Wednesday, March 3, 2010

எங்கள் தோழர் உ.ரா.வரதராஜன்-2

images

 

 

எங்கள் தோழர் உ.ரா.வரதராஜன் என்கிற என் முந்தைய பதிவிற்கு வந்த எதிர்வினைகள் மற்றும் அதற்குப்பிறகு சில பத்திரிகைகளில் வந்த கட்டுரைகள், பெண்கள் சந்திப்பு என்கிற அமைப்பினர் இது தொடர்பாக நேற்றுச் சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு போன்றவற்றை பார்த்த பிறகு மீண்டும் இதுபற்றி எழுதத் தோன்றியது.

கட்சிக்கு வக்காலத்து வாங்குவதாகவும் கட்சியின் தவறை நான் மூடி மறைப்பதாகவும் You too tamilselvan என்றும் சில தோழர்கள் எழுதியுள்ளனர்.சரியாகவும் தெளிவாகவும் சொல்லியிருப்பதாகவும் சில தோழர்கள் எழுதியிருக்கிறார்கள்.எதிர்வினை ஆற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி.

நடந்திருப்பது ஒரு மகத்தான மனிதரின் தற்கொலை.ஆகவே இவ்வளவு கோபங்களும் வருத்தங்களும் ஆத்திரங்களும் எழுவது இயற்கை.அவை அத்தனையயும் கட்சியை நோக்கி மட்டுமே திருப்புவதில்தான் எனக்கு உடன்பாடு இல்லை.உண்மையில் அவரது தற்கொலை எனக்கும் கட்சியில் பல தோழர்களுக்கும் இரண்டாவது அதிர்ச்சிதான்.முதல் அதிர்ச்சி அவருக்கு நாங்கள் அறியாத இன்னொரு வாழ்க்கை இருப்பது பற்றி அறிய நேர்ந்தபோதுதான்.( You too com WRV)அப்படி ஒன்றும் அவருக்கு இருக்கக்கூடாது என்று வாதிடுகிற முட்டாள்கள் அல்ல நாங்கள். அது அவருடைய சொந்த விஷயம்.ஆனால் அவருடைய துணைவியாருக்கு அதில் ஆட்சேபம் இருக்கும்போது அது சமூக விஷயமாகிவிடுகிறது அல்லவா? டைவர்ஸ் கேட்கிற அளவுக்கு அவர் மனம் வெறுத்ததை சும்மா சாதாரணமாக எடுத்துக்கொள்ளச் சொல்வது சரியான பார்வையா? நேரில் அழைப்பது/போனில் அழைப்பது/எஸ்.எம்.எஸ் மூலம் அழைப்பது எதுவானாலும் அது பாலியல் துன்புறுத்தல் இல்லையா? அது பற்றி சம்பந்தப்பட்ட பெண் புகார் தரவில்லை என்று அவருடைய வாதங்கள் அடங்கிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் தோழர் உ.ரா.வ அவர்களே பின்பற்றிய வழக்கமான கட்சி விசாரணைகளில் கடைப்பிடிக்கப்படும் எல்லா வழிமுறைகளிலும் விசாரித்து உறுதியான பின்னரே அவரது வாதங்களையும் கேட்ட பின்னரே அவர்மீது நடவடிக்கைக்கு (நாங்கள் யாரையும் தண்டிப்பதில்லை) முடிவு எடுத்தோம் என்று தோழர் பிரகாஷ் காரத் அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கு மேல் எனக்குச் சொல்ல இதில் ஒன்றுமில்லை.ஆதாரங்களை விடவும் கம்யூனிஸ்ட் வாழ்க்கையின் தார்மீக உணர்வுகளைத்தான் நாம் முக்கியமாகக் கருத வேண்டும்.அவரது(உ.ரா.வ) பதில் மனுவில் உள்ள வார்த்தைகள் மட்டுமே போதும் என்று நினைப்பவர்கள் கட்சியைத் தாக்கத்தான் செய்வார்கள்.அப்பதில் மனு அவரது இறுதி வார்த்தைகள் அல்ல.மத்தியக்குழுக் கூட்டத்தில் அவர் பேசியதே இறுதி வார்த்தைகள்.ஒரு கம்யூனிஸ்ட்டாக மத்தியக்குழு நடவடிக்கையை ஏற்கிறேன்..ஆனால் கண்ட்ரோல் கமிசனுக்கு மேல் முறையீடு செய்யும் எனது உரிமையைப் பயன்படுத்துவேன் என்பதுதான் அவரது இறுதி வார்த்தைகள்.

