Monday, July 12, 2010

குறித்து வைக்கிறோம் ராஜராஜசோழரே..

mk

uthapuram 4

உத்தப்புரம்.

மதுரை மாவட்டத்தின் ஒரு சிற்றூர்.

தீண்டாமையின் உச்சபட்ச வடிவமாக தலித் மக்களை ஊருக்குள் நுழையவிடாமல் தடுக்கும் 600 அடித் தீண்டாமைச்சுவருடன் இன்றும் சாதியக்கொடுமையின் ரத்த சாட்சியாக வாழும் ஊர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னனியும் மார்க்சிஸ்ட் கட்சியும் தொடர்ந்து நடத்திவரும் போராட்டத்தால் அச்சுவரில் 15 அடி மட்டும் தமிழக அரசால் இடிக்கப்பட்டது.ஆனாலும் அந்தப் 15 அடிப் பாதையைப் பயன்படுத்த ஆதிக்க சாதியினர் அனுமதிக்கவில்லை இன்றும்.ஆதிக்க சாதியினரின் சார்பாக 24 x 7 நாட்களும் இரவும் பகலும் காவல்துறை அங்கே தவம் கிடந்து தீண்டாமைக்குக் காவல் காக்கிறது.சட்டப்படி அரசு இடித்துக்கொடுத்த பாதை வழியே செல்ல அனுமதி கேட்டு உண்ணாவிரதம் இருந்த மக்களைத் தடியடி செய்து ஊர்த்தலைவர் தோழர் பொன்னையா உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.அவர்களை ஜாமீனில் வெளியே எடுத்தபோது சிறை வாசலிலேயே 2008,2009 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட பழைய வழக்குகளில் மீண்டும் கைது செய்து அடைத்துள்ளனர்.

அந்த 2008 ,2009 வழக்குகள் ஏற்கனவே தமிழக முதல்வர் தலையீட்டின்பேரில் முன்பு கைவிடப்பட்ட வழக்குகளாகும்.

உத்தப்புரம் தலித் மக்களின் இன்னும் இரு முக்கியக் கோரிக்கைகள் அவர்களின் பாரம்பரிய அரச மர வழிபாட்டு உரிமையை மீண்டும் தருவதும் (உண்மையில் இந்த அரசமரத்துக்காகத்தான் முதலில் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டது) பேருந்து நிழற்குடை அமைத்துத் தருவதும் ஆகும்.மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே.ரெங்கராஜன் நிழற்குடை அமைக்க தன் எம்.பி நிதியிலிருந்து ரூ.3 லட்சம் ஒதுக்கினார்.ஆனால் அதைப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்று அப்பணத்தை மதுரை மாவட்ட நிர்வாகம் திருப்பி அனுப்பிவிட்டது.நிழற்குடை கட்டினால் உத்தப்புரத்துச் சாதிமான்கள் கோபித்துக்கொண்டு மலைமேல் ஏறிவிட்டால் என்ன செய்வது என்று மாவட்ட நிர்வாகம் கண்ணீர் வடிக்கிறது.

ஊர்ப்பெரியவர்களை விடுதலை செய்யக்கோரியும் எந்த நியாயமும் அடிப்படையும் இல்லாமல் மறுக்கப்பட்டு வரும் நீதியை உத்தப்புரம் தலித் மக்களுக்கு வழங்கக் கோரியும் தோழர் டி.கே.ரெங்கராஜன்,தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் மாநிலத்தலைவர் சம்பத்,பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் இன்று 12.7.2010 காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக்த்தின் முன் நடைபெற்ற அமைதியான முற்றுகைப்போராட்டத்தின் மீது காவல்துறை ஆத்திரத்தோடு தாக்கித் தடியடி செய்ததில் 40 பேர் காயமடைந்தனர்.

நாளெல்லாம் உழைக்கும் மக்களுக்காகத் தம் உடல் பொருள் ஆவியனைத்தும் தத்தம் செய்து பாடுபடும் செங்கொடி இயக்கத் தோழர்கள் தாக்கப்பட்டார்கள்.தாக்குதல் அவர்களுக்குப் புதிதல்ல.ஆனால் தாக்கிய காவல்துறையினர் தாழ்த்தப்பட்ட மக்களைச் சாதி சொல்லித் திட்டியபடியும் தலைவர்களைக் கெட்ட வார்த்தைகளில் ஏசியபடியும் தாக்கியுள்ளனர்.

