோசர் பின்தொடர மொசைக் செல்வம், பார்த்திபன் வகையறா குடி யிருப்பில் நுழைந்துள்ளனர். அடியாட் களின் மதிய உணவிற்காக ஆடுகளை வெட்டி, அப்படியே இரத்தம் வடிகிற அரி வாள்களோடு வீதியில் வலம் வந் துள்ளனர். வீடுகளுக்கு முன்பிருந்த முருங்கை, வாழை மரங்களை ஒரே வெட்டில் சாய்த்து மக்களின் இரத்தத்தை உறைய வைத்துள்ளனர். குலை நடுக்கம் ஏற்பட்ட மக்கள் வீடுகளைவிட்டு வெளி யேறி அடியாட்களின் கால்களில் விழுந்து மன்றாடிக் கொண்டிருக்கும் போதே ஜே.சி.பியும், புல்டோசரும் வீடுகளை நொறுக்கி சிதைத்தது. நான்கு தலைமுறை யின் உழைப்பு, கேட்பதற்கு நாதியற்று தெருவில் சரிந்தது. இடிபாடுகளுக் கிடையே எளியவர்களின் தட்டுமுட்டு சாமான்கள், குடிநீர் குழாய்கள் உடைத் தெறியப்பட்டன. சின்டெக்ஸ் தொட்டி தொலைவில் உள்ள சுடுகாட்டில் குப் புறக் கிடக்கிறது. வெளியேற்றப்பட்டவர்கள் புகார் கொடுக்காமல் தடுக்க அடி யாட்கள் மக்களை சிறைப்பிடித்து வைத்திருந்தனர். வேலைக்குச் செல்ல அனுமதியில்லை. சைக்கிளில் விற்ப னைக்கு வந்த கம்மங்கூழ் மட்டுமே உணவு.
செய்தி தாமதமாக கிடைத்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப் பான இடத்தில் தங்க வைத்துள்ளது. குடி யாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா மூன்று முறை மாவட்ட ஆட்சியரை சந் தித்து பேசியும் மாவட்ட நிர்வாகம் அசையவில்லை. 8.7.10 அன்று மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுள்ளது.
வெளியேற்றப்பட்டவர்களில் இரண்டு பேர் கர்ப்பிணிகள். ஒருவருக்கு பிரசவம் நடந்துள்ளது. மற்றொருவர் பாது காப்பற்ற சூழ்நிலையில் பிரசவத்தை திகி லுடன் எதிர்நோக்கியுள்ளார். பதினேழு வயதிற்கு மேற்பட்ட பெண்பிள்ளைகள் பரிதவித்து நிற்கிற காட்சி நம்மை பதற வைக்கிறது. வேலூர் மாவட்ட தோழர் களுடன் பாதிக்கப்பட்டவர்களை சந்திக் கச் சென்ற போது படுக்கையில் கிடந்த மூதாட்டி ‘நீ இங்கேயே இரு’ என எம்எல்.ஏ லதாவின் கைகளை பற்றி கண்ணீர் விட்டார். 36 குடும்பங்களுக்கும் கிடைப்பதைக் கொண்டு ஒரே சமையல். மர நிழலில் பாய், படுக்கை சுருண்டு கிடந்தது. சற்று தள்ளி ஒரு ஓரத்தில் நெளிந்துபோன பாத்திரங்கள். பாத்திரங்க ளுக்கு நடுவே வெறித்த பார்வையோடு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் புகைப்படம்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கைக் கோரியும், தலித் மற்றும் இஸ்லாமிய மக் களை மீண்டும் அதே இடத்தில் குடி யமர்த்தக் கோரியும், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி ஆகஸ்ட் 12 அன்று வேலூர் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தவிருக்கி றது. தோழர்கள் பி.சம்பத், கே.சாமுவேல் ராஜ், ஜி.லதா எம்.எல்.ஏ, ஏ.நாராயணன், வி.குபேந்திரன், பி.குணசேகரன், என். ஜோதிபாசு ஆகியோர் பங்கேற்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்களோடு பாதிக் கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு வரு கிறோம்.
உத்தப்புரம், சிதம்பரம் கோவில் போராட்டங்களைப் பற்றி தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்னும் போர்வை யில் மார்க்சிஸ்ட் கட்சி கலகம் செய்வ தாக தமிழக முதல்வர் கருத்து தெரி வித்திருந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, போராடுவது கலகம் என்றால், அதை நாங்கள் தொடர்வோம்.
Wednesday, August 4, 2010
உமாசங்கர் என்னும் எளிய மனிதருக்கு ஆதரவாக நாம் நிற்கிறோம்
`Karunanidhi family and government harassing me'
27.7.10
CHENNAI: Suspended IAS officer C Umashankar has moved the National Commission for SC/ST in New Delhi, to protect him from the illegal harassment by the Tamil Nadu government, Chief Minister M Karunanidhi's family and the powerful Maran brothers, who are closely related to the CM.
In his complaint against the State government, Umashankar, who was suspended last week while holding the post of Commssioner, Small Savings, alleged that he was subjected to frequent transfers as he was honest and sincere in his duties and worked bearing in mind the public interest.
He said the TN government was free to institute any disciplinary proceedings against him in accordance with the provisions of the All India Service Act, Public Servant Enquiries Act, the Prevention of Corruption Act and the Code of Criminal Procedure. But the government was not competent to conduct any enquiry against him on the allegation that he had produced a false community certificate. The CM was insisting on the police to register an FIR against him. "The State government, headed by the present CM, is intolerant and vindictive against me because I recommended penal action against the Maran brothers and made public the scam in ETL Infrastructure, where the hand of MK Alagiri, (CM's son) and a central minister of the DMK is involved. Thus, the State power is being misused against me,'' Umashankar contended in his complaint.
He also urged the Commission to ensure that enquiry, if any, regarding his caste certificate was conducted by the Central Vigilance Commission or the Central Bureau of Investigation or any other central agency not under the control of the TN government. Appropriate action might also be initiated to allow him to work under the central government or any of the agency of the central government not under the control of the TN government, the complaint said and also requested the Commission to ensure proper security to him and his family members through the central security force.
ஐஏஎஸ் அதிகாரி திரு உமாசங்கர் நம் எல்லோருடைய கண் முன்னால் சித்ரவதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்.கருணாநிதி குடும்பம் மற்றும் சன் குழுமம் என்கிற மலைகளை எதிர்த்து நெஞ்சுரத்தோடு போராடும் போராளி உமாசங்கருக்கு நம் எல்லோருடைய தார்மீக ஆதரவும் உண்டு.இன்னும் என்னென்ன வழிகளில் நாம் அவருக்காகப் போராட முடியும் என்று ஆலோசித்துக் களத்தில் இறங்க வேண்டும்.
The Family