Thursday, July 15, 2010

பள்ளிப்பாளையம் தோழர் வேலுச்சாமியின் குழந்தைகள்-சில தகவல்கள்

 

vasiya

 

 

 

 

 

பள்ளிப்பாளையம் தோழர் வேலுச்சாமியின் குழந்தைகள் தாரணியும் ரேணுகாவும் முறையே ஆறாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் சேர்ந்துள்ளனர்.ஈரோட்டில் ஒரு கிறித்துவப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கட்டணக்குறைப்புச் செய்யக்கோரிய நம் தோழர்களின் விண்ணப்பத்தை  அப்பள்ளி ஏற்கவில்லை.இடம் கொடுத்துவிட்டார்கள்.நன்றி.கடைசிப்பையன் வினோத் இரண்டாம் வகுப்பு என்பதால் அவனுடைய சித்தப்பா வீட்டிலிருந்து படிக்கிறான்.

பள்ளி விடுதிக்கட்ட்ணம் இருவருக்குமாக மாதம் 1600 ரூபாய் வருகிறது.சேலம் பக்கம் கள்ளக்குறிச்சி அருகே ஒரு சிற்றூரைச்சேர்ந்த நண்பர் ஜாபர் அலி தற்சமயம் குவைத்தில் வாழ்கிறார்.அவர் இக்குழந்தைகளின் விடுதிக் கட்டணத்துக்காக மாதம்தோறும் ரூபாய் இரண்டாயிரம் அனுப்புகிறார்.அவ்ர் முகத்தைக்கூட நான் பார்த்ததில்லை.வலைப்பூ வழியேயும் தொலைபேசி வழியேயும் மட்டுமே அறிமுகமான அவர் மிகுந்த  பொறுப்போடும் மகிழ்வோடும் இதை என் கடமை என்று சொல்லி ஏற்றுக்கொண்டுள்ளார்.இன்னும் திருச்சி நாகநாதன்,டெல்லியிலிருந்து ஒரு நண்பர் எனச் சிலர் உதவி செய்துள்ளனர்.இன்னும் பல வெளிநாடுவாழ் நண்பர்கள் என்ன உதவி தேவை என்று கேட்டுள்ளனர்.

தேவைப்படும் நேரத்தில் அந்த உதவிகளைக் கேட்டுப் பெறுவோம்.திருச்சி எஸ் ஆர்வி பள்ளி முதல்வர் நண்பர் துளசிதாஸ் இக்குழந்தைகளை நமது பள்ளியிலேயே சேர்த்து படிக்க வைத்து நல்ல மதிப்பெண்களோடு அனுப்பலாமே என்று கேட்டார்.குழந்தைகள் தற்சமயம் தமிழ்வழிக்கல்வியில் இருக்கிறார்கள்.ஆங்கிலவழி குறித்த அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.ஒன்பதாம் வகுப்பில் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறோம்.

எல்லா அன்பு நெஞ்சங்களும் இவ்வளவு அக்கறை செலுத்தி தாயும் தகப்பனும் இல்லாத அக்குழந்தைகள்பால் அன்பு பாராட்டுவது மனம் கசியச் செய்கிறது.

நாம் எல்லோருமாகச் சேர்ந்து அக்குழந்தைகளுக்கு விரும்பும் வரையிலான கல்வியை  அளித்துவிடமுடியும் என்கிற நம்பிக்கை வலுவடைந்துள்ளது.ஆளுக்கு ஒரு கை கொடுத்தால் தேர் தன்னாலே ஓடி விடுமல்லவா?

1 comment:

கவின் மலர் said...

கண்ணை வலிக்கிறது இந்த டெம்ப்ளேட்