சாதி காக்கும் அரசு என்று தந்தை பெரியார் அன்று சொன்னது சமத்துவபுர நாயகராகத் தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்ட செம்மொழி நாயகர் முத்தமிழ்க்காவலர் உலகத் தமிழர் தலைவர் ( மைனஸ் தலித் மக்கள்) கலைஞரின் ஆட்சியைத்தான் என்று அன்று யாருக்கும் புரியவில்லை. மேல்சாதியாரின் வாக்குகளுக்காக ( வேற என்னா புளியங்கொட்டை இருக்கு இதிலே? )அவர்களைக் குஷிப்படுத்த வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக உத்தப்புரம் தலித் மக்களையும் அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் மார்க்சிஸ்ட் தோழர்களையும் குறிவைத்துத் தாக்குகிறது கலைஞர் அரசு. மதுரை தீக்கதிர் புகைப்படக்கலைஞர் லெனின் எடுத்துள்ள புகைப்படங்கள்( கீழே ) கலைஞர் அரசின் வன்கொடுமைகளுக்குச் சாட்சியாக நிற்கின்றன.

குறித்து வைக்கிறோம் ராஜராஜசோழரே

உரிய நேரத்தில் பாட்டாளி வர்க்கம் பழி தீர்க்கும்

uthapuram 10

uthappuram2

uthapuram sampath

uthapuram 3

uthapuram 13

uthapuram 14

uthapuram 8

15 comments:

- யெஸ்.பாலபாரதி said...

//தாக்குதல் அவர்களுக்குப் புதிதல்ல.ஆனால் தாக்கிய காவல்துறையினர் தாழ்த்தப்பட்ட மக்களைச் சாதி சொல்லித் திட்டியபடியும் தலைவர்களைக் கெட்ட வார்த்தைகளில் ஏசியபடியும் தாக்கியுள்ளனர். சாதி காக்கும் அரசு என்று தந்தை பெரியார் அன்று சொன்னது சமத்துவபுர நாயகராகத் தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்ட செம்மொழி நாயகர் முத்தமிழ்க்காவலர் உலகத் தமிழர் தலைவர் ( மைனஸ் தலித் மக்கள்) கலைஞரின் ஆட்சியைத்தான் என்று அன்று யாருக்கும் புரியவில்லை. மேல்சாதியாரின் வாக்குகளுக்காக ( வேற என்னா புளியங்கொட்டை இருக்கு இதிலே? )அவர்களைக் குஷிப்படுத்த வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக உத்தப்புரம் தலித் மக்களையும் அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் மார்க்சிஸ்ட் தோழர்களையும் குறிவைத்துத் தாக்குகிறது கலைஞர் அரசு. //

காலம் பதில் சொல்லும் தோழர். வேறு ஏதும் சொல்லத்தோன்றவில்லை. :(((

vimalavidya said...

Is there any rule of law in Tamil nadu ??No..No..Only a BARBARIC RULING IS GOING ON..We shame for your ruling M.Karunnanithi..You will have to answer to Tamil nadu people.
We strongly condemn the BARBARIC ACTIONS OF POLICE AND DMK REGIME..The incidents totally exposed the anti SC STANDS OF M.kARUNANIDHI,Police and DMK combinations..No democratic values in Tamil nadu .
The High court must take the incidents suo mottu and send notice to Tamil nadu government for undemocratic actions and Police excess violating human rights

vimalavidya said...

The excellant photos send to you by Com.Gavaskar were taken by YOUNG DYNAMIC PHOTOGRAPHER com.Lenin of Theekkathir MADURAI .

Anonymous said...

நான் மணி

சாதி தீண்டாமைக்கு எதிரான தங்களது பங்களிப்புகளுக்கு வாழ்த்துக்கள். உங்களது சட்டமன்ற முன்னாள் தலைவர் திருப்பூர் எம்.எல்.ஏ வை நேற்று முன்தினம்தான் கருணாநிதியை பாராட்ட போகிறார் என்பதற்காக நீக்கியதாக அறிந்தேன். இச்செய்தி உண்மையானால் அவரை நீங்கள் சட்டமன்ற தலவைர் பொறுப்பிலிருந்து நீக்கிய அன்றே அல்லவா கட்சியிலிருந்தும் நீக்கி இருக்க வேண்டும்.

