Wednesday, April 15, 2009

பாவத்தில் பெரிய பாவம்

folk-1

folk-2 சென்னை சங்கமம் என்ற பெயரில் கவிஞர் கனிமொழி அவர்கள் முன்முயற்சியில் தமிழகம் முழுவதுமுள்ள நாட்டுப்புறக்கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து ஆங்காங்கு பார்க்குகள் கடற்கரைகள் என மாநகர மக்கள் கூடும் இடங்களில் நிகழ்ச்சிகளைப் ‘போட்டுக்காட்டிய’போது அம்முயற்சிகள் மீது பலருக்கும் பலவிதமான விமர்சனங்கள் இருந்தன.என்றபோதும் நான் அதை வரவேற்கவே செய்தேன்.

கோவில் திருவிழாக்களும் நாங்கள் நடத்தும் கலை இரவு மேடைகளும் தவிர வேறு வாய்ப்புகள் கிட்டாத அக்கலைஞர்களுக்கு இப்படி ஒரு திறப்பு கிடைத்தது பற்றி மகிழ்ச்சியே அடைந்தேன். தவிர தி.மு.க. போன்ற ஒரு கட்சி தங்கள் ஊர்வலங்களுக்கு மட்டுமே நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலை மாறி கௌரவத்தோடு அக்கலைஞர்களைப் பார்க்கும் பார்வையை அக்கட்சிக்குள் கொண்டுவர கனிமொழி முயற்சிக்கிறார் என்றுதான் நினைத்தேன்.

நாட்டார் கலைகள் மற்றும் நவீன இலக்கியம் இரண்டோடும் எவ்விதத் தொடர்புமற்ற தி.மு.க.வுக்குள் இவற்றைக் கொண்டுசெல்லும் ஆர்வம் கவிஞர் கனிமொழிக்கு இருப்பதாக நான் நம்பினேன்.

இப்போது 15 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழலில் திருவண்ணாமலையில் நாட்டுப்புறக்கலைஞர்களைக் கூட்டி தி.மு.கவுக்குப் பிரச்சாரம் செய்ய நாள் ஒன்றுக்கு ஒரு கலைஞருக்கு ரூ.800 வீதம் ஒவ்வொரு கலைஞருக்கும் ரேட் பேசியிருப்பதாக கலைஞர்கள் நம்மிடம் சொன்னபோது அதிர்ச்சி ஏற்பட்டது உண்மை. எல்லாத்திலேயும் வாயை வச்சிட்டாங்களே என்கிற வருத்தம் ஏற்பட்டது. ஒரு கட்சி அரசியல்வாதி என்கிற முறையில் கனிமொழி MP அவர்கள் இவ்வாறு யாரையும் ஏற்பாடு செய்ய முழு சுதந்திரமும் உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.ஆனால் சென்னை சங்கமத்தின் மண்டல அமைப்பாளர்கள் உட்பட அந்த ஏற்பாடு முழுவதையும் அப்படியே தேர்தல் களத்துக்கு மடைமாற்றம் செய்வது வீணாக அவர்மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை வைத்திருந்தோமே என்கிற ஏமாற்ற உணர்வைத் தருகிறது.

அதைவிடவும் இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் கடந்த 35 ஆண்டுகளாக நாட்டுப்புறக்கலைஞர்களோடு – அவர்கள் வாழ்விலும் தாழ்விலும் நாமும் நம் அமைப்பும் கூட நின்றுகொண்டிருக்க காசு என்கிற ஒன்று இல்லாத காரணத்தால் நாம் அவர்களை இப்படி விட்டுக்கொடுக்க நேரிட்டு விட்டதே என்கிற ஆழமான ஆதங்கமும் ஏற்படுகிறது.

