Saturday, March 13, 2010

மகளிர் தினமும் இரண்டு கதைகளும்

கதை-1

முதலில் ஒரு நாட்டுப்புற தெய்வத்தின் கதை.

தேனி மாவட்டம் கம்பம் வட்டாரத்தில் கவுண்டர் சாதியினரில் ஒரு பகுதி மக்கள் வணங்கும் தெய்வம் முத்தாலம்மன்.நாட்டுப்புற தெய்வங்கள் எல்லாமே ஒரு காலத்தில் நம்மோடு வாழ்ந்து கொலையாலோ தற்கொலையாலோ இறந்து போன மனிதர்கள்தான்.கொலை/தற்கொலை என்பதால் பெரும்பாலும் அவை பெண் தெய்வங்களாகவே இருக்கின்றன.நல்லதங்காள் துவங்கி இசக்கியம்மன், சீலைக்காரியம்மன் வரை எல்லாமே கொல்லப்பட்டவர்கள்தான்.இந்தக் கம்பத்து முத்தாலம்மனின் கதை என்ன என்று கள ஆய்வில் கிடைத்த கதை சற்று வித்தியாசமான கொலைக் கதையாக இருக்கிறது.

ஒரு 70-80 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் வாழ்ந்த முத்தாலம்மன் என்கிர கவுண்டர் சதியைச் சேர்ந்த பெண் ஒரு பறையர் சாதியைச் சேர்ந்த பையனை காதலித்திருக்கிறாள்.வீட்டாருக்குத் தெரியாமல் இருவரும் ‘ஓடிப்போய்’ வேறு ஊரில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.தகவல் தெரிந்த சாதி கம்பெடுத்துப் போய் அந்தப்பையனை அங்கேயே வெட்டிப்பொலி கொடுத்துவிட்டு முத்தாலம்மனை ஊருக்கு இழுத்து வந்திருக்கிறது.ஊரை குளக்கரையில் கூட்டி ஊர் நடுவே அவளுக்கு மரண தண்டனை விதித்தது சாதி.எல்லோரும் பார்த்திருக்க ஊருக்கு நடுவே அவள் தடியால் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறாள்.அப்போதானே ஊரில் எந்தப் பொண்ணுக்கும் இப்படி ஓடிப்போலாம் என்கிற தைரியம் வராது?

அவள் சாகும் முன் வெறித்துப்பார்த்த பார்வைக்கு அஞ்சி அவளை ஊர் சாமியாகக் கும்பிட்டு வருகிறது. ஆனால் எல்லாச் சாமிகளையும் போல அவளையும் கும்பிட்டால் அவளுடைய காதலை அங்கீகரித்தது போல ஆகி விடுமே. ஆகவே அவளுக்கு சிலை செய்து கோவில் கட்டிக் கும்பிடவில்லை ஊர். திருவிழா அன்று அவளை மண் சிலையாகச் செய்து அதே குளக்கரையில் அம்மண் சிலையை நிறுத்தி எல்லோரும் தடியால் அடித்தே அச்சிலையை உடைத்து நொறுக்கி விடுகிறார்கள்.ஒருநாள் சாமியாக அவள் இப்படி அன்று காதலித்த குற்றத்துக்காக ஆண்டுதோறும் அடிவாங்கி வருகிறாள்.அக்கோவிலில் வழிபாட்டு முறையாக இந்த தடியடி புனிதமாக நடைபெற்றுவருகிறது.

(பத்தாண்டுகளுக்கு முன்னால் மதுரையை மையமாகக்கொண்டு பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் தலைமையில் நாங்கள் நடத்திய பி.ஜி.வி.எஸ். கருத்துக்கூடத்தின் சார்பில் தொகுக்கப்பட்ட கதைகளில் இது ஒன்று.)

கதை -2

மேலே சொன்ன கதையைப்படித்து கிராமத்து முட்டாள் ஜனங்க என்று நம் வாய் கருத்தைச் சொல்லிவிடக்கூடாது.இந்தக் கதையையும் படிப்போம். இந்த மார்ச் 8 அன்று இந்துப் பத்திரிகையில் கடைசிப்பக்கம் வெளியான கதை.

சுஷ்மா திவாரி என்னும் 25 வயதுப் பெண்ணின் கதை அது.