மறைந்த எங்கள் தலைவரின் புகழுக்குக் குந்தகம் வரக்கூடாது என்கிற உணர்வோடும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் அவரது குடும்பத்தினர் உணர்வுகளைக் கணக்கில் கொண்டும் கட்சி ஒரு அளவுக்கு மேல் விளக்கிப் பேச முடியா

மார்க்சிஸ்ட் கட்சிக்குள் இரண்டாவது நெறிப்படுத்தும் இயக்கம் நடந்துகொண்டிருக்கிறது. அது குறித்தும் முதலாளித்துவ ஊடகங்களில் சிலர் நக்கலாக எழுதியிருக்கிறார்கள். தனிநபர்களைத் தாக்குவதற்கு நெறிப்படுத்தும் இயக்கத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு கட்டுரையாளர் இலவச ஆலோசனையும் வழங்கியிருக்கிறார்.கம்யூனிஸ்ட் கட்சின்னா என்னான்னே தெரியாமல் கட்சியைப் பற்றி 700 பக்கத்துக்கு ஜெயமோகன் ஒரு நாவல் எழுதியது போலத்தான் இதுவும்.சீனக்கம்யூனிஸ்ட் கட்சி கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 12 முறை கட்சிக்குள் நெறிப்படுத்தும் இயக்கத்தை நடத்தியுள்ளது.உலகமயத்தின் தாக்குதலால அரிமானத்துக்கு ஆளாகிவரும் தனிமனித சுதந்திரம்,சுயமரியாதை,சமூக மதிப்பீடுகள் , சீரழிந்து வரும் ஆண்-பெண் உறவு,ஒரு பட்டனைத்தட்டினால் வீட்டுக்குள் வந்து விழுகிற ஆபாசங்கள் என இவை நம் எல்லோரையும் தாக்கிக் கொண்டிருக்கின்றன.ஏற்கனவே பெண் குறித்த ஜனநாயகமற்ற ஆணாதிக்கச் சிந்தனை ஊதிப்பெருத்துள்ள நம் இந்திய சமூகத்தில் உலகமயம் பெண்கள் மீதான வன்முறைக்கு மேலும் புதிய புதிய வடிவங்களையும் வண்ணங்களையும் சேர்த்து வருகிறது.மக்களை-உழைப்பாளிகளையும் கூட –அது வெறும் கன்ஸ்யூமர்களாக ஆக்கி வருகிறது.மார்க்சியம் என்கிற அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கண்ணோட்டமும் கொண்டுதான் இந்த முதலாளித்துவ /நிலப்பிரபுத்துவ/உலகமயக் கருத்தோட்டங்களிலிருந்து ஒருவர் விடுபட முடியும்.இவற்றை கம்யூனிஸ்ட்டுகள் அந்நிய வர்க்கக் கருத்துக்கள் என்று குறிப்பிடுகிறோம்.பெண்ணை வெறும் உடம்பாகவும் போகப்பொருளாகவும் ஆணுக்கு அடிமையாகவும் பார்ப்பது அந்நிய வர்க்கக் கருத்து என்கிறோம்.நமக்கான உழைக்கும் வர்க்கக் கருத்தல்ல அது என்கிறோம்.அந்நிய வர்க்கக் கருத்துக்கள் நம் குடும்பங்கள்,பள்ளி கல்லூரிகள்,மீடியாக்கள்,கலை இலக்கியங்கள்,சமயங்கள் எனப் பல்வேறு பண்பாட்டு நிறுவனங்களின் மூலம் நம் மனங்களில் திணிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் மார்க்சியத் தத்துவத்தின் பலம் கொண்டு எதிகொள்ளவே கம்யூனிஸ்ட் கட்சிகள் நெறிப்படுத்தும் இயக்கங்களைத் தொடர்ந்து நடத்துகின்றன.

காலமெல்லாம் மார்க்சியவழியில் நின்ற ஒரு தலைவரையே அந்நிய வர்க்கக் கருத்தாக்கத்திடம் நாங்கள் இழந்து விட்டதாகவே நான் உணர்கிறேன்.எனக்குள்ளும் பல அந்நிய வர்க்கக் கருத்துக்கள் ஊடுருவியிருக்கின்றன.அவற்றுக்கெதிராகத் தொடர்ந்து எனக்குள் போராடி வருகிறேன். ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் அப்படித்தான்.அந்த அகப்போராட்டம் நம் வர்க்கப்போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும்.பலகாலம் சரியாக வாழ்ந்தாலும் சில கணங்களில் நாம் தோற்றுப்போகும் வாய்ப்பு முன்னெப்போதையும் விட இப்போது அதிகரித்துள்ளது.

