Friday, March 20, 2009

As I am suffering from fever....

ஒரு ஆறுநாள் பயணமாக வேலூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு

வந்திருக்கிறேன்.மலையில் வலை இணைப்புக் கிடைக்கவில்லை.

கீழே வந்து ஜோலார்பேட்டை ரயில்நிலையம் அருகே

நின்று தெருநாய்களுடன் உறங்கிய காலத்தை அனுப்பினேன்.25ஆம் தேதி வரை

என் blog சமூகத்தாரிடம் விடுப்புக் கோருகிறேன்.

அன்புடன்

ச.தமிழ்ச்செல்வன்.

பி.கு.இடையில் மலையிறங்க வாய்ப்புக்கிடைத்தால் தொடர்புகிறேன்.

27 comments:

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணாச்சி நல்லாயிருக்கியளா?? தமுஎச மாநாட்டுல இந்த மொக்கைச்சாமியை மேடையேற்றி அழகு பார்த்த உங்க அன்பை என்னான்னு சொல்றது???


தோழர் பிரகதீஸ் சொன்னார் நீங்கள் எல்லாம் ஏலகிரியில் சந்திக்கப் போவதாக...அசத்துங்கள் :)

ஆ.ஞானசேகரன் said...

வரும் வரை காத்திருப்போம்

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன்,

வலையுலகிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம் !

Anonymous said...

அய்யா...
தாங்கள் தலைமை தாங்கும் தமுஎச அமைப்பானது சொந்தமாக எழுதிய பாடல்களை மாத்திரம் கலை இரவுகளில் பாடாமல் மக்கள் கலை இலக்கிய கழகம் இயற்றி ஒலிப்பேழைகளாக வெளியிட்ட பாடல்களை பாடிவிட்டு அந்த அமைப்பின் பாடல் எனக் கூட குறிப்பிடாமல் தொடர்ந்து செயல்படுவது அநாகரீகம் இல்லையா...?

சென்னையில் 2008 டிசம்பரில் நடந்த தமுஎச மாநில மாநாட்டில் உங்களது அரசியல் கட்சியான சிபிஎம் ஐ சேர்ந்த சென்னைத் தோழர்கள் சிலர் மது அருந்திவிட்டு மாற்று அமைப்புகள் மக்கள் போராட்டங்களுக்காக விநியோகிக்க வைத்திருந்த மக்கள் பணத்தில் அச்சிடப்பட்ட பிரசுரங்களை பிடுங்கி தீ வைத்து எரித்தனர். இதனை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை.?

உங்களது இணையத் தோழர் ஒருவர் DYFI ன் மாநில நிர்வாகியும் கூட. கீற்று இணையத்தளத்தில் உ.ரா. வரதராசன் அவர்களுடைய நேர்காணலுக்கான மறுமொழியில்... ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவர் சிஐடியு வின் திட்டத்தை ஏற்றுக் கொண்டால் உறுப்பினராக சேர்த்துக் கொள்வோம் என்கிறார். எனது சந்தேகம் தமுஎச வுக்கும் இது பொருந்துமா ... ?

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் புரட்சித்தலைவியை ஆதரித்து உங்களது கட்சி போட்டியிடுகின்றதே... இப்போது..'விலைவாசி ரெக்கையடிச்சு விண்ணைத் துழைத்து பறந்தாலும்... மண்ணெண்ண பாமாயில் மாயமா மறஞ்சாலும்...காலிப் பான தூக்கிக்கிட்டு கால்கடுக்க திரிஞ்சாலும்.. வேலயில்லா எம்புருசன் வேதனையில் செத்தாலும்.. அத்தன ஓட்டும் உனக்குத்தாம்மா.. கொண்டாடு கூத்தாடு கும்மாளம் நீ போடு' என்ற பாடலை எப்படி மாற்றிப் பாடி பிரச்சாரம் பண்ணுவீங்க..

லெனின் வரையறுத்த சுயநிர்ணய உரிமையை ஈழத்தமிழர்களுக்கு மறுத்து மாநில சுயாட்சி எனப் பேசுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்ற எளிய உண்மையை மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி ஏன் புரிந்து கொள்ளவில்லை. .

பாரதியை அவனது காலத்தில் வைத்து பரிசீலிக்க வேண்டும் என்ற உங்களது ஆதங்கம் புரிகின்றது. பாரதி இன் கடைசிக்காலமான 20 களில் தான் ரசிய சோசலிச புரட்சி நடந்தது. இந்தியாவில் மக்கள் கலந்து கொள்ளத்தக்க விடுதலை இயக்கம் முன்னணிக்கு வந்தது. அது தோற்றுவித்த தாக்கம்தான் பகத்சிங்கை தோற்றுவித்தது. இளைஞர்கள் கல்வியைத் துறந்து தேசவிடுதலைக்கு அணிதிரண்டார்கள்.
அரசு உத்தியோகத்தை துறந்தது, அன்னியத் துணி எரிப்பு .. என தேசம் கிளர்ந்தெழுந்த தருணம் அது. அப்போதுதான் பாரதி புதுவையிலிருந்து தமிழகம் வர மன்னிப்பு கடிதம் ஒன்றை பிரிட்டிசாருக்கு எழுதுகிறான். எட்டப்ப மகாராஜாவுக்கு சீட்டுக்கவி அனுப்புகிறான். வளர்ப்பு மகனுக்கு பூணூல் போடுகிறான். சாவதற்கு முன் பிராமணர் சங்க மாநாட்டில் கலந்து கொள்கிறான்.

