Sunday, April 12, 2009

அரிவால் அரிவாளாகிக் கதிரான கதை

soviet woman

ஆதியிலே வார்த்தை இருந்தது என்று ஆன்மீகமாகப் பேசிக்கொண்டாலும் சொற்கள் மனித உடல் வந்த பிறகு குரல்-குரல் நாண்கள்-மூளை எல்லாம் வந்த பிறகு ரொம்ப காலம் கழித்து வந்த ஜூனியர்தான்.சரி.பீடிகையை இழுக்காமல் மேட்டருக்கு வந்து விடுகிறேன்.தேர்தல் பிரச்சாரத்துக்காக பாடல்கள் தயாரிப்பது/உருவாக்குவது/படைப்பது அப்புறம் அவற்றை ( உருப்படிகள் என்று சு.ரா தன் கடைசி நாட்களில் படைப்புகள் பற்றிக் குறிப்பிட்டது ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது) கேசட் அல்லது சிடியில் பதிவு செய்வது என்கிற வேலையைப் பல ஆண்டுகளாகச் செய்து வந்தாலும் சமீப காலங்களில் Recording theatre கள் பெற்றுள்ள டிஜிட்டல் தொழில்நுட்ப மாயத்தில் சொற்கள் பெற்றுள்ள treatment – மற்றும் சொற்கள் நம்மோடு கொண்டுள்ள உறவின் இணைப்புகள் பன்முகப்பட்டு நிற்பது போன்றவற்றை வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன. ஒலிபதிவுக்கூடத்தில் எப்பக்கமும் தப்ப முடியாத துல்லியத்துடன் சொற்கள் நம்ம்முன் பிரசன்னமாகின்றன.சரி. மகனே மேட்டருக்கு வா.

கடந்த சில பத்தாண்டுகளுக்கு மேலாகவே இயக்க மேடைகளில் பாடிவரும் மக்கள் செல்வாக்குப்பெற்ற கலைஞர்கள் சிலருக்கு சில சொற்களுடன் பிடிபடாத ஒரு உறவு இருப்பதும் சில எழுத்துக்களை அவர்களால் ஒருபோதும் சரியாக உச்சரிக்கவே முடியாது என்பதும் தெரிய வந்தது.

அருந்ததிமக்கள் எழுச்சியின் சின்னம்

அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்

என்ற வரியை அவர் பாட வேண்டும். அரிவாள் என்று அவரால் பாடமுடியவில்லை.அரிவால் என்றே பாடிக்கொண்டிருந்தார்.அதனால் டேக் ஓகே ஆகாமல் ரீடேக் ரீடேக் என்று போய்க்கொண்டிருந்தது.நேரம் ஆக ஆக தியேட்டர் வாடகை பில்லும் ஏறுமல்லவா? ஒரு உண்டியல் பார்ட்டி எவ்வளவு சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் என்பதைச் சொல்லி விளக்க வேண்டியதில்லை. ஒரு ‘ல்’ என்கிற எழுத்து ‘ள்’ ஆகாத சிக்கலில் 600 ரூபாய்க்கு மேல் மீட்டர் ஓடிக்கொண்டிருந்தது.இந்த 600 ரூபாயை வசூலிக்க நம் தோழர்கள் எத்தனை வீட்டு வாசலில் நின்று உண்டி அடித்திருப்பார்கள் என்கிற பதட்டம் எனக்கு அதிகமாகிக்கொண்டிருந்தது. சொல் காசாகவும் சொல் உண்டியலின் குலுக்கலாகவும் சொல் தோழர்களின் புழுதிபடிந்த கால்களாகவும் உருமாற்றம் பெற்று மனதில் விதவிதமான உணர்வலைகளைக் கிளப்பியபடி ஓடிக்கொண்டிருக்க கண்ணாடிக்கு அப்பால் அந்தத்தோழர் அரிவாலை அரிவாளாக்கப் போராடிக்கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் நானும் லகர ளகர ழகரப் பிரச்னை உள்ள தோழர் அவர் என்று நினைத்து

பள்ளம்

வள்ளம்

குள்ளம்

என்று அவருக்கு விளக்கிக் கொண்டிருந்தேன்.அவர் பள்ளத்தைப் பள்ளமென்றார்.கள்ளத்தைக் கள்ளமென்றே சொன்னார்.அதே வேகத்தில் பாடுங்க என்று சொன்னதும் அரிவால் என்றே மாறா நிலையில் நின்றார்.பேசும்போது சரியாக உச்சரிப்பார்.பாடும்போது மட்டும் அவருக்கு ளகரப் பிரச்னை இருக்கிறதுபோலும் என்று முதலில் நினைத்தேன். ஆனால்..

