இரண்டு தினங்களாக தொடர்பயணங்கள்.எழுத வாய்ப்பில்லை.
புதிய நண்பர்கள் வீதிக்கு வந்துள்ளார்கள்.வருக.வணக்கம்.
செல்வநாயகி சொல்வதுபோல சில நாய்களைக் கண்டுகொள்ளாமல் விட்டாலே
போதும்தான்.
நாய் குரைச்சா சூரியனுக்கு என்னா-
சூரியனைப்பாத்து நாய் குரைத்த மாதிரி
என்றெல்லாம் சில பழமொழிகள்
நினைவுக்கு வருகின்றன.
சந்திப்பு நண்பர் குறிப்பிட்ட ஜாக் லாண்டனின் கானகத்தின்
குரல் ஒரு அற்புதமான நாய்ப்படைப்பு.ஜாக் லாண்டன் எழுதிய உயிர் ஆசை
என்கிற கதையைத்தான் லெனின் தன் மரணத்துக்கு முன் வாசித்துக்காட்டச்
சொன்னாராம்.தமிழில் நாய்களைப் பற்றிச் சில அற்புதமான கதைகள் வந்துள்ளன.
கு.அழகிரிசாமியின் ‘வெறும் நாய்’தான் அதில் நம்பர் ஒன்.அவரே வேறு
சில நாய்களையும் எழுத்தில் கொண்டு வந்துள்ளார்.
நைனா கி.ராஜநாராயணனின் ஜெயில் சிறுகதையில் வரும் நாய்
அப்படி மனதில் நிற்கும் நாயாகும்.சமீபத்தில் எஸ்.லட்சுமணப்பெருமாள் எழுதிய
ஒரு அற்புதமான கதை(அவருடைய ஒட்டுவாரொட்டி தொகுப்பில்
-வம்சி புக்ஸ் - உள்ள கதை- தலைப்பு நினைவில்லை) தமிழில் இதுவரை
சொல்லப்படாத ஒரு நாயின் கதையாகும்.
blog இல் எழுதுவது சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
திருமாவளவன் கடிதம் வலி தருகிறது.
நாளை கட்டுரையோடு வருகிறேன்.இப்போது ரயிலுக்கு நேரமாச்சு.
நன்றி.வணக்கம்.
ச.தமிழ்ச்செல்வன்.
1 comment:
வணக்கம் தோழரே...
உங்களது பதிவு எனது ஞாபகங்களைக் கிளறிவிட்டுவிட்டது. அதனை இங்கே http://tamil.subbusos.com/?p=47 பதிவிட்டுள்ளேன்... தயைகூர்ந்து படித்துவிட்டு உங்களது கருத்துக்களைச் சொல்லவும்... உங்களைப் போன்ற எழுத்தாளர்களால் கவரப்பட்டு தற்போது எழுதத் தொடங்கியுள்ளேன். உங்களது விமர்சனம் என்னை மேம்படுத்தும்.
நன்றியுடன்
சுப்பு
Post a Comment