Sushma

அவள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிராமண சாதிப்பெண்.மும்பையில் அவள் குடும்பம் வசிக்கிறது.அவள் கேரளத்தின் ‘கீழ்ச்சாதி’யான ஈழவ சமூகத்தைச் சேர்ந்த பிரபு என்கிற இளைஞனைக் காதலித்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டாள்.ஆத்திரமடைந்த சாதி அவளுடைய அண்ணன் திலிப் திவாரியின் ரூபத்தில் தடியெடுத்து நின்றது.தங்கையின் செயலால் ஆத்திரமடைந்த திலிப் சுஷ்மாவின் வீட்டுக்குச் செல்கிறான்.அங்கே அவள் இல்லை.கர்ப்பிணியான அவள் அப்போது வெளியே போயிருந்தாள்.அவளுடைய அன்புக்கணவன் பிரபு,பிரபுவின் அப்பா மற்றும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை அந்த இடத்திலேயே கொன்றுபோட்டுவிட்டு திலிப் வெளியேறினான் தன் கொலையாளிச் சகாக்களுடன்.

வெளியே போனதால் சுஷ்மா தப்பினாள்.அவள் அண்ணனை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்திப்போராடி மும்பை கோர்ட்டிலும் பின்னர் மராட்டிய உயர்நீதிமன்றத்திலும் போராடி அண்ணனுக்குத் தூக்குத் தண்டனை பெற்றுத்தருகிறாள்.

அவன் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறான்.சுப்ரீம் கோர்ட் தூக்குத் தண்டனை தேவையில்லை 25 ஆண்டு சிரை மட்டும் போதும் என்று கீழ்க்கண்டவாறு தீர்ப்பளிக்கிறது:

The Supreme Court, explaining its decision to revoke the death sentence, said: “It is a common experience that when the younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair.”

It added: “If he became the victim of his wrong but genuine caste considerations, it would not justify the death sentence... The vicious grip of the caste, community, religion, though totally unjustified, is a stark reality “

சாதிய சமூகத்தில் பாவம் அண்ணன்காரன் என்ன ச்ய்வான்.ஆத்திரப்படத்தானே வேண்டியிருக்கிறது என்கிர தொனியிலான இத்தீர்ப்பு சாதி மீறிய காதலுக்கு எதிரான தீர்ப்பாக அமைந்துவிட்டது.சுஷ்மா மனம் தளர்ந்துவிடவில்லை.இன்னும் போராடிக்கொண்டிருக்கிறாள்.இது 1989ஆம் ஆண்டின் வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்துக்கே விரோதமான தீர்ப்பாகும். சமீபத்தில் பெங்களூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் நடத்திய இளம்பெண்கள் மாநாட்டில் பங்கேற்றுபேசிய அவர் நான் எனக்காகவும் என் 5 வயது மகள் த்ரிஷ்னாவுக்காகவும் மட்டும் போராடவில்லை.வரும் வரும் தலைமுறைக்காகப் போராடுகிறேன் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.அவர் வெற்றி பெற வேண்டும்.

கம்பத்து கட்டப் பஞ்சாயத்துத்தான் டெல்லியிலும் எதிரொலிக்கிறது. சட்டம் படித்துத்தான் நீதிபதிகளெல்லாம் கோர்ட்டுக்கு வருகிறார்களா?என்கிர கேள்வி நமக்கு எழுகிறது.இது உச்சநீதிமன்றம் அல்ல.உச்சிக்குடுமி நீதிமன்றம் என்று அன்று தந்தை பெரியார் சொன்னது 2010 லாவது பொய்யாக வேண்டாமா?

கண்களில் நீர்கசிந்தாலும் மனதை இறுக்கிக் கொண்டு போராடும் நம் அன்புமகள் சுஷ்மாவுடன் நம் எல்லோருடைய மனமும் துணை நிற்கிறது.

14 comments:

Unknown said...

தோழா...!மனதை கனக்க வைக்கும் ஒரு கொடூர நிகழ்வை பதிவு செய்துள்ளீர்கள். சுஷ்மாவின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்றுதான்.

ஆனால் அவள் விரும்புவது என்ன? தன் கணவனை கொலை செய்த குற்றத்திற்காக அவள் நீதியாய் கேட்பது தன் அண்ணனின் உயிரை. கொலைகளுக்கு மற்றொரு கொலை தான் தீர்வா? மரணம் என்பது தண்டனையா?