இதே தருணத்தில் மன்னிப்பு கடிதம் எழுதித் தந்து விட்டு அந்தமான் சிறையில் இருந்து வந்த இந்துத்வா வாதிகளை உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.

mani

ச.தமிழ்ச்செல்வன் said...

மணி அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறது.மகைகவின் பாடல்களை எங்கள் குழுக்களில் சிலர் எப்போதாவது பாடுகிறார்கள்.பெயர் சொல்லாமல் பாடுவதை நாங்களும் ஏற்கவில்லை.எங்கள் பாடல்களே நூற்றுக்கணக்கில் இருக்கும் போது அவற்றைப்பாடினாலே போதும்.எனினும் பிற இயக்கத்தோழர்கள் எழுதிய பாடல்கள் நல்ல கருத்துக்களோடு இருந்தால் பாடுவதில் தப்பில்லை.

பாரதி பற்றி விமர்சனமற்ற பார்வை எமக்கும் இல்லை.ஆனாலும் காலத்தில் வைத்துப் பார்க்கையில் இன்ற்ம் கொண்டாடத்தக்கவந்தான்.

மற்றபடி மகைகவின் நக்சல்பாரி அரசியல் பார்வை எமக்கு இல்லை என்பது மணிக்கும் தெரியுதானே.அதுபற்றி நாலுவரியில் பேசித் தீர்த்துவிட முடியாது.

வீதிக்கு வந்தமைக்கு நன்றி.விலகும் புள்ளிகளை விட ஒன்றுபடும் புள்ளி ஏதேனும் இருந்தால் அதையே தேட விரும்புகிறேன் நான்.

ச.தமிழ்ச்செல்வன் said...

அப்துல்லா சார்.என் தெருவுக்கு வந்ததற்கு முகமன்.நீங்கள் மொக்கைச்சாமி என்றால் நாங்களெல்லாம் அப்புறம் என்னவாம்? ஏலகிரி முகாம் முடித்து இப்பத்தான் கீழே வந்தேன்.வணக்கம்.

எம்.எம்.அப்துல்லா said...

//நீங்கள் மொக்கைச்சாமி என்றால் நாங்களெல்லாம் அப்புறம் என்னவாம்?

//

அண்ணே இன்னும் என் வலைப்பூவைப் பார்க்கல போல...பார்த்தா அப்புறம் நீங்க சொன்ன வார்த்தைய வாபஸ் வாங்கிடுவீங்க :)

எம்.எம்.அப்துல்லா said...

தோழர் மணி அவர்களே அகில இந்திய அளவில் பாஜகாவைத் தனிமைப்படுத்தியது அவர்கள்தான் என்பதை மறுக்க முடியாதே.

(நான் கம்யூணிஸ்ட்காரன் அல்ல)

மாதவராஜ் said...

தமிழ்!

//விலகும் புள்ளிகளை விட ஒன்றுபடும் புள்ளி ஏதேனும் இருந்தால் அதையே தேட விரும்புகிறேன் நான்.//

வழிமொழிகிறேன்.

மாதவராஜ் said...

அப்துல்லா!
//அகில இந்திய அளவில் பாஜகாவைத் தனிமைப்படுத்தியது அவர்கள்தான் என்பதை மறுக்க முடியாதே.//

உண்மைதான்.

கந்தசாமி said...


வீதிக்கு வந்தமைக்கு நன்றி.விலகும் புள்ளிகளை விட ஒன்றுபடும் புள்ளி ஏதேனும் இருந்தால் அதையே தேட விரும்புகிறேன் நான்


அய்யா தமிழ்ச்செல்வன் பாஜகவோடு கூட நீங்கள் ஒன்றினையும் புள்ளிகளை கண்டடைவீர்களா! மேற்குவங்கத்தில் பாஜககாரர்கள் கம்யூனிஸ்ட்டுகளை கொன்றதைவிட மாவோயிஸ்ட்டுகள் அதிகமாக கொன்றுள்ளனர். ஒருவிதத்தில் இதுவும் பாசிசம்தான் நக்சலிசம் கருவிலேயே சிபிஎம் எதிர்ப்பு கருவறுப்பு அரசியல் நடத்திக் கொண்டிருக்கையில் நீங்கள் எப்படி அவர்களோடு, எந்தவிதத்தில் ஒன்றினைவீர்கள் என்று விளக்க முடியுமா?

பாரதியார் குறித்து இதுவரை எந்த தமுஎச மேடையிலும் அல்லது ஜீவா உட்பட யாருமே பாரதியாரிடம் விமர்சனம் இருப்பதாக சொல்லவில்லையே! அப்படியிருக்கும்போது நீங்கள் பாரதியார் விசயத்தில் பார்ப்பனர் எதிர்ப்பு அரசியலை முன்வைப்பவர்களோடு ஒன்றினையும் புள்ளிகளைத் தேடுவது ஏனோ? மும்பெரும் தலைவர்களாக பாரதியை ஏற்றுக் கொண்டுள்ள தமுஎச திடீரென இப்படி பேசுவது முரணாக உள்ளதே. இது உங்க கருத்தா அல்லது அமைப்பின் கருத்தா விளக்கவும்.