ஆண்-பெண் உறவு குறித்து எங்களுக்குப் பாடம் எடுக்க சில ட்யூஷன் வாத்தியார்கள் கிளம்பி இருக்கிறார்கள்.நன்று.யாரிடமிருந்தும் கற்றுக்கொளவதற்கு எனக்கு எப்போதும் தயக்கமிருந்ததில்லை.சதா குடும்ப வாழ்விலிருந்து பிரிந்து ( அந்த மன அழுத்தம் ஒருபுறம் இருந்து கொண்டே இருக்க ) பொது வீதிகளில் மக்களுக்கான இயக்கங்களில் கிடக்கும் எம் கட்சித்தோழர்களை விடக் குடும்பத்தைப் பற்றி வேறு யாருக்கு அதிகம் தெரியும்?

பூர்ஷ்வாக்கட்சியினரும் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தபோதிலும் அவர்கள் அனுபவிக்கும் சொத்து சுகங்கள் எங்கள் தோழர்கள் அறியாதவை. விரும்பாதவை. வாழ்வை வறுமைக்குத் தின்னக்கொடுத்தாலும் கருத்தோட்டத்திலும் கண்ணோட்டத்திலும் மக்களுக்காக உழைப்பதிலும் பெரும் செல்வந்தர்களாக வாழும் எங்கள் கட்சியின் தோழர்கள் இச்சமூகத்தின் மகத்தான சொத்துக்களாவர்-அதை இச்சமூகம் அறிந்துகொள்ளாத போதிலும்கூட.குடும்பத்தில் இணக்கத்தை உருவாக்கும் போராட்டத்தையும் வறுமையில் குடும்பம் வாடிவிடாமலிருப்பதற்கான போராட்டத்தையும் நடத்திக்கொண்டேதான் எம் தோழர்கள் கட்சிப்பணியாற்றி வருகிறார்கள். பல குடும்பங்களில் இணக்கம் வந்து விடுவதில்லை.அந்த சோகத்தையும் சுமந்துகொண்டுதான் நாங்கள் பணியாற்றுகிறோம்.தோழர் உ.ரா.வ. அவர்களின் மரணத்தை முன் வைத்து இதுபோன்ற விஷயங்கள் பொதுத் தளத்தில் விவாதிக்கப்பட்ட்டால் அதை வரவேற்கலாம்.அதில் பங்கேற்கவும் செய்யலாம்.எல்லாவற்றையும் எம்மை அவதூறு செய்யவே பயன்படுத்தும்போது ஒவ்வொருவரையும் சந்தேகத்தோடே பார்க்க வேண்டியிருக்கிறது.பாலியல் உறவுக்கான சுதந்திரமான தேர்வுக்கான உரிமை பற்றியெல்லாம் சில பெண்ணிய வாதிகள் இப்போது எம்மை நோக்கிப் பேசுகிறார்கள்.ஒரு கோப்பைத் தேநீர்த் தத்துவமெல்லாம் தோழர் லெனின் காலத்திலேயே பேசப்பட்டு நிராகரிக்கப்பட்ட்டதை நாம் நினைத்துப்பார்க்கிறோம்.எந்த சமூகத்தில் நாம் வேலை செய்துகொண்டிருக்கிறோம் என்கிற சுய பிரக்ஞையோடு நாம் பேச வேண்டியிருக்கிறது.

வாழ்வாரை வாழ்த்துகிற சமூகம் இது. நாலு பொண்டாட்டி வைத்துக்கொண்டு கோடி கோடி சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகளை பொன்னே மணியே என்று வாழ்த்துவதும் சொந்தக் கட்சிக்காரர்களை ஈவிரக்கமின்றிப் படுகொலை புரிந்தபோதும் மனித உரிமை பேசாமல் மௌனமாக இருப்பதும் ஏழை எளிய மக்களுக்காகப் போராடும் எமது இயக்கத்தை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் போட்டுத் தாக்குவதும்தான் எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

அணுசக்தி ஒப்பந்த எதிர்ப்பு,தனியார் மய எதிர்ப்பு போன்ற பல போராட்டங்களினால் உலக சக்கரவர்த்தி அமெரிக்காவும்,விலைவாசி உயர்வுக்கெதிராகவும் ,பொதுத்துறைகளை ரேட்டுப் போட்டு விற்கும் மத்திய அரசின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதாலும் இந்திய ஆளும் வர்க்கமும் இந்திய இடதுசாரிகளின் மீது கோபமாக இருக்கிறார்கள்.எல்லா நன்மைகளையும் தமிழர்களுக்குச் செய்து முடித்துவிட்ட சாதனைக்களைப்பில் இருக்கும் தமிழக ஆட்சியின் தலைவருக்கு வாரம் ஒரு விருது வழங்கும் விழா தேவையாக இருக்க மார்க்சிஸ்ட்டுகள் குடிமனைப்பட்டா,கோவில் நுழைவுப்போராட்டம்,அருந்ததியர் வாழ்வுரிமை என்று எப்போதும் அரசு செய்யாததையே சொல்லிக்காட்டி அபசுரம் பாடிக்கொண்டிருக்கிரார்கள்..ஆகவே தமிழக மக்கள் உங்கள் மீது காரித்துப்புவார்கள் என்று தலைவர் காட்டமாகிக் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்.இம்மூன்று ஆளும் சக்திகளின் ஊதுகுழல்களாக செயல்படும் ஊடகத்துறையின் ஒரு பகுதியினர் இடதுசாரிகளைத் தாக்கிட ஒரு வாய்ப்பாக இத்துயர்மிகு தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