திமுக வின் மைய அச்சாகத் திகழும் கலைஞர் குடும்பம் 40களில் அவர்களின் கட்சிக்காகச் சில தியாகங்களைச் செய்துள்ளனர்.பழைய தியாகங்களின் பேரால் பிற்காலத்தில் அவர்கள் செய்த பல பாவங்களிலெல்லாம் பெரிய பாவம் ஜனங்களை corrupt செய்து ஓட்டுக்காகக் கை நீட்டிக் காசு வாங்க massive ஆகப் பழக்கப் படுத்தியதுதான்.அதிமுக வும் விதிவிலக்கல்ல என்றபோதும் திருமங்கலத்தில் தொடங்கி மதுரை நாடாளுமன்றத்தொகுதியில் அண்ணன் அஞ்சா நெஞ்சர் (எந்தப் பானிப்பட் போரில் அண்ணன் களம் கண்டார் என்று தெரியவில்லை போஸ்டரெல்லாம் போர்ப்பரணிதான் ) இப்போதும் நடத்திவரும் பட்டுவாடா மகிமை ஜனநாயக இந்தியா இதுவரை காணாத உச்ச பட்ச பாவச்செயலாகும்.நரேஷ் குப்தாவின் அறிக்கைகளே சான்று.

அந்த வழியில் பார்த்தால் நாட்டுப்புறக்கலைஞர்களை ரேட் பேசி ஏற்பாடு செய்வது ஒன்றும் பெரிய பாவமில்லைதான்.

32 comments:

Anonymous said...

கனிமொழி நல்ல கவிஞர். அவ்வளவுதான்.

ஆயிரம் கனவுகள், நம்பிக்கைகள் இன்னும் விளக்கமுடியாத பலப்பல விடயங்களை சுமந்திருந்த அந்த இளைஞர்களிம் மரணமும், அதற்கு கனிமொழி அளித்த பேட்டியும் இன்னும் நினைவில் இருக்கிறது.

மண்குதிரை said...

உண்மைதான்.

சண்டாளச்சாமி said...

உங்களைக்கூடத்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிக்கும் கலைஞன் என்று நம்பி இருந்தோம். இன்று, கைக்குழந்தை கூட தலை சிதைந்து அழிந்து கொண்டிருக்கும் ஈழ மண்ணின் அவலத்தை கண்டும் காணாது போகும் உமது அமைப்பு கிழித்த கோட்டைத் தாண்ட மனமற்ற நீங்கள் செய்யும் பாவங்களை எங்கே போய் தொலைக்க?

Deepa said...

//அதைவிடவும் இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் கடந்த 35 ஆண்டுகளாக நாட்டுப்புறக்கலைஞர்களோடு – அவர்கள் வாழ்விலும் தாழ்விலும் நாமும் நம் அமைப்பும் கூட நின்றுகொண்டிருக்க காசு என்கிற ஒன்று இல்லாத காரணத்தால் நாம் அவர்களை இப்படி விட்டுக்கொடுக்க நேரிட்டு விட்டதே என்கிற ஆழமான ஆதங்கமும் ஏற்படுகிறது.//

:-( வருத்தம் புரிகிறது, பாதிக்கிறது.

ச.பிரேம்குமார் said...

800 ரூபாய் தருகிறோம்னு சொல்லியிருக்காங்களே... அதை நினைச்சு சந்தோசப்பட்டுக்கனும்னு எனக்கு தோனுது.

சும்மா வந்து ஆடிட்டு போங்கன்னு சொல்லாம விட்டாங்களே

Anonymous said...

நாட்டுப்புறக்கலைகள் நசிவடைந்து வருவது குறித்த ஆழ்ந்த கவலை கொள்வதென்பது முற்போக்கு கலைஞர்கள் ஆகிய நாம் அனைவரும் எந்த அளவு கவனத்தில் கொள்கிறோமோ அந்த அளவு நலிவடைந்த அந்த கலைஞர்க்ளை ஆளுபவர்கள் கையாளுவார்கள் என்பதும் நாம் காணக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது

Anonymous said...