மேற்குறிப்பிட்ட உங்களது கருத்தை வழிமொழிந்துள்ள மாதவராசும் இங்கே கருத்துப் போராட்டத்தை முன்வைக்கும் நக்சலிசவாதிகளோடு தங்களது கருத்தை வலுவாக முன்வைப்பதற்கு மாறாக இணையும் புள்ளிகளை தேடிக்கொண்டிருப்பது வலைப்பதிவுக்கு பொருந்தலாம் அரசியலுக்கு பொருந்தாது அய்யா!

Anonymous said...

மணி அவர்களிடம் நீங்கள் சேரும் புள்ளியைத் தேடிக் கண்டறிய முடியாது. மாதவராஜும் கண்டுபிடிக்க முடியாது. விலகும் புள்ளி 1964 இல் இருக்கிறது. அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்வது ஒரு வேளை அவர் நிலையில் இருக்கும் மற்றவர்களுக்கு சேரும் புள்ளியை அடையாளம் கட்டலாம்,

ச.தமிழ்ச்செல்வன் said...

கந்தசாமி மற்றும் பேரில்லாதவர் இருவருடைய கருத்துக்களும் பார்த்தேன்.பாரதியை எந்த விமர்சனமும் இல்லாமல் ஏற்பதாக எந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டத்திலும் நாங்கள் கூறியதில்லை தலைவா.பாரதியே அப்படி ஒரு பார்வையை ஏற்றுக்கொள்ள மாட்டான்.”நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை” என்றுதான் பாரதி உயிர்பெற்ற தமிழர் பாட்டில் பேசுகிறார்.பாரதி நமக்குத் தோழன்.நமக்கு சாமி அல்ல.

அப்புறம் நக்சல்பாரிகளோடு ஒன்றிணையும் புள்ளிகள் கண்டுபிடிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.அவர்கள் எம்மைக் கொல்லும் வழியைத் தொடர்ந்து கடைப்பிடித்தபோதும் அவர்களை அரசியல்ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் கூறி வருகிறோம்.

பாஜகவுடன் ஒன்றிணையப் புள்ளிகளைத் தேடுவீர்களா என்றெல்லாம் குண்டக்க மண்டக்க கேட்டால் நியாயமா?பாஜகவிலிருந்து மீண்ட சிலர் இன்று எம்மோடு இயங்குகிறார்கள்- திருப்பூரில்,திருவண்ணாமலையில்,மதுரையில் என்று- அது எப்படி சாத்தியமானது? ஏதோ ஒருவிதமான உரையாடலை ஒரு மட்டத்தில் இருப்பவர்களோடு நடத்தித்தான் ஆக வேண்டும். அத்வானியோடு நாம் ஒன்றிணைய முடியாது.அவசியமில்லை என்பதை வலியுறுத்தியபடியே இதைச் செய்ய வேண்டியுள்ளது நண்பரே.

இங்கு நான் பதிவு செய்பவை என் சொந்தக் கருத்துக்களே . அவை சங்கக் கருத்துக்களோடு முரண்படாதவாறுதான் நிச்சயம் இருக்கும்.ரொம்ப டென்சன் ஆகாதிங்க தலைவா.. தவறுகள் ஏற்பட்டாலும் திருத்திக்கொள்வோம்.எப்போதும் அறிக்கையாகவே மனிதன் வாழமுடியாதல்லவா?

தங்கள் அக்கரைக்கு நன்றி.

Anonymous said...

உங்களுடைய பாடல்களை மட்டுமே நீங்கள் பாட முடியாது என்பதற்கு தக்க உதாரணம்தான் வெலவாசி ரெக்கையடிச்சு விண்ணத் துளைத்துப் பறந்தாலும் என நான் முன்னர் குறிப்பிட்ட பாடல். நல்ல கருத்துக்களோடு உள்ள பாடல்களைப் பாடும்போது அதனை இயற்றிய அமைப்பை குறிப்பிடாமல் இருந்தால் மற்றவர்கள் இந்தக் கூட்டமும் மக.இ.க கூட்டம்தான் என நினைத்து விடுவார்களே.. உங்களது அரசியலும் அவர்களது அரசியலும் கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள வித்தியாசம் போன்றதே... எப்படி ஒன்றிணைய முடியும் என நினைக்கின்றீர்கள்.

ஒன்றிணைய வேண்டுமென்றால் ம.க.இ.க. தனது தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை விடுத்து புரட்சித்தலைவிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு வர வேண்டும். இந்த மானங்கெட்ட பிழைப்பை சுயமரியாதையுள்ள தொழிலாளிவர்க்க அமைப்பு எப்படி ஏற்றுக் கொள்ளும்.