எத்தனையோ இடர்களைத் தாண்டி முன்னேறி வரும் நாங்கள் இதையும் தாண்டி முன்னேறுவோம்.ஒன்றுபட்டு இச்சவால்களை முறியடிப்போம்.

(பி.கு. கட்சியில் பதவி கிடைக்கும் என்பதற்காக நான் இப்பதிவுகளை எழுதியிருப்பதாக ஒருவர் பெயர் இல்லாமல் பினாமியாக ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.அந்த ஆங்கில மொழியை வைத்து அவர் யாராக இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது.இவ்வளவு குரூரமாகவா எழுதுவது? கட்சி உறுப்பினர் என்கிற ஒன்றைவிட உயர்ந்த பதவி எங்கள் கட்சியில் வேறு எதுவும் இல்லை தோழரே.பதவி என்பதும் அதிகாரம் செலுத்துவது என்பதும் கட்சிக்குள் ஒரு வேலைப்பிரிவினை மட்டுமே என்று எங்கள் தோழர் உ.ரா.வ அவர்கள் எனக்குச் சொன்னதையே உங்களுக்கும் திருப்பிச் சொல்கிறேன்.)

20 comments:

சவுக்கு said...

உங்கள் வாதங்கள் பலகீனமாகவே இருக்கிறது தோழர். சபைக்காக இந்த வாதங்களை நீங்கள் சொல்லலாம். ஆனால், கட்சிக்குள் விவாதம் நடத்துகையில், நீங்கள் உண்மையை பேசுங்கள். சிபிஎம் காப்பாற்றப் படவேண்டும் என்பதே பலரின் அவா. நெருப்புக் கோழியாய் தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொள்வதால், எந்தப் பயனும் விளையப் போவதில்லை தோழரே.

Anonymous said...

தமிழ் செல்வன் ஐய்யா,
உங்கள் தியாகங்களை யாரும் குறை சொல்லவில்லை.
ஒரு ஆண் ஒரு பெண்ணை நேசிப்பதில் என்ன நிலபிரபுத்துவத்தை கண்டுவிட்டீர்கள் என்று புரியவில்லை. ஒரு பெண்ணை கவர நினைப்பதில் என்ன ஆணாதிக்கம் இருக்கு? கட்சியில சம்மதம் வாங்கித்தான் காதலிக்கணுமா?
கேரளாவில் இருக்கும் மிகபெரும் நிலபிரபு பினராயி விஜயனை உங்கள் உங்கள் கட்சி இன்னும் அதே இடத்தில தானே வைத்திருக்கிறது. பெண்களை அடிமையாக்க நினைக்கும் மதானி கட்சி உங்களுக்கு உழைக்கு மக்கள்கட்சியோ?
தவறை உங்கள் மேல் வைத்துக்கொண்டு, மற்றவர்கள் டியூஷன் எடுக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தாதீர்கள்.

ஜெயந்தி said...

எல்லாவற்றையும் படித்து என்போல் குழம்பியுள்ள அனைவருக்கும் தெளிவை ஏற்படுத்தும் பதிவு.

Anonymous said...

"அந்த காகிதம் எரிக்கப்பட்டது. அதிலிருந்த வார்த்தைகள் சுதந்திரமாக பறந்தன.” - அகிபா பென் ஜோசப்.

”ஆண்-பெண் உறவு குறித்து எங்களுக்குப் பாடம் எடுக்க சில ட்யூஷன் வாத்தியார்கள் கிளம்பி

இருக்கிறார்கள்.நன்று.யாரிடமிருந்தும் கற்றுக்கொள்வதற்கு எனக்கு எப்போதும் தயக்கமிருந்ததில்லை.” - ச.

தமிழ்செல்வன் (03/03/2010).

உங்கள் வார்த்தைகளிலிருந்து நீங்கள் எதையும் கற்றுக்கொள்ள தயாரில்லை என்பதையே மேற்சொன்ன உங்களது வார்த்தை உணர்த்துகிறது.

எல்லாவற்றையும் மதித்த ஒரு உண்மையான தோழனின் மரணம் உங்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. அதனால் உளறுகிறீர்கள்.

மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது - கார்ல் மார்க்ஸ். (இது உங்களுக்கான பாடம் அல்ல. எங்களுக்கானது.)

காலம் எங்களுக்கான பதிலை சொல்லியே தீரும்.

எங்கள் கையிலும் சிகப்புக் கொடியே இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

நன்றி.

Anonymous said...

உங்களைத்தவிர யாரும் இப்படி வந்து பொதுவெளியில் கட்சித்தலைமை செய்த தவறை நியாயப்படுத்தவில்லை. மாநிலக்குழுவில் உள்ள பலர் குற்றவுணர்வோடு எதுவும் பேச இயலாமல் இருப்பதைக்கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் இப்படி அப்பட்டமாக கட்சிக்கு ஆதரவு தெரிவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள் தோழரே?
உங்கள் மேல் அபிமானமும் அன்பும் கொண்ட நண்பர்களையெல்லாம் இழந்துவிட்டு நீங்கள் நின்று திரும்பிப் பார்க்கும்போது வெறும் மாநில செயற்குழு மட்டுமிருக்கும். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள் தோழரே! என் கட்சிக்காக நான் எதையும் இழக்கத் தயார் என்றால் உங்களுக்கு ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறோம். கட்சித் தலைமையை மட்டுமே கட்சி என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் என்பதுதான் அது.
There is a split in the party. It is not a vertical split. It’s a horizontal split where in the upper part is the party leadership and in the lower part, the cadres.. We have to accept the fact.

கேரளாவில் கன்னிகாதானம் செய்து மடியிலமர்த்தி தன் மகளை திருமணம் செய்து கொடுத்த புரட்சி கம்யூனிஸ்ட் ஏ.கே.பதமநாபனை கட்சித்தலைமை என்ன செய்த்து? தனது புதுமனைப் புகுவிழாவில் மாட்டை வீட்டிற்குள் விட்ட கம்யூனிஸ்ட் அ.சௌந்தர்ராஜனை என்ன செய்தது கட்சி?
”நான் முதலில் பிராமணன். அதன்பின் வங்காளி. அதற்குப்பிறகுதான் கம்யூனிஸ்ட்” என்று முழங்கிய மேற்கு வங்க அமைச்சர் சுபாஷ் சக்கரவர்த்தி என்ற கம்யூனிஸ்ட் மேல் என்ன நடவடிக்கை எடுத்த்து கட்சி? இவையெல்லாம் ”unbecoming of a communist” இல்லையா? ஒருவேளை “becoming of a communist" ஆ?

கம்யூனிஸத்தின் அடிப்படையிலேயே கைவைக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் சாதிவெறிக்கும் ஆட்பட்டவர்களையெல்லாம் விட்டுவிட்டு WR மேல் மட்டும் கட்சியின் சட்டங்கள் பாய்வதேன்? இதுதான் எங்கள் கேள்வி. பதில் சொல்லுங்கள்!

Unknown said...

"கட்சி உறுப்பினர் என்கிற ஒன்றைவிட உயர்ந்த பதவி எங்கள் கட்சியில் வேறு எதுவும் இல்லை தோழரே.பதவி என்பதும் அதிகாரம் செலுத்துவது என்பதும் கட்சிக்குள் ஒரு வேலைப்பிரிவினை மட்டுமே என்று எங்கள் தோழர் உ.ரா.வ அவர்கள் எனக்குச் சொன்னதையே உங்களுக்கும் திருப்பிச் சொல்கிறேன்" மிகச் சரியாக சொன்னீர்கள்!

தோழன் said...

அன்பிற்கினிய தமிழ், வணக்கம். ரொம்பவும் உணர்ச்சிவச்ப்பட்டு எழுதியது போல் உள்ளது உங்கள் 'உ.ரா.வ.2'. எனினும் மிக உண்மையாகவும் உள்ளது. ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. ஜால்ரா ஊடகத்திற்கென்ன விற்பனைக்கு இப்ப ஒரு நித்யானந்தா கிடைத்துவிட்டார். அதில் அதிகம் காசு பார்த்தால் பாசமிகு தோழரை பார்க்கக்கூட மாட்டார்கள். இவர்கள் காசுக்குப் ... தின்கிறவர்கள். விட்டுத் தள்ளுங்கள். நம்பிககையை மட்டும் இலக்காக்கி உங்களோடு சேர்ந்து பணியாற்ற ஆயிரக்கணக்கான தோழர்களுண்டு. இறுதி வெற்றி நமதே. நாகநாதன். திருச்சி

Anonymous said...

My heartfelt condolences to everyone.

To avoid more damage to either of the side, it is better to leave it as it is (as Kalaignar said).

pavithrabalu said...