நாட்டுப்புறக்கலைகள் நசிவடைந்து வருவது குறித்த ஆழ்ந்த கவலை கொள்வதென்பது முற்போக்கு கலைஞர்கள் ஆகிய நாம் அனைவரும் எந்த அளவு கவனத்தில் கொள்கிறோமோ அந்த அளவு நலிவடைந்த அந்த கலைஞர்க்ளை ஆளுபவர்கள் கையாளுவார்கள் என்பதும் நாம் காணக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது

ச.தமிழ்ச்செல்வன் said...

சண்டாளச்சாமிக்கு,

இலங்கைத்தமிழர் பிரச்னையில் புலிகளை நாங்கள் ஆதரிக்கவில்லை என்பதைத்தவிர தமிழ்நாட்டில் மற்றவர் எவருக்கும் குறையாத அளவுக்கு போராட்டங்களிலும் நிதி திரட்டி முதல்வரிடம் கொடுத்ததிலும் குறை வைக்கவில்லை.புலிகளை ஆதரிக்காததால் மற்றவர்கள் என்கள் குரலை கண்டுகொள்ளவில்லை.அதற்கு நாங்கல் குற்றவாளிகள் அல்லர்.இது நிலைபாடு மற்றும் புரிதல் சம்பந்தமான ஒன்று.

பாசிச இலங்கை அரசினால் கொல்லப்படும் எம் மக்கள் பற்றிய தீராத்துயரம் எமக்கிருப்பதையும் அங்குள்ள பல நண்பர்களோடு தொடர்பு கொண்டு நாங்கள் பதைப்பதையும் டமாரம் அடித்துக்கொள்ள எமக்குத் தெரியவில்லை என்று வேண்டுமானால் நீங்கள் குற்றம் சாட்டலாம்.

சண்டாளச்சாமி said...

ச.த,

இதைத்தான் முழுப்பூசணியை பிண்டத்தில் மறைப்பதென்பது.

நாங்கள் புலிகளைத்தான் ஆதரிக்கவில்லை, கொல்லப்படும் மக்களுக்காக வருந்துகிறோம் என்று யார் சொல்லவில்லை? காங்கிரஸ் சொல்லவில்லையா? அதிமுக சொல்லவில்லையா? இப்போது கருணா(நிதி) சொல்லவில்லையா?
யார் சொல்லவில்லை? நாங்களும் சொல்லிவிட்டோம் என்றுதானே சொல்கிறீர்கள்.

மேலும்கூட உங்கள் அமைப்பு சொல்லியிருக்கிறது. துன்பப்படும் மக்களுக்கான ஆதரவை தனி ஈழ நாட்டுக்கான ஆதரவாக சிலர்(?) மடைமாற்ற முயல்வதை நாங்கள் அனுமதிக்க முடியாது (உ.ரா.வ-தினமணி).
இன்னும்கூட ஒன்று. முப்பது லட்சம் மக்களுக்காகவெல்லாம் ஒரு தனிநாடா? (வரதராசன் கேள்வி)

இப்போது நீங்கள்,.../பாசிச இலங்கை அரசினால் கொல்லப்படும் எம் மக்கள் பற்றிய தீராத்துயரம் எமக்கிருப்பதையும் அங்குள்ள பல நண்பர்களோடு தொடர்பு கொண்டு நாங்கள் பதைப்பதையும் டமாரம் அடித்துக்கொள்ள எமக்குத் தெரியவில்லை/

அனுதினமும் வதைத்துக் கொல்லப்படும் ஈழ மக்களைக் கண்டு பெரும் படைப்பாளிகளிலிருந்து எளிய மக்கள் வரை எழுப்பும் கையறு பிரலாபத்தை ஒரு இனத்தின் primordial sentiment எனகிறார் தமிழவன். நீங்கள், வெறும் டமாரம் என்கிறீர்கள்.