ஒரு கட்சி தலைவனை விமர்சிப்பதையும் புகழ்வதையும் ஒரு சட்டமன்ற தேர்தலுக்கும் தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் இடையில் மாற்றிக் கொள்ளும் கட்சியில் இப்படி ஒரு உறுப்பினர் நடந்து கொள்வது சரிதானே.. இத்தகைய அவரது உங்களால் சுட்டப்படும் தவறுக்கு உங்களது கட்சி பொறுப்பு கிடையாதா..

எல்லாவற்றையும் விட முதன்மையானது தவறின் தன்மை பற்றிய உங்களது கட்சியின் பிரீயாரிட்டி. எந்த குற்றம் முதன்மையானது (அதாவது கட்சியை விட்டு நீக்குமளவிற்கு) கருணாநிதியை பாராட்டி விழா நடத்துவதா அல்லது 25 இலட்ச ரூபாய் முதலாளிகளின் சார்பில் வசூலித்து தொழிலாளிகளின் எட்டு மணி நேர வேலையை அதிகரிக்க சட்டபூர்வ அங்கீகாரம் கோரி முதல்வரை சந்தித்து கையளித்த்தா...

பாற்கடல் சக்தி said...

தனக்கு தானே பட்டம் கொடுத்து தொலையட்டும். ராஜராஜன் பெயரை அசிங்கப் படுத்த உங்களுக்கு உரிமை கொடுத்தது யார் தோழரே?.

veligalukkuappaal said...

தமிழர்களின் நம்பர் ஒன் விரோதி யாரெனில் கருணாநிதிதான். தன் குடும்பத்துக்கோ ஆட்சிக்கோ கேடு எனில் உயிரை எடுக்கவும் தயங்காத குடும்பம் கருணாநிதி குடும்பம். பூலாவரி சுகுமாரன் தொடங்கி, சிம்சன் தொழிற்சாலை, டி.வி.எஸ். தொழிற்சாலை வழியாக செத்து மடிந்த 18 மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர் உட்பட கருணாநிதியால் செத்த தமிழர்கள் ஏராளம் ஏராளம். இவர் தான் தமிழகத்தில் மே தினத்துக்கு பூங்கா கட்டியதாக, மே தினத்துக்கு விடுமுறை விட்டதாக வெட்கம் ஏதும் இன்றி அவ்வப்போது கதைப்பார்.
இப்போதும் ஊருக்கு நடுவே ராட்சச தனமாய் திமிரோடு எழும்பி நிற்கும் சாதிப்பிரிவினைக் கோட்டை சுவரை உடைக்க துப்பில்லாமல் தமிழனை சாதி ரீதியாய் பிரித்து வைக்கும் கருணாநிதி, பெரியார் என்ற மேன்மை மிகு சொல்லை வாயால் சொல்லவும் தகுதியற்ற கருணாநிதிதான் தான் தலித்துக்கு சம்பந்தி என்று ஒரு போர்டை எடுத்து அவ்வப்போது கழுத்தில் மாட்டிக்கொள்வார்.
தமிழ் பேசும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இரக்கமின்றி அழித்துவிட்டு, தமிழர்களை எப்போதும் சாராய மயக்கத்தில் ஆழ்த்தி வேட்டி அவிழ தெருவில் புரள வைத்துவிட்டு, தமிழகத்தில் சனநாயக இயக்கங்களின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை போலீஸ் ப்ளஸ் தி.மு.க. ரவுடிகளை ஏவி ரத்தக்காட்டேறித் தனமாய் அடிதடி லத்திசார்ஜ் கேள்வி கேட்பார் இல்லாமல் லாகப்பில் அடைப்பு, கண்காணாத இடத்துக்கு கடத்தி கொண்டுபோய் வைப்பது போன்ற ரவுடித்தனமான ஆட்சியை நடத்திக் கொண்டு, தமிழனை சாதி ரீதியாய் பிரித்துவைத்துவிட்டு , தமிழகத்தை தன் குடும்ப சொத்தாக மாற்றி மாவட்டத்துக்கு ஒரு பிள்ளை என கூறுபோட்டு விற்றுவிட்டு தமிழகத்தையும் தமிழையும் கருணாதி குடும்பம் சீரழிக்குது.
குரங்கு கையில் பூமாலை.
உடன்பிறப்பே, நமக்கென்ன மனக்கவலை? குறளோவியமும் நெஞ்சுக்குநீதியும் முரசொலியும் படித்து டாஸ்மாக் சரக்கடித்து தெருவில் தூங்குவோமாக! வாழ்க கலைஞர்! வளர்க செம்மொழி!
இக்பால்

எஸ்.கருணா said...