////ஏற்கனவே பெண் குறித்த ஜனநாயகமற்ற ஆணாதிக்கச் சிந்தனை ஊதிப்பெருத்துள்ள நம் இந்திய சமூகத்தில் உலகமயம் பெண்கள் மீதான வன்முறைக்கு மேலும் புதிய புதிய வடிவங்களையும் வண்ணங்களையும் சேர்த்து வருகிறது.மக்களை-உழைப்பாளிகளையும் கூட –அது வெறும் கன்ஸ்யூமர்களாக ஆக்கி வருகிறது////

உண்மை தான் தோழர்...

மறைந்த தோழரைப் பற்றி எவரெவரோ கருத்துக்களை அள்ளி வீசி வருகிறார்கள்....உங்களுடைய உணர்வுகளை தெளிவாக முன்வைத்துள்ளீர்கள்,

-----ஆதாரங்களை விடவும் கம்யூனிஸ்ட் வாழ்க்கையின் தார்மீக உணர்வுகளைத்தான் நாம் முக்கியமாகக் கருத வேண்டும்----

அடிப்படையான இந்த புரிதல் இல்லாதவர்களைப் பற்றி நாம் கவலைப்பட ஏதுமில்லை தோழர்..

Anonymous said...

I appreciate your sharp intellectual skill of identifying the writer from the language. Congrats. After writing such a crude defence of your party's action, how do you expect others to be polite. Again by not expressing your opinion on the nature of the inquiry (the woman concerned being 'interrogated' over phone), you are diverting attention from the real problem. This is dishonesty.
Jeyamohan does not deserve so much attention. His views are absurd.
Try to honestly answer the questions from your comrades.

Anonymous said...

I wish to remind you of the words com N V said at the funeral. "The party will learn from the death of Com WRV".
But some of the leaders (including yourself) do not reflect such a feeling and continue to argue in defense of EC. One day the lady is going to tell the press that WRV has not harassed her sexually. that is going to happen. What are you going to do at that time? This is not a wild imagination. That is going to happen.

Anonymous said...

1) The sudden love for com WRV from Indian Express , Jeyamohan , SMS communists , vinavu /website communists , weekend communists, shameless newspapers and maoists is understandable. its only surprising if these people dont react to dilute the left which is their solemn duty .

2) the selfless work of millions of cpim cadre can never be surpassed. you have to come see and live to believe [ you will call them fools for this as you are shameless brilliance incarnate ]

3) it also shows in spite of all shortcomings cpim is a true alternate , revolutionary left force in the country, and cpim has made written documents on its shortcomings

4) CPIM never claimed its 100% pure and it also never claimed capitalist tendencies will not seek entry into its committees.

5)CPIM will learn a lesson as com NV said. If there are any capitalist tendencies in the communist party leadership, the party will fight it tooth and nail. There is no other left alternate force , with such scale in India today.

6) It takes years to build a communist like WR and only months to loose and this is not a simple loss.

6) Such honesty and commitment to take action in spite of historical sacrifice exists only in communist parties.

7) this is not a biased justification of the party . this is a fact we see around. our party is a party where we can criticize and correct official corporate tendencies and make it truly reflect the movement. be part of the struggle . you will say the same thing.

8) lack of camaraderie at the highest levels in a movement and official tendencies are serious cause for concern .

9) patriachal tendencies and male chauvinist behavior will be questioned in communist parties . this is not your media filled with filth or a capitalist party where patriarchy is a symbol of success.

10) appropriate action without discounting gender based injustice should have been taken. the action might have been inappropriate and WRV should have fought [ understand how difficult this is ] but that history of great communists. we wish that WRV was one.

11) camaraderie could have been extended to com WRV.

12) communist parties also shouldn't based their decisions on feudal moralism alone.

Anonymous said...

Indru Naan
Naalai Nee
Endru avarudaya maranam echcharikkai viduppadhupol irukkirathu.
Naalai idhu ungalukke neralam.

Ungludaya nyaangalukkup pinnarum
Kelvigal nirkkindrana.
Kelvigalai ketkath thavarinaal
Naaalai idhu ungalukke neralaam.

ஏகலைவன் said...

என்னுடைய பின்னூட்டங்கள் ‘வழக்கம்போல’ இங்கே வெளியிடப்படாமல், இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதனை வேறு தளங்களில் சென்று பதிந்து உங்களை தெளிவாக அம்பலப்படுத்த என்னால் முடியும்.

பின்னூட்டங்களை யோக்கியமாக வெளியிட்டு விவாதிக்கக் கூடிய நேர்மையை உங்களிடம் எதிர்பார்ப்பது தவறுதான். அது சந்திப்பு செல்வக்குமாராக இருந்தாலும் சரி, மாநில பொதுச்செயலாளரான தமிழ்ச்செல்வனாக இருந்தாலும் சரி, பின்னூட்டங்களை நேர்மையாக வெளியிட்டு விவாதிக்கின்ற துணிவை, நேர்மையை பொய்யும் புரட்டும், அயோக்கியத்தனங்கள் மட்டும் நிரம்பியிருக்கும் சி.பி.எம். அரசியல் ஒருபோதும் தராது.