உள்ளத்தின் அடியாழத் தில்நின்று-எம்

உதிரச் செங்கொடி அசைகிறது

என்கிற வரிகளை உச்சரிப்பு சுத்தமாக -மூன்று லகரங்களையும்- அலட்சியமாகப் பாடி எம்மை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தினார்.என்ன பிரச்னை அவருக்கு? எந்த இடத்தில் பிரச்னை? என்று தலை குழம்பிய அந்தப்போராட்டத்தினூடே ஒரு மின்னல் வெட்டியது எனக்கு.

’அரிவாள் மற்றும் சுத்தியல் தானே’

என்று ஒரு வரி எழுதி இதைப்பாடுங்க தோழர் என்று கொடுத்தேன். எந்த உச்சரிப்புப் பிழையும் இல்லாமல் கச்சிதமாக அவ்வரியைப் பாடிவிட்டார்..உடனே இன்னொரு வரியை வேகமாக எழுதி இதைப்பாடுங்க என்றேன்,

‘அந்த ஆழ் கிணற்றுக்குள் விழுந்தே’

என்ற வரியை

‘அந்த ஆள் கிணற்றுக்குள் விழுந்தே ‘ என்று பாடினார்.அப்பாடா என்று என் மனக் குழப்பம் தீர்ந்தது.இதுதானா உன் பிரச்னை தோழா?

எனக்கு அண்ணன் கந்தர்வன் பல கூட்டங்களில் ரசித்துச் சொன்ன ஒரு சோவியத் கதை உடனே நினைவுக்கு வந்தது.

கூட்டுப்பண்ணை விவசாயத்தில் சோவியத் நாட்டிலேயே மிக அதிக விளைச்சல் செய்த பெண்மணி என்கிற லெனின் விருது பெற்ற பெண்ணைப் படமெடுக்க பத்திரிகையாளர் ஒருவர் அந்தக்கிராமத்துக்கு வருகிறார்.அந்தப் பெண்மணியிடம் பேட்டியெல்லாம் முடித்து புகைப்படம் எடுக்கும் கட்டம் வருகிறது.அவருடைய குழந்தைகளோடு நிறுத்தி ஒரு படம் கணவரோடு நிறுத்தி ஒரு படம் ஒட்டுமொத்தக் குடும்பத்தாரோடும் சேர்த்து ஒரு படம் தெருவில் வைத்து ஒரு படம் ஊர்மக்களைச் சுற்றிலும் உட்காரவைத்து நடுவில் இவரை நிற்க வைத்து ஒரு படம் ஊர்த்தலைவரோடு ஒரு படம் என்று படங்களை எடுத்துத் தள்ளினார். ஆனால் அவர் எதிர்பார்த்து வந்த ஒரு படம் மட்டும் கிடைக்கவில்லை- அமையவில்லை. என்ன எதிர்பார்த்து வந்தோம் என்ன கிடைக்கவில்லை என்பது அக்கலைஞனுக்குப் பிடிபடவில்லை. ஆனால் இத்தனை படத்திலும் கிட்டாத ஒன்றுதான் தான் தேடி வந்த படம் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது அவனுக்கு. துக்கத்தில் மனம் அமிழ்ந்து கொண்டிருக்க அவன் படங்களை மேலும் ஒரு ரோல் எடுத்து முடித்தான்( அதுதானய்யா கலைஞன் வாங்கி வந்த சாபம்! எந்நாளும் துன்பத்தில் உழலும் சாபம்! எதற்கென்றே பிடிபடாத துயரத்தில் உழலும் சாபம்)