உச்சநீதிமன்றம் திலீபின் மரண தண்டனையை 25 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றி அமைத்துள்ளதே தவிற அவனை நிரபராதி என்றோ அல்லது அவனது செயலை ஞாயப்படுத்தியோ தீர்பெழுதவில்லை.

மேலும் தனது தீர்பிற்கு வலுசேர்க்கும் விதமாக உச்சநீதிமன்றம் சொல்லும் விளக்கத்தை நாம் மேலோட்டமாக அணுக முடியாது.

ஏனென்றால் தீலிப்பென்ற தனிமனித வன்மத்தின் விளைவுகள் மட்டுமல்ல அந்த படுகொலைகள். அது அந்த இளைஞன் மேல் அவனது சமூக அமைப்பு சாதியத்தின் பால் அவனுக்குள் விதைத்த கருத்தாக்கத்தின் விளைவே அது.

நீதி என்பது எய்தவனை விட்டுவிட்டு அம்பின் மேல் மட்டும் வன்மம் கொள்ளும் சராசரி மனிதனை போல் செயல்படாதமைக்கு நியாயப்படி நாம் ஆறுதல் பெருமூச்சு தான் விடவேண்டும்.

நான் இந்த நேரத்தில் உங்களிடம் கேட்க விரும்புவதெல்லாம் சுஷ்மாவின் விருப்பத்திற்கேற்ப அவளது அண்ணனுக்கு ”மரண தண்டனை” வழங்கப்பட்டுவிட்டால் இனிமேல் இது போன்ற ’திலீப்களை’ இந்த சாதியசமூகங்கள் உருவாக்காமல் விட்டுவிடுமா? என்பதே.

முற்போக்கு சிந்தனை கொண்ட உங்களை போன்றவர்கள் கூட சாதியத்தின் வேர்களை விட்டுவிட்டு மரங்களை வெட்ட துணை நிற்கலாமா?

Deepa said...

அங்கிள் இன்று எழுதிய இடுகையின் தலைப்புத் தான் நினைவுக்கு வருகிறது.
வெட்கமும் வேதனையும் ஆத்திரமும் ஒருங்கே வருகிறது. கையாலாகாத நிலையை நினைத்து இன்னும் அதிகமாக.

Anonymous said...

“It is a common experience that when the younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair.” It added: “If he became the victim of his wrong but genuine caste considerations, it would not justify the death sentence... The vicious grip of the caste, community, religion, though totally unjustified, is a stark reality “ This kind of judgments are not uncommon from Supreme Court. Once it has released (gang)rapists saying that victim woman was a women of easy virtue.WE HAVE TO BE VIGILANT AGAINST ALL JUDGMENTS AND EXPOSE THEM.

Anonymous said...

சாதிவெறி ஒரு நூறு ஆண்டிற்குப் பின்னரும் நமது பொதுப் புத்தியில் எக்கைப் போல உறைந்து கிடக்கிறது என்பது மீண்டும் நிரூபணம் ஆகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் படித்த, பண்பட்ட மூளைகளிலும் (?) அதே உக்கிரத்துடன் உறைந்து கிடப்பதுதான் கவலைக்குரியது.. உச்ச நீதிமன்றமா ? உச்சிக்குடுமி நீதிமன்றமா? எவ்வளவு பொருத்தமான செருப்பாலடிக்கும் கேள்விகள்.

காமராஜ் said...

தோழர் இதுதான் பிரச்சினை.
மிக நுட்பமானது இந்தக் கொடூரம்.
இயல்பான அன்றாடங்களாய்க்கடந்து போக அனுமதிப்பது
அதைவிடக் கொடூரம்.அம்பலப்படுத்துவோம் தொடர்ந்து.
இந்தச்செய்தி வலைப்பதிவுகளில் மூன்றாவது பதிவாக இடம்பெறுகிறது.

யாநிலாவின் தந்தை said...

