Wednesday, June 3, 2009

என் இளமையின் சிறகுகள் உதிரத்துவங்கி விட்டன.....

 

 

kamaladas4 kamaladas1

 

 

கமலாதாஸ் என்றும் மாதவிக்குட்டி என்றும் மாதவிசுரய்யா என்றும் அறியப்பட்ட -- மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் /கதைகள் எழுதிய என் பிரியத்துக்குரிய மூத்த படைப்பாளி - என் இளமைக்காலத்தின் அடையாளங்களில் ஒன்றாக என் வாழ்வோடு இரண்டறக்கலந்திருந்த கமலாதாஸ் கடந்த 31 ஆம் தேதி புனேயில் காலமாகிவிட்டார் என்கிற செய்தி என்னைப் பெரும் துயரில் ஆழ்த்திவிட்டது(இந்த வரிக்கான உண்மையான அர்த்தத்தில்).

1974இல் நான் ராணுவத்தில் இருந்தபோது இமயமலையின் சரிவுகளில் கவிதைகளோடு துள்ளித்திரிந்த பருவத்தில் கமலாதாசை நான் கண்டடைந்தேன். “ மூன்று மொழிகளில் பேசுகிற-இரண்டு மொழிகளில் எழுதுகிற ஆனால் ஒரே மொழியில் கனாக் காண்கிற ” அந்தப் பெண்மணியின் கவிதைகள் தாம் நான் முதலில் வாசித்தது. ஜெயகாந்தனும், நா.பார்த்தசாரதியும் படித்துக்கொண்டிருந்த அந்த நாளின் என்னைத் தலைகீழாகக் கவுத்திப் போட்டன கமலாதாசின் எழுத்துக்கள்.தொடர்ந்து அவருடைய ‘ My Story’ படித்தேன்.அவர் எழுத்துக்களின் மீது பித்தானேன்.

அவரைப்போன்ற நேர்மையான ஓர் எழுத்துக்காரரை இந்தியாவில் நான் இதுவரை கண்டதில்லை.என்ன நேர்மை.என்ன ஒரு துணிச்சல்.எல்லாமே அதன் உச்சத்தில்.பாலியல் சார்ந்த ஒரு பெண்ணின் மன உளைச்சல்களைப் பகிரங்கமாக எழுதிய முதல் இந்தியப்பெண்மணி அவர்தான்.இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனையான தன் வரலாற்று நூல் அவருடைய என் கதை தான்.

சனாதனப் பண்டாரங்கள் அவரைப் பழித்தார்கள்.விமர்சித்தார்கள்.பாலியல் எழுத்தென்று வசை பாடினார்கள்.ஆனால் கமலாதாஸ் ஓர் அற்புதமான கலைஞர்.ஒரு கலைஞனுக்கான எல்லாக் குணாம்சங்களும் கொண்டு வாழ்ந்தவர். தன் வாழ்வையே பணயமாக வைத்து விளையாடியவர்.எல்லாத் தலைசிறந்த கலைஞர்களையும் போல எதிலும் உறுதியற்ற மனநிலையோடே இறுதிவரை வாழ்ந்தார். அவ்வக்கணத்தின் மன எழுச்சியே அவருடைய நிலைபாடாக இருந்தது. பொக்ரான் அணு வெடிப்பில் உற்சாகமடைந்து எல்லோருக்கும் இனிப்பு வழங்கிய அவருடைய மனநிலையை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.ஒருநாள் திடீரென இஸ்லாமியப் பெண்ணாக தன்னை மதம் மாற்றிக்கொண்டதும் அப்படித்தான்.

என் வாழ்வின் ரகசியங்கள் அத்தனையையும் எழுதி என்னைக் காலி உடம்பாக ஆக்கிவிட வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன் என்றவர்.அப்படியே கடைசி நிமிடம்வரை வாழ்ந்தார்.

கேரளா அவரைக்கொண்டாடியது போலவே தூற்றவும் செய்தது. விமர்சனங்களால் காயப்பட்ட அவர் ஒரு நாள் இனி நான் திரும்ப மாட்டேன் என்று அறிவித்துவிட்டு நிரந்தரமாக கேரளாவிலிருந்து வெளியேறினார். அந்தப் பாவம் மலையாளிகளை சும்மா விடுமா? மீண்டும் அவர் திரும்பவே இல்லை-கலைஞனுக்குரிய கர்வத்தோடு வெளி மண்ணில் புனேயில் மடிந்தார்.