எப்படி பாரதி காலத்தில் வைத்து பார்த்த்தில் கொண்டாடத் தக்கவன் ஆனான். அப்படியானால் வாஜபாயி கூட சுதந்திரப் போராட்ட காலத்தில் காட்டிக் கொடுத்த செயலை நியாயப்படுத்த முடியுமே. அந்தக் காலத்தில் பாரதி கலந்து கொண்ட பிராமணர் சங்கம் முற்போக்காக இருந்த்தா? எட்டப்பனை தேசபக்தனாக்கிதான் ஒரு தேசியகவி வாழ வேண்டுமா? பூணூல் போடாதவர்களை வேசி மகன் என அழைக்கும் பார்ப்பன இந்துமதம் அனுமதிக்க வேண்டும் என்பதற்காக கனகலிங்கத்திற்கு பூணூல் மாட்டியதும் முற்போக்கானதா? ரசிய புரட்சியை ஆதரித்த ஆங்கில கவி நானும் இந்த யுகத்தில் வாழ்ந்தேனே என்று அகமகிழ்ந்து உரைத்தான். ஆனால் ரசிய புரட்சியை திட்டிய கவி பாரதி. இதனையும் மீறி தமிழ் சொல் விளையாட்டும் கவிதை நயமும் வீச்சும் இருப்பதாக நீங்கள் உரைப்பது எழுத்துக்க்கு எழுதுபவன் நேர்மையாக இருக்க வேண்டாம் என சொல்வது போல உள்ளது.

பாரதி பற்றிய உங்களது விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே... மற்றபடி ம.க.இ.க.ன் நக்சல்பாரி அரசியல்பார்வை என எந்த அம்சத்தை குறிப்பிடுகின்றீர்கள். சொல்ல முடியாத அளவு அரசியல் வித்தியாசம் இருக்கலாம். எனினும் ஏதேனும் மூன்று அம்சங்களை எடுத்து அது ஏன் உங்களது நிலைதான் சரியானது என விவாதிக்கலாமே... நாலு வரி சில சமயங்களில் நாற்பதாக மாறுவதைத் தீர்மானிப்பது நமது உள்ளடக்கமும், சமூக விடுதலைக்கான ஆவலும் எனக் கருதுகிறேன். நீங்கள் மூன்று விசயம் எடுக்க தயங்கினால் நான் முன்மொழிகிறேன்.

ஒன்றுபட வேண்டுமென்றால் அதற்கான அரசியல்ரீதியான விவாதம் தேவை. அதனை நீங்கள் செம்மையாக நடத்துவீர்கள் என நம்புகிறேன். இணையத்தில் உங்களது தோழர்கள் பலர் கேட்பது போல விபரம், பெயர், முகவரி என அரசியலற்ற விவாதங்களில் மூழ்கடித்து விவாத்த்தை வீணடிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

லெனின் வரையறுத்த பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை இலங்கைப் பிரச்சினைக்கும் பொருத்துவீர்களா? உங்களது தேர்தல் கூட்டணியில் உள்ள அனைத்து க்கட்சிகளும் ஒரே கொள்கையுடன்தான் இப்பிரச்சினையை அணுகுகின்றீர்களா? இல்லையெனில் உங்களது தேர்தல் கூட்டணி எந்த ஒரு கொள்கையுமற்றது என ஏன் கூறக்கூடாத்.

நண்பர் அப்துல்லா.. நீங்கள் சிபிஎம் இல்லை என நம்புகிறேன். இந்துத்வா வாதிகளை தனிமைப்படுத்திய சிபிஎம் ன் முன்முயற்சி அல்லது நடவடிக்கை எது எனத் தெரிந்து கொள்ளலாமா..

நண்பர் கந்தசாமி இதுவரை உலகமயமாக்கலால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட விவசாயிக்கு எதிரி யார் எனத் தெரியவில்லை. பரிதாபத்துக்குரியவன் அவன். ஆனால் தன்னிடமுள்ள சிறிய நிலத்தை தனது வர்க்கத்துக்கான கட்சி என இதுவரை நம்பிய ஒரு கட்சியே பறிப்பதைப் புரியமுடியாதபடி ஏழை கூலி விவசாயிகள் ஒன்றும் மூடத்தனத்தில் இல்லை. அதற்கு அவர்களது அரசியல் போராட்ட குணத்தை வளர்த்து எடுத்தால் டாடாவுக்கும் சலீம் குழுமத்திற்கும் அடியாள் படையாக வந்த சிபிஎம் கும்பல் எப்படி தங்களை கம்யூனிசத்துடன் தொடர்புபடுத்திக் கொள்கின்றது. இதில் அரசியல் படுத்தி கற்பழிக்க வந்த கயவர்களை மக்களைத் திரட்டி விரட்டியடித்தால் பாசிஸ்டுகள் என்ற வரையறை வேறு. ஜெயா ராமதாஸ் போன்றவர்களை விட இவர்கள் ஜனநாயகவாதிகள்தான்...