கடைசியில் அவன் துக்கத்துடன் விடை பெற்றான்.அப்பெண்மணியும் அவரது கணவரும் ஊர் எல்லை வரை வழியனுப்ப வந்தனர்.வயல் வெளிகளைத் தாண்டி பஸ் நிற்கும் பிரதான சாலை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அப்போது அக்கலைஞன் வயல் வெளியில் அப்பெண்மணியை நிறுத்தி ஒரு படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டான். உடனே ஓ என்று உற்சாகமாகத் தலையாட்டிய அப்பெண்மணி ஒரு குழந்தையைப்போல வயலின் நடு மையத்துக்கு ஓடினாள்.தன் செல்லமான பிள்ளைகளை அரவணைத்துத் தூக்குவது போல கோதுமைக் கதிர்களை வாரியணைத்துக்கொண்டு இப்போ எடுங்க படம் என்றாள்.கலைஞன் கேலிராவின் லென்ஸ் வழியாக க்ளோஸ்-அப்பில் அவலளப் பார்த்த அக்கணம் அவன் உடம்பே அதிர்ந்தது.இதுவரை அவன் பார்த்தும் பேசியும் வந்த பெண்மணி அங்கே இல்லை. வாரியணைத்த அக்கதிர்களுக்கு நடுவே முகத்தில் அத்தனை சோபையுடன் அத்தனை சிரிப்புடன் முகத்தின் ஒவ்வொரு துணுக்கிலும் ஒளிந்து நின்றிருந்த சிரிப்பெல்லாம் ஒருசேர வெளிப்பட்டு நின்ற பேரழகுடன் அப்பெண்மணி சுடர்ந்துகொண்டிருந்தாள்.இதுதான் இதுதான் என்று மனம் துடிக்க கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிய பார்வை மறைத்தபோதும் குத்து மதிப்பாக அவளுடைய முகத்தைக் குறிவைத்துப் படங்களை எடுத்தான்.

கதிர்களோடு அதாவது தன் உழைப்பின் குழந்தைகளோடு நிற்கும்போது மட்டுமே வெளிப்படும் அந்தப்பேரழகு! அந்தப் பெருமிதம்!

அந்த அரிவால் தோழர் பிரச்னை அற்புதமான இந்தக்கதையை நினைவுபடுத்திவிட்டது.மனித மனம் எப்போது யாருடைய நினைவைக் கிளறி விடும் எதுபற்றிய நினைப்பைத் தூண்டிவிடும் என்று திட்டவட்டமாக யாரால் சொல்ல முடியும்? இப்பதிவில் நான் எழுதத்திட்டமிட்டது சொற்கள் பற்றித்தான்.ஆனால் பாருங்கள் சோவியத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டேன்.

கதிரைப்பறித்தால் அவள் சிரிப்பு போய்விடும். அரிவாளையும் சுத்தியலையும் அடுத்தடுத்து வைத்தால் இவரின் உச்சரிப்பு போய்விடும் என்று பசுவைப் பனை மரத்தில் கட்டி இப்போதைக்கு முடிக்கிறேன்.எழுத நினைத்த சொற்கள் பற்றிய பதிவை நாளை எழுதி முடிக்க முயற்சிக்கிறேன்.நன்றி. வணக்கம்.

15 comments:

மாதவராஜ் said...

தமிழ்!

மேலோட்டமாக பார்க்கும் போது மிகச்சிறிய விஷயமாக தோன்றும் ஒவ்வொன்றிலும் நுட்பமான, ஆழமான உண்மைகளும், வரலாறும் இருப்பதை அழகாய், இலக்கியச் செறிவுடன் சொல்வது உங்கள் தனித்தன்மை என்று உணர்த்துகிறது இந்தப் பதிவு. வழக்கம் போல வியந்து ரசித்தேன்.

Unknown said...

அருமையான பதிவு தமிழ். //சொல் காசாகவும் சொல் உண்டியலின் குலுக்கலாகவும் சொல் தோழர்களின் புழுதிபடிந்த கால்களாகவும் உருமாற்றம் பெற்று மனதில் விதவிதமான உணர்வலைகளைக் கிளப்பியபடி ஓடிக்கொண்டிருக்க// எம் தோழர்களின் உண்டியல் நேரதிர் வரும்போது தவறாமல் எதிர் கொண்டது மகிழ்ச்சியைத் தருகிறது. ஏன் எதற்கு என்ற காரணங்களை யோசித்துக் கொண்டிருக்கக் கூட நேரமில்லாது ஓடிக்கொண்டிருக்கும் எம் வாழ்க்கையில் எழுத்தும் இயக்கமுமாய் வாழும் உங்களைப் பார்த்து பிரமிப்பாக இருக்கிறது. சோவியத் கதை நெகிழ்ச்சியாக இருந்தது. பகிர்விற்கு நன்றி தோழர்

rvelkannan said...