கட்சிக்கு வாக்கப்பட்ட படைப்பாளிகளான நாங்கள் அப்படியெல்லாம் பிரலாபிக்க மாட்டோம், பெரிய துண்டால் வாயை அமுக்கி அழுது கொண்டிருக்கிறோம், யாருக்கும் தெரியவில்லை, என்கிறீர்கள்.

பா.செயப்பிரகாசம் போன்றோரும் ஏதேதோ 'உளறி'க்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவரை புலிகளின் முகவர் என்கிறீர்கள்.

தமிழவன் போல,செயப்பிரகாசம் போல, எஸ்.வி.ராசதுரை போல, சிந்தனைத்தளத்தில் இயங்குபவராக, ஒரு படைப்பாளியாக, எழுத்துலகில் நீங்கள் ஈழச்சிக்கலில் முன் வைத்ததென்ன? இதோ இன்று, நன்மாறன் அடிப்பட்டதும் துடிக்கிறீர்கள் அல்லவா? உடனே பதிவிடும் பதைப்பு மேலிடுகிறதே, செயலில் உடனே இறங்குகிறீர்களே. நீங்கள் இணையவுலகம் வந்து எத்தனை பதிவு இட்டாயிற்று, எங்கே ஈழம்? ஒரு வேளை, ஈழத்தில் யாரும் இன்னும் நன்மாறன் அளவுக்கு மோசமாக தாக்கப்படவில்லயோ?

வரதராசன்களை நோக்கி இந்த கேள்விகளை முன்வைக்க மாட்டோம், சண்டாளர்களாகிய நாங்கள் அவர்களைச் சந்திக்கும் இடம் வேறு.

நீங்கள் எழுதுபவர் என்பதாலும், பண்பாட்டரசியல் சிந்தனையாளர் என்று நம்பியதாலும்தான் இந்தப் பிரச்சனைகள் (எங்களுக்கு). மற்றபடி இம்மாதிரி குரைப்புகளைக் கேட்கும் போது என்ன செய்யவேண்டுமென உங்கள் ஆசானை(மாதவ்ஸ்) கேளுங்கள், சொல்வார்.
வணக்கம்.

Anonymous said...

thamizselvan can't support separate eelam...is it ok

Anonymous said...

திமுக இப்படிச் செய்வது வியப்பளிக்கவில்லை.அடுத்த முறை அதிமுகவும் இதைச் செய்வார்கள். நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரேட் கூடும், அவ்வள்வுதான். மக்களோ,
அந்தக் கலைஞர்களோ உண்மையை
அறியாதவர்கள் அல்ல.

ஈழப்பிரச்சினையில் மார்க்ஸிஸ்ட்
கட்சிக்கும், காங்கிரஸுக்கும் பெரிதாக
வேறுபாடில்லை. மோடியை திட்டும்
அளவிற்குக் ராஜபக்ஸேயை மார்க்ஸிஸ்ட்கள் திட்டவில்லை.இதை அவர்கள் ஒரு பெரிய பிரச்சினையாகப்
பார்க்கவில்லை.அவர்களுக்கு பாஜகவையும், அமெரிக்காவையும்
எதிர்ப்பதுதான் முக்கிய கடமை.
இஸ்ரேலை எதிர்ப்பார்கள், இலங்கை
அரசு என்று வரும் போது அடக்கி வாசிப்பார்கள். இஸ்ரேலுடன் உறவை
ரத்து செய் என்பார்கள், இலங்கையுடன்
உறவை ரத்து செய் என்று சொல்ல
மாட்டார்கள். இலங்கை அரசிற்கு ஆதரவாக சீனா இருக்கிறது, ஆயுதம் தருகிறது, அங்கு நடப்பது உள்நாட்டுப் பிரச்சினை என்று சொல்லி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடக்கவிடாமல் செய்து விட்டது.
இதையெல்லாம் தமிழ்ச்செல்வன்கள், வரதராஜன்கள் விமர்சிக்கமாட்டார்கள்.
விமர்சித்தால் கட்சியில் இருக்க முடியாது. அமெரிக்கா,பாஜக காட்டும் அக்கறை கூட இவர்களுக்கு இல்லை.
பாலஸ்தீனப் பிரச்சினையில் ஆர்வம் காட்டினால் முஸ்லீம் ஒட்டு கிடைக்கும். இலங்கைத் தமிழரில் பெரும்பாலோர் இந்துக்கள். சிபிஎம் கட்சி அக்கறை காட்டாததற்கு அதுவும் ஒரு காரணம். இன்னொரு உதாரணம் மலேசியாவில் ஹிண்ட்ரப் போராட்டத்தின் போது சிபிஎம் நடந்து கொண்டத விதம்.