சிறப்பான பதிவு இது.
இதுபோன்ற நேரங்களில் ஊடகமாய் நாம் மாற வேண்டிய கட்டாயமிருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

நான் மணி

ஆண்டோ ... எப்படி உங்களால் இப்படி சிந்திக்க முடிகிறது. தான் வழங்கிய அநீதிக்கு சமூக அழுத்தம்தான் காரணம் என்று சமூகத்தின் மேல் பொறுப்பை சுமத்தி தனது பொறுப்பை தட்டிக்கழித்திருக்கிறது நீதிமன்றம். சமூகம்தான் காரணம் என்றால் அந்த சமூகம் இதற்கு எதிர்ப்பு எதையும் பதிவு செய்யாமல் இருப்பதைத்தான் அவர்கள் சுட்டிக் காண்பிக்கிறார்கள். மிகச்சரியாக சொல்வது என்றால் மக்கள் திரள் இதற்கு மௌனமாக இருப்பதன் மூலம் ஆதரவு தருவதாக அவர்கள் கருதுகிறார்கள். உண்மையும் அதுதானே. இந்த அநீதியை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று இந்த அதிகார வர்க்கத்தின் சாதீய சார்பை அம்பலப்படுத்த கம்யூனிஸ்டுகளுக்கு அரிய வாய்ப்பு ... ஆனால் அதனை வலுவாக இதுவரை யாரும் செய்யவில்லை. ஆம் முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொண்டே அமைதி காக்கும் கோழைகளான நம்மை பார்த்துதான் நீதிபதிகள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.. நீண்ட காலம் என்ஜி ஓ க்களோடு இணைந்து பணியாற்றுவது தவறில்லை என நினைக்கும் கட்சிக்கு இது போன்ற பிரச்சினை பிரீயாரிட்டியில் வரத்தான் செய்யும்.

ஆம். மரணதண்டனை யை எதிர்ப்பது முதன்மையானதா அல்லது சுஷ்மா திவாரிக்கு நீதி வழங்குவது முதன்மையானதா என்றால் நமக்கு பரிச்சயமான விசயத்திற்கான நீதியை நாம் முன்னிலைப் படுத்துகிறோம். மரணதண்டனைக்கு குறைவான ஒன்றை அளிப்பதன் மூலம் நீங்கள் மனு நீதியை நிலை நாட்டுகிறீர்கள் என்பது முதன்மையானது. பாப்பான் கொன்றால் 25 ஆண்டு, பறையன் கொன்றால் மரண தண்டனை.. இதற்கு எடுத்துக்காட்டுகள் நிறைய உள்ளன• பல முற்போக்களார்கள் அந்த மரண தண்டனை வேண்டும் என்றார்கள்.

அடுத்து இது சரி என்றால், மேல வளவு முருகேசனை கொன்ற தேவர் சாதி வெறியர்களுக்கு சமூக அழுத்தம்தான் காரணம் என்று சொல்லி அவர்களை விடுதலை செய்யலாம். கீழவெண்மணி கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு விடுதலை அளித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி, ஒரு பெண்ணை கவுன்சிலாராக வைத்துக் கொள்ள நிலவும் ஆணாதிக்க சமூகம் ஏளனம் செய்த்தால் சில ரவுடிகள் லீலாவதியை கொன்றதும் சரி, இப்படி எல்லாவற்றையும் நியாயப்படுத்தலாம் மதவெறிக்கு எதிராக ஊழலுடன் கைகோர்ப்பதைப் போல• ஆனால் நியாயப்படுத்துவது என்ற ஒன்றே நியாயமற்ற ஒன்றை சரி என நிரூபுவதற்கு படித்தவன் செய்யும் புறம்பான் வேலைதான். சரி என்பது ம் உண்மை என்பதும் ஒன்றுதான். பலவாக இருக்க முடியாது. அப்படி எனில் அது உண்மையை போன்ற ஒன்றே தவிர ஒருக்காலும் உண்மையாக முடியாது.

நீதிமன்றங்களின் யோக்கியதையை ம்க்கள் மத்தியில் அம்பலப்படுத்த அதன் வர்க்க சாதிய சார்பை அம்பலப்படுத்த கிடைத்த அரிய வாய்ப்பு. பார்க்கலாம்.

Unknown said...

அன்பிற்கினிய ’அனானி’ மணி அவர்களே!

நான் உங்களது ரௌத்திரத்தை மதிக்கிறேன். நான் ஒன்றும் இந்த சமூகத்தில் புரையோடி போயிருக்கும் சாதிய கட்டமைப்பிற்கு ஆதரவாளன் அல்ல.