குறித்து வைத்துக்கொள்ள வேண்டியது நாமல்ல..ராஜராஜ சோழர்தான்.தனது ஆட்சிக்காலத்தில் எத்தனை தலித்துகளின் ரத்தம் சிந்தியுள்ளது என அவர்தான் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.இன்னும் எத்தனை காலத்திற்குதான் தலித் வீட்டில் பெண் எடுத்தேன் என்று கதைத்துக்கொண்டே இருப்பாரோ..

S.Raman, Vellore said...

கிட்டத்தட்ட 25 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகின்ற பிரச்சினை இது.
தமிழக அரசால் மிகச்சுலபமாக தீர்க்கக் கூடிய ஒரு பிரச்சினையை அரசியல் உறுதி இல்லாத காரணத்தாலும் ஆதிக்க சக்திகளின் வாக்குகளை பெறுவதற்காக
மட்டுமே பிடிவாதமாக முரண்டு பிடிக்கிறது. உத்தமபுரமாக திகழும் என தான் சட்டசபையில் பேசியதை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாத இவர் உலகத் தமிழர்களின் தலைவராம். பல புயல்கள் இன்று தன்னிடம் அடங்கிப்
போய் தலித் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவலைப்படாமல் இலங்கைத்
தமிழர்களை வைத்து அரசியல் செய்கிற போது மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தீண்டாமை குறித்து நடத்துகின்ற இயக்கங்கள் கலைஞருக்கு
நெருஞ்சி முள்ளாய் உறுத்துகிறது. அடக்குமுறை மூலமாக மவுனமாகி விடுவார்கள் என்று மனப்பால் குடிக்கிறார், அடக்குமுறையையும் அராஜகத்தையும் சந்தித்தே வளர்ந்த இயக்கம் இதற்கெல்லாம் சளைக்காது. சில துரோகிகளை தம் வசம்
இழுத்ததன் மூலம் பலவீனப்படுத்தலாம் என்ற எண்ணமும் பலிக்காது. நாளை
சிதம்பரத்தில் நடைபெறவுள்ள நந்தன் பாதை வழியே நடராஜர் ஆலயம் நுழையும் போராட்டம் செங்கொடியின் உறுதியை அவருக்கு மீண்டும் புரியவைக்கும்.

உங்களுடன் said...

தோழர் தமிழ் அவர்களுக்கு
அந்த புகைப்படங்கள் நான் எடுத்தவை அல்ல. மதுரை மாவட்ட தீக்கதிர் நிருபர்கள் எடுத்தவை. நான் அதனை எனது சக நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் அனுப்பினேன். பேஸ்புக்கில் அப்லோடு செய்துள்ளேன். நான் எடுக்காத புகைப்படத்திற்கு எனது பெயர் போடுவது பொருத்தமாக இருக்காது. ஆகவே இந்த பதிவில் எனது பெயர் இருக்க வேண்டிய அவசியம இல்லை. அதனை தயவு செய்து எடுத்துவிடுங்கள்.

உங்களுடன் said...

சமத்துவ புரம் கண்ட கலைஞர் ஓட்டுக்காக சாதி வெறியர்களோடு கைகோர்த்து நிற்கிறார்.

உரிமைக்காக போராடியவர்களோ
காவல்துறையின் லட்டிக்கு
இரையாகி கிடக்கிறார்கள்.

உரிமையைக் கேட்டால் உதைப்பேன்/கோவிலை கேட்டால் கொமட்டையில் குத்துவேன் என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செய்படுகிறார்கள்,

மக்கள் போராட்டம் வெல்லும் தோழரே

vimalavidya said...

The uthapuram attack photos were taken by Photographere Lenin of Theekkathir Madurai..

veligalukkuappaal said...