அருமையான பதிவு மற்றும் ஆழமான கருத்து செறிவுள்ள கதை.
//மனித மனம் எப்போது யாருடைய நினைவைக் கிளறி விடும் எதுபற்றிய நினைப்பைத் தூண்டிவிடும் //

// இந்த 600 ரூபாயை வசூலிக்க நம் தோழர்கள் எத்தனை வீட்டு வாசலில் நின்று உண்டி அடித்திருப்பார்கள் என்கிற பதட்டம் எனக்கு அதிகமாகிக்கொண்டிருந்தது//
உங்களின் குழு சார்ந்த சுய நலமற்ற மன நிலை மேன்மையானது.
நன்றி

ச.தமிழ்ச்செல்வன் said...

மாது,உமா,வேல்கண்ணன் மூவருக்கும் நன்றி.சின்னச் சின்ன விஷயங்கள் மற்றும் ஒண்ணுமில்லாதது என்று நாம் ஒதுக்கிய விசயங்களின் மீதுதான் இப்போதெல்லாம் கவனம் அதிகமாகி வருகிறது.

காமராஜ் said...

உளவியல் ரீதியான, அடர்த்தியான செயல்களை
எளிமையாக்குகிற உங்களின் சொல்லும் எழுத்தும்
அபாரமான்வ.

venu's pathivukal said...

Anbu Thozharukku

ò½´ þ°‘ÝÏ™,

í½°À‘î º±Ú.....
‡î™ …¥ò ¶€îØí ×¹°³, °×€ã ‡òé —œ‘Ö€Ò …¢œÍ™ æƑ°×ò €°! ‡´°€î Ã€é —œ‘ÖÓ™ —‘¨´°‘ÕÅ ×ò, °×™€ã ‡òþé —œ‘ÖŽé× ƒÏ™Žé‘ò. €¥ÇÖ ‹Ñ …´±€Æ™ €¥¿»¦™Žé‘Ñ ‡±þÌ ¶íº×Ñ: ŠÜ—×‘Ï ‡à´°‘Ë ×€î …¢œÍ™ €×™Žé‘Ñ: °.... ‡òŽé‘Ñ. ×ñÅ '°' ‡òŽé‘ò. ¿½éÅ '×', ×ñÅ '×'. ƒ¿þº‘³ ºÆ¹³ —‘¯þ¥ '€ã' ‡òŽé‘Ì‘, ×ò ‡¹°¢ ™Õòê '€ã' ‡òì µ‘Æ‘œÀ‘¢ —œ‘ÖÓبŽé‘ò. Ü×ãÚ°‘ò, ƒ¿º —œ‘ÖÕ....° ... ×......€ã....°×€ã ‡òŽé‘Ì‘ ×Ñ, µÅÀ‘è, °......×........€ã.......°×™€ã ‡òì 晎é‘ò.

þ×±ÆÖ º‘¥´±Ö ŠÏ ¦¿º€¥ þèØ …¯¨. ŠÏ þ×± Ø€î ˆò ˆíº¨Žé³ - ˆò ˆíº¨Žé³ ‡òé‘Ö, Ø€î ½ÍÉÅ —º‘Ïèè ‡±—Ì±Ñ ¶ì´°¿º¨Å þº‘³ ¶€Ò€Ò¹³ þº‘׳ °‘ò (because the reactants are unstable in presence of each other) ‡òº³ º±Ö. Í×‘è °ïÆ‘ÚÅ Ÿ´±ÆÖ °ïÆ‘ÚÅ ƒÏ¹°×€Ì º‘¥Ï™ »Ì¢œ€îÇÖ€Ò ÖÒב, ƒÏ×ÏÅ ŠÏ þœÌ ¶òé‘Ö, ðґ䴳×þÀ ‚¦¿ þº‘Žé þº‘³, º‘×Å º‘¥Ñ ‡ÅÀ‘´±ÌÅ?

í½°Å °Áâ!

‡ø Ø þ×®þ‘º‘Òò

venu's pathivukal said...

Dear Thamizh

I am sorry.....I have posted a comment in Murasu Tamil which is appearing otherwise in unreadable mathematical symbols in your blog....

anyway, this is what i had posted there:

I was reminded of the story of a boy who could not pronounce the word "THAVALAI" (FROG) in Tamil. Despite repeated efforts, he could say only: THAVAKKALAI.