பாரதியை நாங்கள் வெறும் பார்ப்பான் என்பதற்காக எதிர்க்கவில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் நேர்மையாக இருக்கமுடியாத ஒரு அற்பமனிதனை அதுவும் தேசமே போராடுகின்ற கதாநாயகர்களை அதிகம் பெற்றிருந்த காலத்தில் கதாநாயகனாக முன்னிறுத்துவதை விமர்சிக்கின்றோம். சனாதன தர்மத்தை காக்க பாப்பன இந்துமத வெறியை ஊட்டியவன் என்பதை இன்று நீங்கள் எதிர்க்கும் பாஜக பாரதிக்கு விழா எடுப்பதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம.


உங்களை நக்சல்பாரிகள் கொல்ல வேண்டிய அவசியம் என்ன.. நீங்கள்தான் வங்க விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டு டாடாவுக்கு ரியல் எஸ்டேட் தரகு வேலை பார்க்கவில்லையே.. ஒரே நாள் இரவில் ஒரு லட்சம் அரசு ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பிய புரட்சித்தலைவியோடு தேர்தலில் உடன்பாடு காணவில்லையே,.. இதற்கெல்லாம் நக்சல்பாரிக்ள வந்துதான் உங்களைக் கொல்ல வேண்டுமா... உங்களது தொழிற்சங்க இயக்கத்தில் லாஜிக் தெரிந்த மானமும் ரோசமும் உள்ள ஒருவர் கூடவா இல்லை...

நண்பர் தமிழ்செல்வன்

நீங்கள் ஒரு அமைப்பின் நிர்வாகி. உங்கள் அமைப்பின் கொள்கை நடைமுறை பற்றி விவாதிக்கலாம் என நினைத்தால், அது எனது சொந்தக்கருத்து என்ற ரீதியில் பேசுவது பொறுப்பற்ற தன்மை போலப் படுகின்றது.

மற்றபடி வழக்கமான உங்களது ஆட்கள் போல சில கேள்விகளுக்கு பதில் தராமல் தவிர்ப்பதன் ரகசியம் என்ன என்றும் விளக்கி எனது முந்தைய பின்னூட்டத்தின் விடையளிக்கப்படாத கேள்விகளுக்கு விடையளிப்பீர்கள் என நம்புகிறேன்.

MANI

ச.தமிழ்ச்செல்வன் said...

நண்பர் மணி அவர்களே வணக்கம்.எப்போதுமே டென்சனாகவே இருக்கிறீர்களே எப்படி உங்களோடு உரையாடுவதாம்?

www.cpim.org இல் போய் உங்கள் வினாக்களுக்கான விடைகளைத் தேடலாமே.உன்கள் கேள்விகள் அத்தனைக்கும் அவர்கல் ஆயிரம் தடவை பக்கம் பக்கமாக பதில் எழுதிப் போட்டு விட்டார்கள். இந்த blog இல் வேறு பல விசயங்கலை எழுதலாம் என்று நினைக்கிரேன்.உங்கள் அறுதப் பழைய கேள்விகளிடமிருந்து தப்பிக்கிரதுக்காக சொல்லவில்லை.அதை அந்தந்த இடங்களில் பேசிக்கொள்வோம். எல்லா இடங்களிலும் ஏன் பேண்டு உழப்ப வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?

நம்ம சண்டை எல்லா இடங்களிலும் நடந்து கொண்டுதானே இருக்கிறது.அந்த மேடைகளில் நடத்திக்கொள்வோம்.

Anonymous said...

நண்பர் தமிழ்செல்வன் அவர்களுக்கு
தங்களது பதில் அதிர்ச்சியாக இருந்த்து. சீரியசான அரசியல் விசயங்களைப் பேசுவதால டென்சனாகும் அல்லது பேசுபவர்களை டென்சன் பேர்வழிகள் எனப் பார்க்கும் உங்களது ரியாக்சனரி டைப்பான நடுத்தரவர்க்க‍ப் பார்வை குறித்து அதிர்ச்சியாக இருந்த்து.

நீங்கள்தான் அந்த சிபிஎம் கட்சியின் இலக்கிய கலை க்கான பிரிவு என நினைக்கிறேன். பாரதியைப் பற்றி நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். பாடல்களைத் திருடி அதன் உண்மையான படைப்பாளிகளை இருட்ட்டிப்பு செய்வது தமுஎச தான் என்ற முறையில் பதில் சொல்ல வேண்டியவர் தாங்கள்தான்.

நீங்க‌ள் சொன்ன‌ www.cpim.org சென்று பார்த்தேன். என‌து கேள்விக‌ளை யாரும் கேட்ட‌தாக‌வும் தெரிய‌வில்லை. அத‌ற்கு ப‌திலை நேர‌டியாக‌ சொன்ன‌துபோல‌ தெரிய‌வில்லை. முடிந்தால் க‌ட் அண்டு பேஸ்டு செய்து இத்த‌ள‌த்தில் வெளியிட்டால் த‌மிழில் வெளியிட்டால் புரிந்து கொண்டு விதவாதிக்க‌ முடியுமே.

அர‌சிய‌ல்ரீதியாக‌ உங்க‌ள‌து அணிக‌ளை ந‌க்ச‌ல்பாரிக‌ளை எதிர்கொள்ள‌ச் சொன்ன‌ தாங்க‌ள், நான் அர‌சிய‌ல்ரீதியாக‌ விவாதிக்க‌ வ‌ந்தால் அத‌னை பேண்டு உழ‌ப்புவ‌த‌ற்கு ஒப்பிடுவ‌தை ஏன் ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌ அர‌சிய‌ல‌ற்ற‌ வாத‌ம் என‌ எடுத்துக் கொள்ள‌க் கூடாது.