என்னதான் போலி முகாமைச் சார்ந்திருந்தாலும் தமிழ்ச்செல்வன் மீது சிறிது மதிப்பு கொண்டிருந்தோம். ஆனால், பதவியும் நாற்காலி மோகமும் உம்மை எந்த அளவிற்கு அற்பவாதியாக மாற்றியிருக்கிறது, என்பதற்கான நேரடி சாட்சியங்கள்தான், இவ்வாறான முயற்சிகளிலிருந்து வெளித்தெரிகிறது.

நீங்கள் விவாதிப்பதைத் தவிர்த்து, உமது தோழர்கள் இந்த வண்டவாளங்களையெல்லாம் தெரிந்துகொண்டுவிடுவார்களோ என்கிற காரணத்தினால், எனது பின்னூட்டங்களை இருட்டடிப்பு செய்யச்செய்ய, இதை சகித்துக்கொள்ள முடியாத வேகத்தில், தவிர்க்கமுடியாமல் நாமும் வேறுசில வழிகளில் உமது தோழர்களை அனுகி, உமது அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தி வருகிறோம்.

த.மு.எ.ச.யாஹூ குரூப்ஸ் உள்ளிட்ட அனைத்திலும் உமது நிஜமுகம் கிழிந்து தொங்கவிடப்படும்.

எங்களது அன்றாட அரசியல் பணிகள் என்பது வேறு. ஆனால், உங்களுடைய பித்தலாட்டத்தை பொறுத்துக்கொண்டு போகிற போக்கில் விட்டுச்செல்ல மனமில்லாததால்தான் வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் துவைத்து தொங்கவிடுகிறோம். அதில் போதுமான வெற்றியும் பெற்று வருகிறோம்.

நட்புடன் ரமேஷ் said...

அன்புள்ள தமிழ்..
வன்மத்துடன் எதிரி மீது கிடைத்த பொருளை எடுத்து எரிகிற போது, கையில் கிடைப்பது எது என்று பார்க்காத உணர்வுடன் சிலர் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் தொலைகாட்சி போல கிடைத்த தகவல்க்ள் எல்லாம் உண்மையாக மாறிவிடாதா என ஆசை படுகின்றனர். நாங்களும் தோழர்தான் என்று பல அணாணிகள் புறப்பட்டு இருப்பதுதான் மிகவும் ஆபத்து. இப்படிபட்ட "தோழர்கள்" ராயப்பேட்டை பிணக்கிடங்கில் தோழர் வரதராஜனின் பிணம் கிடந்த போது நடத்திய அசிங்கமான உரையாடல்களை நேரில் கண்டவன் நான். அவர்கள் குறித்து கவலையும், அவர்களுக்கான பதிலும் தேவையற்றது. ஏனெனில் அவர்கள் எடுத்த முடிவுட்ன் இந்த பிரச்சனையை அனுகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் தோழர் வரதராஜனை கொலை செய்துக்கொண்டு இருக்கிறார்க்ள் என்பதை புரிந்துக்கொள்வது நன்று.

ச.தமிழ்ச்செல்வன் said...

தோழர் ஏகலைவனுக்கு.. ஆரம்பத்தில் எல்லாப் பின்னூட்டங்களையும் நான் ‘ஜனநாயகமாக’ வெளியிட்டுக்கொண்டுதான் இருந்தேன்.ரொம்ப அநாகரீகமான முறையில் கருத்திலும் மொழியிலும் வன்மம் மிகுந்த பின்னூட்டங்களை மட்டுமே நான் வெளியிடுவதில்லை.உங்களைப்போன்ற தத்துவரீதியாக ஆழமான பார்வையும் அரசியல்ரீதியாக பெரும் முதிர்ச்சியும் பக்குவமும் கண்ணியமும் ஜனநாயக உணர்வும் ஆற்றலும் மிக்க சத்தியமிக்க மனிதர்களுக்கு கருத்துக்களை வெளியிட ஆயிரம் வாசல் இருக்கிறது.என்னை விடுங்க சாமி.தொங்க விடுறதுக்கு நல்ல ஆளைப் பார்த்து வந்தீங்க.

ஏகலைவன் said...

//////ச.தமிழ்ச்செல்வன் said...
March 12, 2010 9:27 AM
தோழர் ஏகலைவனுக்கு.. ///

ஐயா,
முதலில் எனது பின்னூட்டத்தில் ஒன்றையாவது வெளியிட்டமைக்கு நன்றி! அதற்கு ஒரு நாலு வரியில் வெளக்கம்கூட சொல்லியிருக்கிறீர்கள்; அதற்கும் கூடுதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி தொடர்ந்து...