தோழர், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே உத்தபுரம் பிரச்னையில் தொடக்கத்தில் இருந்தே முனைப்பு காட்டி வருகின்றது, களத்தில் இறங்கியும் போராடியது, போராடுகின்றது. மற்ற கட்சிகளின் 'கொள்கைகள்', சாதி குறித்த அவற்றின் பார்வைகள் யாவும் உத்தபுரம் பிரச்னைக்கு பிறகு அம்மணமாக தெரிகின்றன. குறிப்பாக 'உலகத்தமிழ் தலைவர்' கட்சியும் 'உலகத்தமிழ் தலைவரும்' பெரியாரின் சிஷ்யர்களாக இருக்கின்றார்களா அல்லது உத்தபுரம் உயர்சாதிக்காரர்களின் அடியாட்களாக இருக்கின்றார்களா என்பதை கடந்த இரண்டு வருட சம்பவங்கள் தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றன. இதன்றி தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே கட்சியும் இயக்கமும் நடத்துவதாக கச்சை கட்டிக்கொண்டும் மீசையை முறுக்கிக்கொண்டும் திரிகின்ற வாய்ப்பேச்சு வீரர்களின் 'கொள்கை'யும் அம்பலமாகின்றது. 'உலகத்தமிழ் தலைவரு'க்கு அம்பேத்கர் விருது, சமூகநீதி விருது, அந்த விருது இந்த விருது என்று விருதுகளை கொடுத்து வண்ணமய விழா நடத்தவே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கின்றதே! இதனை புரியாதது போல் நடிக்கும் குறுக்குச்சால் ஓட்டும் வாய்ப்பேச்சு வெத்துவேட்டு புரட்சிக்காரர்களையும் இங்கே சாடாமல் இருக்க முடியாது. அவர்கள் எப்போதும் போல காடுகளுக்குள் இருந்து கொண்டு தங்கள் 'புரட்சி'யை நடத்திக்கொண்டே இருக்கின்றார்கள், அரிப்பை தீர்த்துக்கொள்ள அவ்வப்போது ப்ளாக்குகளில், மக்களோடு நிற்கும் இயக்கங்களை வசைபாடுவதையும் தங்கள் பிழைப்பாக நடத்திக்கொண்டே இருக்கின்றார்கள். இந்த வகையில் அவர்களும் 'உலகத்தமிழ் தலைவருக்கு' ஆதரவாகத்தான் இருக்கின்றார்களே தவிர அடிவாங்கி சாகும் தாழ்த்தப்பட்ட மக்களோடு இல்லை. வெகுஜனங்களின் மீதும் வெகுஜன இயக்கங்களின் மீதும் வளர்ந்து வரும் தாக்குதல், ராஜராஜசோழன் உள்ளூர கதிகலங்கி இருப்பதையே காட்டுகின்றது. இப்போது அவரது ஒரே கவலை அடித்த கொள்ளையை எப்படி காப்பாற்றுவது, குடும்பத்துக்குள் சச்சரவு இல்லாமல் கொள்ளை பணத்தை எப்படி பங்கு போடுவது என்பதுதான்.
இக்பால்

ச.தமிழ்ச்செல்வன் said...

எதிர்வினையாற்றிய தோழமை உள்ளங்களுக்கு நன்றி.பாற்கடல் சக்தி அவர்களுக்கு ராஜராஜசோழனை விட கருணாநிதி மோசம் என்கிறீர்களா?ராஜராஜனுக்கு 15 மனைவிகள்.ராஜராஜப் பெருந்தச்சன்,ராஜராஜப்பெருநாவிசன் என்பது போல பெரிய கோவிலில் பணியாற்றிய பலருக்கும் தன் பெயரிலேயே விருதுகள் கொடுத்தவன்.கண்ணில் காணும் நிலமெல்லாம் தனதே என்று ஆக்கிரமிக்கும் குணம் கொண்டவன் (இலங்கை வரைக்கும்) எனப் பல அம்சங்களில் கருணாநிதி ராசராசனோடு ஒத்துப் போகிறார்.அவரும் விரிம்பி தனக்கு ராஜராஜன் என்று அடைமொழி கொடுத்துக்கொள்கிறார்.எனவே அப்படிக் குறிப்பிட்டேன்.

அடுத்து நண்பர் மணிக்கு... உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்களுக்கு இருக்கும் அரசியல் ஞானமும் முன் யோசனையும் எங்களுக்கு இல்லாமல் போச்சே தலைவா..

உங்களுடன் said...

enathu peyarai neekkiyathukku nandri thozar

Guru.Radhakrishnan said...

The photographs taken by Mr.Lenin of Theekkathir,Madurai is having the attracities and duel roll of present govt. Because most of the journals existing are having fear in facing the pros and cons.It is a wonderful chance in having seen those pictures in your block.ThankU and please accept my appreciations.