Anonymous said...

திமுக, கனிமொழி, அழகிரி ஆகியோர் யோக்கியர்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது? அவர்கள் வரலாற்று நெடுகிலும் கயவர்களே.உங்கள் அமைப்பை சார்ந்தவர்களும் ஜிகினா சட்டை, செண்டு சகிதம் சென்னை சென்று காத்துக்கிடந்தீர்கள், அப்பொழுது எல்லாம் உங்களுக்கு அது புரியவில்லையா.கூட்டனி முறிந்தால் உங்கள் குரல் மாறிவிடுகிறாது.

ச.தமிழ்ச்செல்வன் said...

sandaalachami

vanakkam.i am not at all degrading anyone who raises voice for tamil ealam.i respect them.it is their stand.and it is our stand.that's what i am telling .even small groups have difference in their stand on ealem.even leena and J.P could not go to Delhi unitedly.dont say that we are insensitive to tamils in srilanka.
thanks for your response.

Anonymous said...

'even leena and J.P could not go to Delhi unitedly.'

குறுங்குழு அரசியல்தான் இதற்கு காரணமா?. லீனா அண்ட் கோ நடத்திய கூத்து அவர்களின் அரசியல்
முதிர்ச்சியின்மைக்கு எடுத்துக்காட்டு.
ஈழத்தமிழர் ஆதரவு என்ற பெயரில் இங்கு நடக்கும் கூத்துக்கள் சகிக்க முடியவில்லை. இதிலிருந்து விலகி இருந்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு கோரிக்கை- போர் நிறுத்தம் உடனே செய்யப்படவேண்டும் என்று ஒருமித்து குரல் கொடுப்பதில் யாருக்கும் பிரச்சினை இராது.ஆனால் புலி எதிர்ப்பு vs ஆதரவு அரசியல்,
இந்திய தேசிய எதிர்ப்பு அரசியல்,
தமிழ்தேசிய அரசியல் என பல போக்குகள் குறுக்கும் நெடுக்கும் ஒடிக்கொண்டிருக்கும் போது கரையில் இருப்பதே மேல்.

Anonymous said...

tamil..what is ur stand on eelam issue

ச.தமிழ்ச்செல்வன் said...

to anony

இலங்கையில் இப்போதைய தேவை உடனடிப்போர் நிறுத்தம்.சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையில் அது இருக்க வேண்டும்.அத்ற்கான முயற்சியை இந்திய அரசு மனப்பூர்வமாக எடுக்க வேண்டும்.அணு சக்தி உடன்பாட்டுக்க்காக மத்திய அரசு எடுத்த முயற்சிகளில் 1 சதம் கூட இலங்கைத்தமிழர்களுக்காக மத்திய அரசு எடுக்கவில்லை.ஐ.நா.சபையை தலையிட வைப்பது இந்திய அரசின் effective ஆன தலையீட்டின் மூலம் செய்ய முடியும்.

பாசிச இலங்கை அரசு இன்றுவரை தமிழ் மக்களுக்குத் தான் வழங்கத்தயாராக உள்ளவை இவை என package எதையும் அறிவித்ததில்லை.முழுமையான சுயாட்சி அதிகாரத்துடன் கூடிய தமிழ் மாநிலம்-தமிழ் ஆட்சிமொழி-ம்த்ர்பற்ற மத்திய அரசு என இலங்கை அரசு அறிவிக்கும்படி ஐ.நா.சபை நிர்ப்பந்திக்க வேண்டும்.யாழ் நூலகம் எரிப்பு போன்ற பண்பாட்டுக்காயங்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் தீராப் புண்களுக்கு மருந்து வேண்டும்.