இல்லை பேசுவ‌த‌ற்கான‌ இட‌ம் என‌த் தாங்க‌ள் குறிப்பிடும் இட‌ம் எது. கேள்வி அருத‌ப் ப‌ழ‌சாக‌க் கூட‌ இருக்க‌லாம். ஆனால் அத‌ற்கு க‌ம்யூனிஸ்டுக‌ள் ப‌தில் சொல்லாம‌ல் த‌ப்பி ஓடிய‌தை இப்போதுதான் பார்க்கிறேன்.

இப்படி மக்களுக்கான கலை அரசியல் பிரச்சினைகளை விவாதிப்பதை விட ஒரு கம்யூனிஸ்டு விவாதிக்க வேண்டிய முக்கிய விசயாமாகத் தாங்கள் கருதுவது என்பது நாஸ்டால்ஜியாதான் என்றால் உங்களோடு விவாதிக்க எதுவுமில்லை.

பேசிதான் சரியான கருத்துக்கும் அதன்வழி செயல்பாட்டிற்கும் வரமுடியும் என்ற பாலபாடத்தை எனக்குக் கற்றுத்தந்த எனது ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்க இதுதான தக்க தருணம்

ச.தமிழ்ச்செல்வன் said...

நண்பர் மணி அவர்களுக்கு வணக்கம் எந்த மேடையில் என்ன பேசுவது என்றில்லாமல் எல்லா மேடையிலும் மார்க்சிஸ்ட்- நக்சல் கருத்து வேறுபாடுகளைப் பற்றி மட்டுமே பேசுவதைத்தான் கரிசல்காட்டு சொலவடையில் பேண்டு உழப்புவது என்பார்கள்.மார்சியம் கற்ற மார்க்சிய வழியில் போராடுகிற இரு இயக்கத்தோழர்களுக்கு இடையிலே நடக்க வேண்டிய விவாதத்தை blog போன்ற பொதுமேடையில் நடத்த வேண்டிய அவசியமில்லை.மார்க்சிஸ்ட்டுகள் டியாக்சனரிகள் என்று தெரிந்துதானே 68இல் நக்சல்பாரிகள் பிரிந்து போனார்கள்.இன்றுவரை நக்சல்கள் மார்க்சிஸ்ட்டுகளை இடதுசாரிகள் என்றுகூட ஏற்றதில்லை. நந்திகிராம் என்கிற கற்பனைப் பிரச்னையும் சிங்கூரும் இன்றுதானெ வந்தது.ஆனால் மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகளாகவே இடைவிடாத மார்க்சிஸ்ட் எதிர்ப்பு நிலையைத்தானே நக்சல்கல் மேற்கொண்டார்கள்.ஆகவே அவர்கலை அரசியல்ரீதியாக அணுக வேண்டும் என்று ஒருதரப்பாக மார்க்சிஸ்ட்டுகள் மட்டுமே காலம் காலமாகக் கூறி வருகிறார்கள். நக்சல்கள் அல்ல. அவர்கள் பிறப்பிலிருந்தே மார்க்சிஸ்ட்டுகளை அவதூறும் நேரடியாகத் தாக்குவதும் என்றுதான் இறங்கினார்கள்.

அவர்கள் விவாதம் என்று புரிந்து கொண்டிருப்பது பொதுவான மேடைகளில் மார்க்சிஸ்ட்டுகளைப் பழிப்பது மட்டுமே.

மார்க்சியம்-லெனினியம் படிக்காத மக்களிடம் முதலில் அரசு என்றால் என்ன அரசியல் என்றால் என்ன புரட்சி என்றால் என்னா என்று பாலபாடம் நடத்துவதுதான் புத்திசாலித்தனம்.அவசியம்.

தனியாக புத்தகங்கள் எழுதி நாம் நம் அரசியல் கருத்து வேறுபாடுகலைப் பேசுவதுதான் சரி.இடதுசாரி என்றே ஏற்காத எம்மோடு விவாதம் நடத்த நீங்கள் முன்வருகிறேன் என்பதே இந்த வெளியை நீங்கள் உங்கள் விருப்பத்துக்குப் பயன்படுத்தத்தான்.

உங்கள் பாட்டுகலை பேர் சொல்லாமல் பாடுவதை நானும் ஏற்கவில்லை என்று அன்றைக்கே கூறிவிட்டேன்.ரெண்டு பாட்டைப் பாடிய குற்றத்துக்காக என்னதான் தண்டனை தர வேண்டும் என்று கூறுகிறீர்கள்? ஏதோ நாங்களேல்லாம் சுத்த முட்டாப்பசங்க மாதிரி தொடர்ந்து அதையே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.

மார்க்சிஸ்ட்டுகளை இடதுசாரிகள் என்று ஏற்றுக்கொண்டால் மேற்கி வங்க அரசை இஅடதுசாரி அரசென்று நீங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே உங்களோடு பேச முடியும்.