Exhausted, an elderly gentleman tried a last method: He asked the boy to pronounce the letters separately.
when the old man said "Tha", the boy repeated "Tha"
Then "Va", ok, "Va"
last word, the senior citizen pronounced the "Lai" trembling. But the boy was quite comfortable in effortlessly pronouncing the letter "Lai".
Emboldened by the success of this experiment, the old man said:tHA...VA....LAI...THAVALAI,
our hero uttered: THA...VA...LAI... THAVAKKALAI!

There is a fundamental question in Chemistry, asto why does a reaction take place?
the answer is: Because the reactants are unstable in presence of each other.
So, for our singer, When Arival and Suthial were not together, it was easier. Once these two join together, the whole capitalist citadel trembles and what could a poor singer do before your recording theatre?

svv

Anonymous said...

இப்பதிவில் நான் எழுதத்திட்டமிட்டது சொற்கள் பற்றித்தான்.ஆனால் பாருங்கள் சோவியத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டேன்

Nostalgia :)

ச.தமிழ்ச்செல்வன் said...

nostalgia?
proudly YES.
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க அந்த வினவு பார்ட்டிகள்!

Anonymous said...

You could have been discreet in writing this.Once the song is out in public and is in circulation it will be easy to identify the singer.So why create a not so good impression about him by writing this.Had I been in your place I would have used different words and phrases, and, not the lines of the song. There is no need to mention the money (rs 600) here.
To err is human.

ச.தமிழ்ச்செல்வன் said...

to anony

The song is not the same and the words are not the same.I have changed the actual words while writing in the blog.nobody can identify the singer.

The essense is what i wanted to share.dont worry I too have the sense which you are having.

i hope i have nor erred this time.

Anonymous said...

Thanks for the clarification.

வாக்களிக்கலாம் வாங்க... said...

அரிவாள் அரிவால் ஆனது சுவையான கட்டுரை

சொல் இலக்கணம் மறந்து விட்டாலும் படித்தேன் என்பதாவது நினைவிருக்கிறது

சொல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்ததே இல்லை

இப்போது கிடைத்தது மிக்க மகிழ்ச்சி

இ எம் ஜோசப்

venu's pathivukal said...

அன்புத் தோழருக்கு,

அற்புதமான பதிவு.....
எனக்கு உடன் நினைவிற்கு வந்தது, தவளை என்ற சொல்லை உச்சரிக்க முடியாதவன் கதை! எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் அவன், தவக்களை என்றே சொல்கிறவனாக இருக்கிறான். கடைசியில் ஓர் உத்தியைக் கடைப்பிடிக்கிறார் எதிரே நிற்பவர்: ஒவ்வொரு எழுத்தாய் அவனை உச்சரிக்க வைக்கிறார்: த.... என்கிறார்.
அவனும் 'த' என்கிறான். அப்புறம் 'வ', அவனும் 'வ'. இப்போது பயந்து கொண்டே 'ளை' என்கிறாரா, அவன் எந்தச் சிக்கலுன்றி 'ளை' என்று அநாயாசமாகச் சொல்லிவிடுகிறான். அவ்வளவுதான், இப்ப சொல்லு....
த ... வ......ளை....தவளை என்கிறாரா அவர்,
நம்மாள், த......வ........ளை.......
தவக்களை
என்று முடிக்கிறான்.

வேதியல் பாடத்தில் ஒரு அடிப்படை கேள்வி உண்டு. ஒரு வேதி வினை ஏன் ஏற்படுகிறது - ஏன் ஏற்படுகிறது என்றால், வினை புரியும் பொருள்கள் எதிரெதிர் நிறுத்தப்படும் போது நிலைகுலைந்து போவது தான் (because the reactants are unstable in presence of each other) என்பது பதில்.
அரிவாள் தனியாகவும் சுத்தியல் தனியாகவும் இருந்தவரை பாடகருக்கு பிரச்சனையில்லை அல்லவா, இருவரும் ஒரு சேர நின்றால், முதலாளித்துவமே ஆடிப் போகிற போது, பாவம் பாடகர் எம்மாத்திரம்?

அற்புதம் தமிழ்!

எஸ் வி வேணுகோபாலன்

ச.தமிழ்ச்செல்வன் said...

தோழர்கள் வேணு, ஜோசப் இருவரின் வருகையும் பதிவும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிரது.உங்கள் பலத்த வேலைகளுக்கு நடுவே என் தெருவ்ுக்கு வந்தமைக்கு நன்றி.