இன்று தன் மூத்த மகளை இழந்துவிட்ட துயரில் மலையாளம் கரைந்து கொண்டிருக்கிறது.

எனக்கோ என் இளமையைச் செதுக்கிய கவி இன்று இல்லை.என் இளமையை நெறிப்படுத்திய படைப்பாளி இன்றில்லை. என் எழுத்துக்களில் நேர்மையின் துணிவைக் கொண்டு சேர்க்கப் பணித்த என் மாதவிக்குட்டி அக்கா இன்று இல்லை.படைப்பில் உண்மை என்பதின் உச்சம் எது என்பதை எனக்கு அடையாளம் காட்டிய முன்னோடி இன்றில்லை.பெண்ணின் பெருமையை புரியவைத்த அக்கா இன்றில்லை.என் சொந்த இழப்பு இது.

என் இளமை இன்றுமுதல் உதிரத் துவங்கிவிட்டதாக மனசார உணர்கிறேன்.உடம்பாலும் உணர்கிறேன்.

சென்று வா மாதவி அக்கா.கண்ணீரோடு வழியனுப்புகிறேன்.

பி.கு.

அவருடைய கவிதைகளில் முக்கியமான- அற்புதமான ஒரு கவிதையை அப்படியே கீழே தந்துள்ளேன்.யாரேனும் (தீபா ? )சரியாக மொழிபெயர்த்து பின்னூட்டத்தில் போட்டால் நன்றியுடையவனாவேன்.

An Introduction

I don’t know politics but I know the names
Of those in power, and can repeat them like
Days of week, or names of months, beginning with Nehru.
I amIndian, very brown, born inMalabar,
I speak three languages, write in
Two, dream in one.
Don’t write in English, they said, English is
Not your mother-tongue. Why not leave
Me alone, critics, friends, visiting cousins,
Every one of you? Why not let me speak in
Any language I like? The language I speak,
Becomes mine, its distortions, its queernesses
All mine, mine alone.
It is half English, halfIndian, funny perhaps, but it is honest,
It is as human as I am human, don’t
You see? It voices my joys, my longings, my
Hopes, and it is useful to me as cawing
Is to crows or roaring to the lions, it
Is human speech, the speech of the mind that is
Here and not there, a mind that sees and hears and
Is aware. Not the deaf, blind speech
Of trees in storm or of monsoon clouds or of rain or the
Incoherent mutterings of the blazing
Funeral pyre. I was child, and later they
Told me I grew, for I became tall, my limbs
Swelled and one or two places sprouted hair.
WhenI asked for love, not knowing what else to ask
For, he drew a youth of sixteen into the
Bedroom and closed the door, He did not beat me
But my sad woman-body felt so beaten.
The weight of my breasts and womb crushed me.
I shrank Pitifully.
Then … I wore a shirt and my
Brother’s trousers, cut my hair short and ignored
My womanliness. Dress in sarees, be girl
Be wife, they said. Be embroiderer, be cook,
Be a quarreller with servants. Fit in. Oh,
Belong, cried the categorizers. Don’t sit
On walls or peep in through our lace-draped windows.
Be Amy, or be Kamala. Or, better
Still, be Madhavikutty. It is time to
Choose a name, a role. Don’t play pretending games.
Don’t play at schizophrenia or be a
Nympho. Don’t cry embarrassingly loud when
Jilted in love … I met a man, loved him. Call
Him not by any name, he is every man
Who wants. a woman, just as I am every
Woman who seeks love. In him . . . the hungry haste
Of rivers, in me . . . the oceans’ tireless
Waiting. Who are you, I ask each and everyone,
The answer is, it is I. Anywhere and,
Everywhere, I see the one who calls himself I
In this world, he is tightly packed like the
Sword in its sheath. It is I who drink lonely
Drinks at twelve, midnight, in hotels of strange towns,
It is I who laugh, it is I who make love
And then, feel shame, it is I who lie dying
With a rattle in my throat. I am sinner,
I am saint. I am the beloved and the
Betrayed. I have no joys that are not yours, no
Aches which are not yours. I too call myself I.

13 comments:

Deepa said...

My deepest condolences.
May her soul rest in peace.

Do please guide us to more of her writings.

//he is every man
Who wants a woman, just as I am every Woman who seeks love. //
Wow..

Unknown said...

கமலாதாஸ் எனக்கும் மிகப் பிடித்த படைப்பாளி. அவரைப் பற்றிய ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.அவரின் மறைவு மிகவும் மனவருத்தத்தை அளிக்கின்றது. காலத்தை வென்ற படைப்பாளி கமலாதாஸ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

venu's pathivukal said...