மக்கள்தாசன் said...
This comment has been removed by the author.
மக்கள்தாசன் said...
This comment has been removed by the author.
Anonymous said...

India should have done more.When USA tried to raise the matter in Security Council China intervened and vetoed the debate. Your party did not take not even 1% of the efforts it took in opposing the nuclear deal.Why?. If you need proof read the official weekly of the party and various press statements.
You can criticise the govt. of India. I agree with the view that India should have taken more efforts to bring pressure on Sri Lanka to stop the war. CPI(M) is not willing to condemn China and Pakistan for their support to Sri Lanka through supply of arms. If CPI(M) can criticise Israel and its supporter USA for the crimes committed in Gaza what prevents it
from condeming Sri Lanka and China.
Why should China show so much interest in Sri Lanka and support the war. Ask the intellectuals in your party this question.
The USA for all its faults wanted the war to be stopped. But China dismissed the issue as an internal matter of Sri Lanka.
Why Karat, Yechury are keeping silent on this.If they can shout and organize meetings against Israel with support of other parties why CPI(M) is unwilling to do so in the Tamils issue. Ask yourself these questions. In the
late 80s many persons including
the present Judge of Madras High Court K.Chandru quit CPI(M) over the views of the party in the Sri Lankan tamils issue. I will be glad if the unit in Tamil Nadu puts pressure and make the politbureau understand the feelings
of Tamils.

USA is not killing Sri Lankan Tamils, nor is it supplying arms to the Sri Lanka.China and Pakistan are doing it. So as a Tamil I have every right to condemn
the left which does not criticise China and Pakistan and reserves all its criticism to USA and Israel.

Anonymous said...

'ஐ.நா.சபையை தலையிட வைப்பது இந்திய அரசின் effective ஆன தலையீட்டின் மூலம் செய்ய முடியும்.

True, China opposes any intervention by UN and supports war. UN Security Council can take some decisions only all memebers agree. China is the stumbling block. You cannot ignore this fact.

Joe said...

//
அந்த வழியில் பார்த்தால் நாட்டுப்புறக்கலைஞர்களை ரேட் பேசி ஏற்பாடு செய்வது ஒன்றும் பெரிய பாவமில்லைதான்.
//

எப்படியோ அந்த கலைஞர்களுக்கு பணம் கிடைக்குதேன்னு சந்தோஷப்படுவேன்.

Joe said...

சென்னையில் மரினா கடற்கரை அருகில், மனைவி, மகன், மைத்துனருடன் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன்.

மேலும் சில அலுவலக நண்பர்களை அழைத்து பார்த்தேன், "கரகாட்டத்தையெல்லாம் எவன்யா போய் பார்ப்பான்?" என்று பதில் கிடைத்தது. இத்தனைக்கும் அந்த நிகழ்ச்சிக்கு நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை.

தமிழர்களை போல மரக்கட்டையாக வாழும் சமூகம் எதுவுமிருக்காது என்று எண்ணி கொண்டேன்.

Anonymous said...

சங்கம கலைஞர்கள் அம்பானி ஆதரவில் கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் சென்று வந்த போது என்ன நினைத்தீர்கள் என்பதையும் சொல்லுங்கள் ... என்ன மறுவினை செய்தீர்கள் என்பதையும் சொல்லுங்கள்... ஏனெனில் உங்களது கட்சிக்கு இழப்பு என்ற போது மாத்திரம் விமர்சிப்பதும் சிறுவணிகர்கள் வயிற்றில் அம்பானி போன்ற பெரும் முதலைகள் அடிக்கும் போது அதாவது அந்த கலைஞர்களை வசப்படுத்துதல் வாளாவிருப்பது என்ற உங்களது இரட்டைத் தன்மை எனக்கு இடதுசாரிகளைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தவில்லை

ச.தமிழ்ச்செல்வன் said...