சாதிகளின் பெயரை சொல்லி நடக்கும் கொலைகளுக்கு கொலைகளை மட்டுமே பதிலடியாக கொடுத்து விட்டால் இந்த சமூகத்தில் இருக்கும் சாதிய கசடுகள் அழிந்து போய்விடுமா?

சாதியம் என்பது பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் மிக நுட்பமாக சுயாஆதாயத்திற்காக நமது கலாச்சாரத்தில் கலந்து விடப்பட்ட ஒன்று. அதை பலநூறு ஆண்டுகளாய் பொதிமாடுகளை போல் நமது மூதாதையர்கள் சுமந்து நம்மிடம் கொடுத்து விட்டு போயிருக்கிறார்கள்...நாமும் அதை ஒரு விலைமதிப்பற்ற சொத்தை போல பாவித்து தொடர்கிறோம்.

அதை நமது அடுத்த தலைமுறைக்குயேனும் கொடுக்காமல் தூக்கியெறிய திராணி அற்றவர்களாகவே இருக்கிறோம்.

ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு வீதியில் இறங்கி யாரை எதிர்த்து என்ன போராட போகிறோம்?

ஊர்கூட்டி தேர் இழுக்க தயாராய் இருக்கும் நாம் ஏன் தனிமனித மாற்றங்களை கொண்டு வருவதில் தயக்கங்கள் கொள்கிறோம்?

Dhanaraj said...

The insensitive judgment of The Supreme Court tells an unnoticed but bitter truth: Muthaalammans will still be created.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

இது உச்சநீதிமன்றம் அல்ல.உச்சிக்குடுமி நீதிமன்றம் என்று அன்று தந்தை பெரியார் சொன்னது 2010 லாவது பொய்யாக வேண்டாமா
Thanks for making your anti-brahmin attitude so open and so obvious.What did the same Periyar do when 48 dalits were killed brutally in Keezh Venmani.Have you read his statement on that.He asked for a ban on the communist parties. Yet you will quote him and cite him without any shame because you hate brahmins.If this is something known as Marxism then I am an anti-Marxist forever.
The judgment does not justify such killings.It has analysed the motives for the crime.It has discussed why he has done that horrible crime although there is no enemity between him and Prabhu before his sister marrying Prabhu.
He is deeply influenced by casteist thinking.That is not an excuse before law but when deciding on the quantum of punishment other factors are taken into account.One side would appeal for less harsher punishment and other side will demand the harshest punishment possible.
Why dont you read the judgment
in full.Now there is a view that instead of capital punishment,
life term punishment with no parloe
can be given in cases where capital punishment can be given.
This punishment is longer than 14 years and no pre-mature release is possible.In this case also the punishment is for more than 14 years.Judicial reasoning has to be understood and the judges record views and motives behind the crimes. These are like statements of characters in stories and should not be read as views of the author.Unfortunately you are so biased that you cannot even understand this. .

ச.தமிழ்ச்செல்வன் said...

dear Ravi Srinivas,

we shd seriously discuss what u have said.reactions are welcome. pl understand that uchikkudumi does not mean brahmin but told as a symbol of brahminism.Brahmanism does not belong to Brahmins only.even a dalith or BC live accepting brahmanism as their lifestyle.we shd come out of our castes first.we are democratic people of a new generation who stand united against brahminism that is caste system of India you be a dalit or a brahmin.pl understand in that sense only.Today what we need is the correct amalgamation of Marxism ,Periyarism and Ambedkarism, if to say in a popular term.I know u also know all these things.

Anonymous said...

ஆண்டோ

ம‌ரணத்திற்கு மரணம் தந்தால் தவறு திருந்துமா என்ற கேள்வியில் நியாயம் இருக்கிறது. அப்படி கூட தராமல் இருந்தால் திருந்துவதற்கான வாய்ப்பு எதாவது உள்ளதா.. மனித சமூகம் பெருந்தன்மைகளின் கீழ் தன்னை இதுகாறும் திருத்திக் கொண்டதாக தாங்கள் கருதுகிறீர்கள். அது தவறான பார்வை. மரணம் என்ற செயலை விட முதன்மையானது சாதியால் ஒருவனை உயிரோடு வைத்துக் கொண்டே இழிவுபடுத்துவது. இதோ தீர்ப்பைக் கூட சிலர் நியாயப்படுத்த வந்து விட்டார்கள். ஆம் இனி உயர்சாதிக்காரன் ஒருவன் கொன்றால் கூட நீதிமன்றம் அவனுக்கு தூக்குத் தண்டனை தராது. ஆனால் சிறுமியை வல்லுறவு செய்து கொன்ற ஏழைத் தொழிலாளிக்கு மரண தண்டனை வழங்க சொல்லும் மீடியா இதைத்தானே கடந்த ஆண்டு பார்த்தோம்.