அன்பு தமிழ்

எதிர்பார்த்தேன், உங்களிடமிருந்து உள்ளத்தைப் பிசையும் அஞ்சலிப் பதிவுகள் முன்னெழுந்து வருமென்று தெரிந்திருந்தது போல் இப்போது படுகிறது. எவ்வித தயக்கமும், கூச்சமும், சாதுரியமும், நயமும், பாசாங்குமற்ற உங்கள் எழுத்து, கமலாதாஸ் எழுத்துக்களில் நீங்கள் லயிப்புற்றுக் கிடந்ததை மட்டுமல்ல, அவற்றின் பகிரங்கத் தன்மையின் காதலராகவே நீங்கள் வெளிப்படுவதையும் கவித்துவமாக உணர்த்துகிறது. சுதந்திர கீதமிசைக்கும் ஒவ்வொரு பறவையும் அடிமைத்தனத்தை நிராகரிக்கிறது. ஆதிக்க சக்திகளின் எதிர்வினையை அதன் உடலில் வேண்டுமானால் காணக் கிடைக்கலாம். அவற்றால், பறவையின் கீதத்தைத் திருத்தி அமைக்க முடியாது.

எஸ் வி வேணுகோபாலன்

ச.தமிழ்ச்செல்வன் said...

தீபா,உமாஷக்தி,வேணு மூவருக்கும் நன்றி.three of my beloved sensitive personalities responded first ! great day

மாதவராஜ் said...

தமிழ்!
உங்கள் கைகளை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
என்னுடைய இளமைக்காலத்தில் நானும் என்னைக் கரைத்துக் கொண்டு கமலாதாஸின் சுயசரிதையை படித்திருக்கிறேன்.
பொதுவாக மலையாளிகளுக்கு அந்த நேர்மை அதிகமாகவே இருக்கிறது. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு படிக்கும்போதும் இப்படி நான் உணர்ந்திருக்கிறேன்.

Deepa said...
This comment has been removed by the author.
Deepa said...

//தீபா,உமாஷக்தி,வேணு மூவருக்கும் நன்றி.three of my beloved sensitive personalities responded first ! great day//

You have really made my day with these words! Thank you.

மன்னிக்கவும் ஸார்! தாங்கள் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளதை அவசரத்தில் கவனிக்கத் தவறி விட்டேன். என் மகள் இடையூறு செய்திருப்பாள் என்று தோன்றுகிறது!

இப்போது அங்கிள் தொலை பேசித் திட்டிய பிறகே கவனித்தேன்.

கண்டிப்பாக மொழியாக்கம் செய்ய முயல்கிறேன், கவிதையைச் சிதைத்து விடாமல். மீண்டும் நன்றி.

venu's pathivukal said...

அன்பு தமிழ்
வணக்கம். கமலாதாஸ் கவிதையின் ஒரு மொழிபெயர்ப்பு
இங்கே தரப்படுகிறது. அவ்வளவு சரியாக இருக்குமா என்று தெரியாது.
பெங்களூரில் இந்த வேலைக்கு ஒரு நேரம் கிடைத்தது உங்களை சோதிப்பதற்கு....