அம்பானி மேட்டர் என்னன்னு உண்மையில் நான் அறியவில்லை.சிறு வணிகர் வயிற்றில் அம்பானி அடிப்பதற்கு எதிராகப் பல போராட்டங்கள் நடத்தினோமே சார்.அதையும் சேர்த்து நீங்களும் எப்பவாச்சும் பேசுங சார்

Anonymous said...

அம்பானிகளிடம் காசு வாங்காதது
இடதுசாரி கட்சிகள் மட்டுமே.பிற கட்சிகளைப் பற்றி -யாருக்கு அதிகம்,
யாருக்கு குறைவு என்பதுதான் கேள்வி.

Anonymous said...

அம்பானிக்கு எதிராக தமுஎச என்ன செய்த்து என்பதுதான் கேள்வி நண்பரே..

மற்றபடி சிறுவணிகர்களுக்கு ஆதரவாக அம்பானி போன்ற பெருமுதலாளிகளை எதிர்த்து என்ன போராட்டம் நடத்தினீர்கள் என இத்தளத்தில் விளக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்

Anonymous said...

mr.writer, i hope ur mother and father as TAMILS. PL think beyond the party commands and concious.

ச.தமிழ்ச்செல்வன் said...

பேரில்லா நண்பரே

அம்பானிக்கு எதிராக நாங்கள் செய்ததெல்லாம் அவ்வப்போது பத்திரிகைகளில் வந்து கொண்டுதான் இருக்கிறது.செலக்டிவ் அம்னீஷியா உள்ளவர்கள் கண்களுக்கு அது ஒரு போதும் தெரியாது.தமுஎகசவின் ஆக்டோபஸ் என்கிர ஆவணப்படம் முற்றிலும் ரெலையன்ஸ் ஃபிரஷ்ஷுக்கு எதிராக எடுக்கப்பட்டு தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

பாருங்க பேரில்லாத சாரே.. நான் என்ன விளக்கம் கொடுத்தாலும் நீங்க சமாதானம் ஆக மாட்டீங்கன்னு எல்லோருக்கும் தெரியும்.உங்க நோக்கமும் கேள்வி கேட்பது அல்ல . உங்க அரசியலின் ஒரு பகுதிதான் இதெல்லாம்.

ச.தமிழ்ச்செல்வன் said...

to mr. anony

my father and mother are tamils.u should know how to behave and talk in a public place like blog.do you know what is called Tamil Culture?

Next whatever u are doing is against the interest of the Tamils.
Dont think yourself as the saviour of Tamils.And start pouring advise to others.And direct me how to think and how not.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

தமிழ்ச்செல்வன் அவர்களே,
"பாவத்தில் பெரிய பாவம்” எதுவென்று படிக்க வந்தேன். நீங்களும், ‘தமிழின’ தலைவரும் செய்வது தான் அது என்று நான் இப்போது நிதர்சனமாக சொல்லுவேன்.

சக பதிவரின் வலைப்பதிவில் படித்தது நினைவுக்கு வருகிறது.

“ஐயா, எங்களுக்கும் தான் முதுகு வலிக்கிறது. நீங்கள் பின்னால் இருந்து குத்தும் ஒவ்வொரு குத்துக்கும்...”

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

புலம்புவதற்கும், அழுவதற்கும், கவிதை எழுதுவதற்கும் மக்கள் நாங்கள் இருக்கிறோம். இவையெல்லாம் செய்வதற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை அவருக்கு.எங்களை போன்றோர் சிறிது காலத்துக்கு முன்பு வரை அவரையே தமிழினதின் முகவரியாக பார்த்து வந்தோம் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

சண்டாளச்சாமி said...

ப்ச், அமேத்ய ப்ரவசனம்.