இப்போது நான் என்னுடன் வேலை பார்க்கும் பாப்பாத்தி ஒருத்தியை காதலிக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இருவரும் சேர்ந்து முடிவு செய்து அதனடிப்படையில் அவளது வீட்டுக்கு திருமணம் பேசி முடிக்க செல்கிறேன். அந்த இடத்தில் அவளது பெற்றோர் மற்றும் அண்ணன்கள் என்னை எனது சாதியின் பெயரால் அவமதித்து திட்டி அனுப்புகின்றனர். அதற்கு கோப்ப்பட்டு நான் அரிவாள் எடுத்து அவர்களை வெட்டிக் கொன்றால் அதற்கு இரண்டாயிரமாண்டு சுமந்த அவமானத்தின் கோபம்தான் காரணம் என்று இதே நீதிமன்றம் என்னை மன்னிக்குமா... 25 ஆண்டு மட்டும்தான் தரும் என்று கருதுகிறீர்களா... இது மேல்சாதி கார்ர்களுக்கு ஆதவாக உள்ளது. இப்போது தரப்படும் தண்டனை குறைப்பு என்பது இனி வரும் சாதி ஆதிக்க வாதிகளுக்கு தரப்பட்ட அங்கீகாரம்தான் அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை

i read the judgement. it is too much biased with the justice of manu...

-mani

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Dear Tamilselvan
thanks.my quick response:
1)Periyar was anti-brahmin per se.
2)After 1952 Periyar never recognised the communists as forces for social change.He expressed his contempt for trade unions and communist parties.Post Keezhvenmani in his statement he wanted a ban on them.Do you still think that Periyar/Periyarism is compatible with marxism.
I dont have any faith on such cocktails (Periyarism+Ambedkarism+Marxism) because Periyarism has some elements that would never be compatible with Marxism.
Casteism and caste based discrimination is a serious issue but Periyarism is no solution for that.Periyar was not even a liberal. He issues a statement in early 50s calling the nuisance of malayalees is becoming a big nuisance.Even in his last public speech he differentiated between us and them (brahmins).There was no place for them in the homeland he spoke about.
He used the word dravidian and explained that as tamilian would include brahmins he chose the term dravidian.If you need a proof see the first screen of periyardk.org

Regarding awarding life sentence instead of capital punishment see the blog of prabhu rajadurai.I have written about this and he has explained in detail what this means.

hariharan said...

அந்த நாட்டுப்புற தெய்வத்தின் கதை மூலம் நாம் (ஒவ்வொரு சாதிக்கும் ஏன் குடும்ப வகையறாக்களுக்கும்) வண்ங்கும் குலதெய்வத்தின் (பெரும்பாலும் பெண் தெய்வங்கள் தான்) வரலாறு காண ஆவல் ஏற்படுகிறது.

“Thanks for making your anti-brahmin attitude so open and so obvious.What did the same Periyar do when 48 dalits were killed brutally in Keezh Venmani.Have you read his statement on that.He asked for a ban on the communist parties. Yet you will quote him and cite him without any shame because you hate brahmins.If this is something known as Marxism then I am an anti-Marxist forever.”

பெரியார் பார்ப்பனீயத்தை எதிர்க்கிறேன் என்று ஒட்டு மொத்த பார்ப்பனர்க்ளையும் வெறுக்கிறார். அது இன்றும் பிராமண்ர்கள் திக வில் இணைய விரும்பினால் கூட சேர்க்கமாட்டார்கள்.

தோழர் கூறுவது போல பார்ப்பனீயம் என்பது ஒரு “சிந்தனை” இன்று பார்ப்பண்ர்களை விட பிற்படுத்தப்பட்ட மக்கள் தான் தீண்டாமையை தலித் மக்கள் மீது பின்பற்றுகிறார்கள்.

Bhramanism is different from bhramins.