/////ஆரம்பத்தில் எல்லாப் பின்னூட்டங்களையும் நான் ‘ஜனநாயகமாக’ வெளியிட்டுக்கொண்டுதான் இருந்தேன்.ரொம்ப அநாகரீகமான முறையில் கருத்திலும் மொழியிலும் வன்மம் மிகுந்த பின்னூட்டங்களை மட்டுமே நான் வெளியிடுவதில்லை./////

ஐயா, ஒருத்தன் தவறான வார்த்தையில் அல்லது அநாகரீகமான முறையில் வன்மமாகப் பேசியிராதபோது, அவன் அப்படிப் பேசினான் என்று புனைந்தால் அவனுக்கு எப்படியிருக்கும்? ஓஹோ இவரை இப்படித்தான் பேச வேண்டுமா என்று சிந்தித்து அதன் பிறகு வன்மமாக, அநாகரீகமாக பேச இறங்கிவிடுவான். நான் அவ்வாறு இறங்கவில்லை, ஒருபோதும் இறங்கமாட்டேன் ஐயா.

உங்களுக்கு நான் அனுப்பிய பின்னூட்டங்களிலேயே சற்று வன்மத்துடன் கோபத்துடன் அனுப்பிய பின்னூட்டம், இதோ இப்போது நீங்கள் வெளியிட்டிருக்கும் இந்த பின்னூட்டம்தான். இதில் அரசியல் எதுவும் இல்லை, சிபிஎம் கட்சியின் மோசடிகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவே, ஐயா கருணாமூர்த்தி (நீங்கதான் வேற யாரு...) முந்திக்கிட்டு வெளியிட்டுட்டு, வன்மம் அது இதுன்னு வெளக்கம் கொடுக்கிறீங்க.

நீங்கள் இருட்டடிப்பு செய்த எனது மற்ற பின்னூட்டங்களை இங்கே வெளியிடுங்கள் உமது தளத்தின் வாசகர்கள் முடிவு செய்து சொல்லட்டும்.


/////உங்களைப்போன்ற தத்துவரீதியாக ஆழமான பார்வையும் அரசியல்ரீதியாக பெரும் முதிர்ச்சியும் பக்குவமும் கண்ணியமும் ஜனநாயக உணர்வும் ஆற்றலும் மிக்க சத்தியமிக்க மனிதர்களுக்கு கருத்துக்களை வெளியிட ஆயிரம் வாசல் இருக்கிறது.////

அண்ணே! இப்பத்தாண்ணே புரியுது! நீங்க எப்படி பொதுச்செலாளரா ஆனீங்கன்னு. இந்த மந்திரத்தத்தான் செலக்‌ஷன் கமிட்டியிடம் சொன்னீங்களா?! இந்தத் திறமை யாருக்குக்ம் வராதுண்ணே!!

அண்ணே! தமிழ்ச்செல்வன்னே!! இந்த நாற்காலி உங்களை எப்படி மாற்றியிருக்கிறது என்று இப்ப நினைச்சாலும் ஆச்சர்யமாத்தாண்ணே இருக்கு!!!


////என்னை விடுங்க சாமி.தொங்க விடுறதுக்கு நல்ல ஆளைப் பார்த்து வந்தீங்க.////

ஒரு ‘முற்போக்கு’ கம்பெனியின் பொதுச்செயலாளரான நீங்கள், விவாதிக்கக் கூப்பிட்டாக்கா “என்னை விடுங்க சாமீஈஈஈ.....” என்று விலகி ஓடுவது நேர்மையான ஒன்று அல்ல, ஐயா.

Anonymous said...

தமிழ் செல்வன் அவர்களே ஏகலைவன் அவர்களே , இதுபோல ஒரு குழாயடி சண்டையை நடத்தி எங்களை புல்லரிக்க வைக்கிறீர்கள் . தமிழ் இலக்கியம் இப்படி நாறிக்கொன்டிருப்பதை எல்லோரும் வேடிக்கை பார்க்கத்தான் உங்களுக்கு ஒருத்தன் இன்டர்நெட் நடத்தி ஓசியிலே படம் காட்டிக் கொண்டிருக்கிறானா? நமக்கு சாபம் இதுதான். நாம முன்னேறவே மாட்டோம்

Anonymous said...

Tamilselven,

There is nothing right in your left side of the brain and nothing left in the right side of the brain.

I wish you all the best

Anonymous said...

தமிழ் நீங்கள் மனசாட்சியோடு தான் இருக்கிறீர்களா? நம்பமுடியவில்லை...