இனி, நீங்களாச்சு, கமலாதாஸ் ஆச்சு

எஸ் வி வேணுகோபாலன்


**********************************
அறிமுகம்


அரசியல் தெரியாது எனக்கு
ஆனால்
அதிகாரத்தில் இருப்பவர்களின்
பெயர்கள் தெரியும் எனக்கு.
நேருவில் துவங்கி
வரிசையாக ஒப்புவிக்கவும்
முடியும் என்னால்
கிழமைகளை, மாதங்களைச்
சொல்வது போல.
நான் ஓர் இந்தியர்
நிறம் மிகவும் பழுப்பு
மலபாரில் பிறந்தவள்
பேசுகிறேன் மூன்று மொழிகளில்
எழுதுகிறேன் இரண்டில்
கனவில் ஆழ்கிறேன் ஒன்றில்.
அவர்கள் சொன்னார்கள்,
ஆங்கிலத்தில் எழுதாதே
ஆங்கிலம் உனது தாய்மொழியன்று.
என்னை ஏன் தனிமையில் விடக் கூடாது,
விமர்சகர்களே, நண்பர்களே, சந்திக்கவரும்
சொந்தங்களே, உங்கள் ஒவ்வொருவரையும்தான்
கேட்கிறேன்,
எனக்குப் பிடித்தமான எந்தவொரு மொழியிலும்
என்னைப் பேசவிடுங்களேன்
நான் பேசுகிற மொழி எனதாகிறது,
அதன் பிறழ்வுகள், அசாதாரண பிரயோகங்கள்
எல்லாம் என்னுடையவை, என்னுடையவை மட்டுமே.
அது அரை ஆங்கிலம், அரை இந்தியம். ஒருவேளை
நகைப்புக்குரியதும் கூட. ஆனாலும் அது நேர்மையானது.
உங்களால் பார்க்கமுடியவில்லையா,
நான் எவ்வளவு மனுஷத்தனம் கொண்டவளோ அவ்வளவு
மனிதத்தன்மை அதற்குமிருக்கிறது.
அது பேசுகிறது
எனது குதூகலங்களை, எனது விழைவுகளை, எனது நம்பிக்கைகளை.
அது எனக்குப் பயன்படுகிறது
காகத்திற்கு அதன் கரைதலைப் போல
சிங்கத்திற்கு அதன் கர்ஜனையைப் போல.
அது மனிதப் பேச்சு
இங்கிருக்கிற, அங்கு இல்லாத மனத்தின் பேச்சு.
பார்க்கிற, கேட்கிற எல்லாம் அறிகிற ஒரு மனத்தின் பேச்சு.
செவியற்ற விழிகளற்ற பேச்சல்ல.
புயலில் சிக்கிய மரங்களின் -
பருவமழையைச் சுமக்கும் மேகங்களின் -
மழையின் -
தொடர்பற்ற முணுமுணுப்புகளைச் செய்தவாறு
கொழுந்துவிட்டெரியும் சிதை நெருப்பின் -
பேச்சு அது.
நான் குழந்தையாக இருந்தேன்
பிறிதொருநாள் அவர்கள் சொன்னார்கள்
நான் வளர்ந்துவிட்டேனென்று
ஏனெனில்
நான் உயரமாகிவிட்டேன்
எனது உடல் பெரிதாகிவிட்டது
ஒன்றிரண்டு இடங்களில் முடி வளரத்துவங்கிவிட்டது.
நான் காதலைக் கேட்டபோது அவன்
ஒரு பதினாறு வயது யௌவனத்தை எனது படுக்கையறைக்குள்
தள்ளிவிட்டுக் கதவைச் சார்த்தினான்.
அவன் என்னை அடிக்கவில்லை
ஆனால் வருத்தமுற்ற எனது பெண் மேனி அடி வாங்கியதாக உணர்ந்தது.
எனது மார்பகங்களின் பளுவும், கருப்பையும் அழுத்திய அழுத்தத்தில்
பரிதாபகரமாக நான் சுருங்கிப்போனேன்.
பிறகு ஒரு சட்டையையும், எனது சகோதரனின் கால்சட்டையையும்
அணிந்தேன். தலைமுடியைக் குட்டையாகக் கத்தரித்துக் கொண்டேன்.
எனது பெண்மையைப் புறக்கணித்தேன்.
அவர்கள் சொன்னார்கள்,
சேலைகளை அணி, பெண்ணாய் இலட்சணமாய் இரு, மனைவியாய் இரு.
தையல் வேலையைச் செய்துகொண்டிரு, சமையல்காரியாய் இரு,
சண்டை போட்டுக் கொண்டிரு வேலையாட்களுடன்,
பொருந்தி இரு, ஓ, ஒட்டிக் கொண்டிரு
என்றனர் வகைப்படுத்துநர்கள்.
சுவரின் மீது உட்காராதே, மெலிய திரைச்žலைகள் தொங்கும் எங்கள் சன்னல்கள் வழியே
பார்க்காதே.
ஆமியாய் இரு. கமாலாவாக இரு. மாதவிக்குட்டியாக
இருந்தால் இன்னும் நல்லது.
இதுவே சரியான தருணம்
ஒரு பெயரைத் தேர்வுசெய்து கொள்ள
ஒரு பாத்திரத்தை முடிவு செய்து கொள்ள.
கண்ணாமூச்சி விளையாட்டுகள் வேண்டாம்
மனநோயாளியோடு விளையாடாதே
திருப்தியுறாத ஆளாயிராதே
காதல் முறிவின் போது
சங்கடப்படுத்தும்படி ஓவென்று இரையாதே..........
ஒரு மனிதனைச் சந்தித்தேன்
காதல்வயப்பட்டேன்
எந்தப் பெயரிட்டுமழைக்க வேண்டாம் அவனை
ஒரு பெண்ணை நாடும்
எந்த ஒரு ஆண்தான் அவன்
காதலை நாடும்
எந்த ஒரு பெண் போலான என்னைப் போலவே
அவனுள.........நதிகளைப் போலவே ஒரு பசியின் வேகம்.
என்னுள்........... சமுத்திரங்களின் சளைப்பில்லாத காத்திருத்தல்.
உங்கள் ஒவ்வொருவரையும் கேட்கிறேன்
யார் நீ ?
அது நானே என்பதே விடை.
எங்கும், எல்லா இடங்களிலும்
காண்கிறேன் தன்னை நான் என்று அழைத்துக் கொள்பவரை.
உறைக்குள் செருகப்பட்டிருக்கும் வாளைப்போல்
இறுக்கமாக அவன் திணிக்கப்பட்டிருக்கிறான் இந்த உலகத்தினுள்.
தனிமையில் குடிப்பது நான் தான்
புதிய நகரங்களின் விடுதிகளில்
நடுநிசி பன்னிரண்டு மணிக்குக் குடிப்பவள் நான் தான்.
பிறகு, வெட்கத்திலாழ்ந்து
செத்துக் கிடக்கிறேன்
தொண்டை விக்கி.
நான் ஒரு பாவி
நான் ஒரு ரிஷ’
நேசிக்கப்படுபவள் நான்,
வஞ்சிக்கப்படுபவளும்.
உங்களுக்கில்லாத குதூகலங்கள் எதுவும்
எனக்குமில்லை
உங்களுக்கற்ற வலிகள் எதுவும்
எனக்குமில்லை
நானும் அழைத்துக் கொள்கிறேன் என்னை
நான் என்று.