எதற்குத் தேவையில்லாமல் இந்த ரியாக்சனரிகளோடு பேசி உங்கள்் புரட்சிகரமான நேரத்தை வீணாக்குகிறீர்கள்?நங்கள் நோஸ்டால்ஜிக்காக எதையாவது கிறுக்கிக்கொண்டு போகிறோம்.புரட்சி blog ஒன்று ஆரம்பித்து நீங்கள் எழுதுங்களே. நான் அந்தப்பக்கமே வரமாட்டேன்.


நன்றி.வணக்கம்.

Anonymous said...

நானும் உங்களோடு விவாதிக்க ஒன்றுமில்லைதான். ஆனால் ம•க•இ.க வின் அரசியல் கசப்பதும் அவர்களது பாடல்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதும் ஒரு சராசரி மனிதனுக்கு கூச்சமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். அந்த நேர்மை இருப்பவர்கள், பாடல் எங்களது எதிரிகள் எழுதியது அல்லது சீர்குலைவுவாதிக்ள எழுதியது என்றாவது அறிவித்து விட்டுப் பாட வேண்டும். அப்படி நேர்மையாக நடந்து கொள்ளாத உங்கள் அமைப்பு இனிமேல் அப்படி அறிவித்து பிறகு பாடுகின்றோம் என்ற உறுதிமொழியை அழிக்க்க் கூட எந்த நேர்மை உங்களைத் தடுக்கின்றது.

எனக்கு ஒன்று புரியவில்லை... அரசியல்ரீதியாக அணுகுவது என்பது சித்தாந்தம், திட்டம் நடைமுறை போன்றவற்றுடன் இணைந்த்துதானே.. அல்லது சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலை மட்டுமே குறிப்பிடுகின்றீர்களா...

நக்சல்பாரிகள் உங்களை எதிர்ப்பதற்கு காரணம் நீங்கள் புரட்சிக்கு எதிரானவர்கள் என்ற அரசியல் காரணத்தால்தான்... நீங்கள் அரசு என்றால் என்ன என்று மக்களுக்க பாடம் எடுத்த லட்சணம்தான் சிங்கூரும் ந்ந்திகிராம்மும் அதற்கு முன் நக்சல்பாரியும்... ம‌க்க‌ளுக்கு நீங்க‌ள் எதை அர‌சு என்றும் எப்ப‌டி அத‌னை மாற்ற‌ வேண்டும் என‌ச் சொல்கின்றீர்க‌ள் .. இத‌ற்கு ந‌க்ச‌ல்பாரிக‌ள் சொல்லும் திட்ட‌த்தை சார்ந்து பேசாம‌ல் மார்க்சு, லெனின் போன்ற‌வ‌ர்க‌ள் சொன்ன‌ வ‌ழிமுறைக்கு நேர்மையாக‌ இருப்ப‌தை மேற்கோளுட‌ன் சொல்லுங்க‌ள். அது எப்ப‌டி அவ‌ர்க‌ள‌து கூற்றுப்ப‌டியே த‌வ‌று என‌ நிரூபிக்கிறேன்... இதுவும் பேண்டு உழ‌ப்புவ‌துதான் என்றால் எந்த‌ க‌ரிச‌ல் பூமி உங்க‌ளுக்கு அதைக் க‌ற்றுத் த‌ந்த‌தோ அதே க‌ரிச‌ல் பூமியில்தான் நானும் ஒரு கால‌த்தில் பேண்டு உழ‌ப்பினேன். அவ்வ‌ள‌வு சிறுபிள்ளைத்த‌ன‌மான‌தா அர‌சிய‌ல் விவாத‌ம்...

உங்களை பழிப்பதற்காக எவனும் கட்சி நடத்த மாட்டான். ஆனால் மார்க்சியத்துக்கு எதிரான அல்லது மக்களது விடுதலைக்கு எதிரான எந்த அமைப்பையும் திரைகிழித்து காட்டி மக்களை புரட்சிக்கு அணி திரட்டுவது ஒவ்வொரு புரட்சியாளனின் கடமை. அதனை கட்சிகளுக்குள் நடத்த வேண்டும் என்று கூறிக் கொண்டு மக்களுக்கு அது தெரியக் கூடாது என நினைப்பது அறிவு நாணயம் மிக்க‍ எவரும் கோராத ஒன்று. இன்னும் சரியாகச் சொல்வது என்றால் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் வேலை செய்யும் அலுவலகம், குடும்பம், சொந்த கிராம்ம்,..உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அனைத்து தளத்திலும் புரட்சிக்கு எதிரான ஒவ்வொன்றையும் எதிர்த்து போராட வேண்டியதை தனது அகவிருப்பமாகவும் மாற்றி இருக்க வேண்டும். அப்படி செய்ய முடியாதவர்கள் அதற்காக சுயவிமர்சனத்துடன் தொடர்ந்து போராட வேண்டும். மற்றபடி இதற்கு விருப்பம் இல்லாதவர்களுக்கு புரட்சி என்ற வார்த்தையின் மீது ஒரு கிரேஸ் இருக்கலாம். மற்றபடி புரட்சிக்கும அவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