*******************

ச.தமிழ்ச்செல்வன் said...

அருமை வேணு.எப்படி இவ்வளவு சடுதியில் மொழிபெயர்த்துவிட முடிந்தது உங்களால்.ஆச்சரியம் தருகிறீர்கள்.இன்னும் இந்தப்புற்றில் என்னென்ன கிடக்கிறதோ என்று சந்தோஷத்துடன் நினைத்துக்கொள்கிறேன்.பெண் தேடுவது காதலை என்பதற்குப்பதிலாக நேசத்தை என்று இருக்கலாம் என்று பட்டது.காதல் என்கிற வார்த்தை ஒரு வகை நேசத்தை மட்டுமே குறிக்கிறபடியால்.

நன்றி வேணு.தீபா வேறொரு கமலாதாஸ் கவிதை மொழிபெயர்த்து உங்க blog லேயே போடலாம்.

muthu said...

நான் அன்று நாகர்கோவிலில் இருந்தேன். ஒரு நன்பர் வீட்டு வரவேற்பு அறையில் அனைவரும் அமர்ந்து கூட்டமாக ஏதோ நிகழ்சியை பார்த்துக்கொன்டு இருந்தார்கள். நான் அதை பெரிதாக கவனிக்க வில்லை. பின்பு தான் அவர் கூற அறிந்துக்கொண்டேன் அது கமலாதாசின் இருதி அஞ்சலி நிகழ்வு என்று, பல செனல்களில் அது ஒரே நேரத்தில் நேரடி ஒளிபரப்பாக ஒடிக்கொண்டிருந்தது. ஒரு படைபாளியை அந்த சமூகம் எப்படி மரியாதை செய்கிறது என்பதை அறிய மகிழ்ச்சியாக இருந்தது.,

Joe said...

My heart-felt condolences.
May her soul rest in peace.

Anonymous said...

hi,

kamaladas is no more.. but what she faced from the society happens to every female who speak the truth... the translation by venu is nice.. the expression of kamaladas is not just her own feelings.. but the feelings of the women folk here.. people enjoy nude statues placed in the temple.. but when kamala present herself as paintings there was strong oppositions from various people.. pavithra

காதர் அலி said...

அவரின் என்கதையில் ,ஒரு பெண்ணாய் அவர் வாழ்கையை இவ்வளவு திறந்த மனத்துடன் அதுவும் இந்தியாவில் சொல்லமுடியுமா என்று ஆச்சர்ய பட வைத்த உண்மை கலைஞன் அவர்.நீங்கள் சொல்வதுபோல் ஒரு அருமையான அக்காவை இனி பெறவே முடியாது. .அவருக்கு நிகர் அவரே. போய் வாருங்கள் மாதவிக்குட்டி.நீங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கற்ப்பித்து விட்டிர்கள்.