மக்களிடன் செல்வது என்பதும், இணையத்தில் பேசுவது என்பது ஒன்று இல்லை என்பது அளவுரீதியாக ஒப்பிட்டால் உண்மை போலத் தெரிந்தாலும், இது ஆதாரமான விசயங்களுடன் கூடிய அனைத்து அறிவுஜீவிகளும் படிக்க இயன்ற ஊடகம் என்பதால் தன்மை அளவில் ஒரு சார்பு மக்களிடன் சென்றடைவதாகத்தான் அர்த்தம். நீங்கள் அரசு புரட்சி பற்றி இணையத்தில் அனைவருக்கும தெரியும் என நினைத்துதான எழுதுகினைறீர்கள். ஆனால் அது உண்மையல்ல•. எனவே பாலபாடத்தை புத்திசாலித்தனமாக நீங்களே ஆரம்பிக்கலாம். ஒரு வேளை அரசியல் பேச இது இடமில்லை எனக்கருதுவது வெளியில் சொல்ல முடியாத அந்தரங்கங்களை பேச எத்தனிக்கும் அற்பவாதச் செயலுக்கு ஒப்பாகத்தான் இதனைப் பார்க்க முடியும•

அரசியல் வேண்டாம் ஆனால் மார்க்சியம் வேண்டும்தானே... கலை இலக்கியத்தை எப்படி மார்க்சிய ரீதியில் அணுகுவது என்ற பாலபாடமாவது எடுக்கலாம்தானே... அதுவும் டென்சனான மேட்டரா...

உங்களது அரசை இடதுசாரி அரசு என்று ஏற்றுக் கொள்ளச் சொன்னீர்கள். அப்படி ஒத்துக் கொண்டால்தான் விவாதிக்க முடியும் என்ற ஜனநாயக்தை எமக்கு அளித்தீர்கள். சின்ன சந்தேகம். அரசு என்பது ஆளும்வர்க்கத்தின் ஒடுக்குமுறைக் கருவி என்ற வரையறை மார்க்சிய வரையறைதான் என நினைக்கிறேன். இதுவும் நக்சல்பாரிகள் திரித்த்து என் சொல்லி விடாதீர்கள்.

இடதுசாரி அரசு என ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டால் அங்கு ஆளும் வர்க்கம் எது.. அதன் நேச மற்றும எதிர் சக்திகள் யார்... பால பாடத்தின் எளிய இந்தக் கேள்வி உங்களது அக்க்கண்ணைத் திறக்குமென்றால் சந்தோசம்.. அகங்காரக் கண்ணைத் திறந்தால் எங்களுக்கு வேலை உங்களோடும்தான் உள்ளது.

நாம தனியா புத்தகம் எழுதித்தான் மக்கள் பற்றிய அரசியல் பிரச்சினைகள பேசித் தீத்துக்கனும் என்ற உங்களது கருத்து சிரிப்பாக வந்த்து. நாம மக்களப் பத்திதான பேசப் போறோம்... என்னமோ தண்ணி அடிக்கவோ அல்லது பரத்தையர் வீதிக்கோ போகப் போற மாதிரி தனியாப் பேசணும் சொல்றது உங்க கட்சித் திட்டம் கொள்கை பற்றி உங்களுக்கே அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லாத மாதிரி தோன்ற வைக்குதே.. மடியில கனம் இல்லாட்டி வழி மேல என்ன பயம்...

சந்திப்பு said...
This comment has been removed by the author.
ச.தமிழ்ச்செல்வன் said...

ரொம்ப சந்தோசம்.நீங்களும் கரிசல் காடுதானா. ரொம்ப ரொம்ப சந்தோசம்.நல்ல இருக்கிகளா அண்ணாச்சி.

அரசியல்னா என்னான்னு தெரிஞ்சுதான் நாங்க செயல்படுகிறோம்.அரசியல் இல்லாமல் உலகத்தில் இந்த blog உட்பட எதுவும் இல்லை.நீங்க உங்க agenda வுக்கு என்னை இழுக்கறீங்க அண்ணாச்சி. ஆனா நான் எனக்கான அஜெண்டாவுடந்தான் இங்கே வந்திருக்கிறேன். எங்களுக்கும் அறிவு உண்டு அண்ணாச்சி.

ம.க.இ.க பாட்டுகளிப் பாடக்கூடாதுன்னு தடை உத்தரவு போட்டுடுறோம் அண்ணாச்சி.

உங்க பாட்டை நாங்க எங்க மேடையில் பாடியதாலே எங்க அமைப்புக்கு தவறுதலா வந்து சேர்ந்துவிட்ட அந்த 13 லட்சத்தி 30 ஆயிரம் பேரை நீங்களே கூட்டிட்டுப் போங்க அண்ணாச்சி.போதுமான அளவுக்கு உங்க சண்ட மாருதத்துக்கு இங்கே இடம் கொடுத்தாச்சு.இன்னும் திருப்தி ஆகலேண்ணா அதெ அறுதக் கேள்விகளை பழையபடி ஒரு பத்துப் பக்கம் எழுதுங்க அண்ணாச்சி.

நன்றி .வணக்கம்.போயிட்டு வாங்க.உடம்பப் பாத்துக்கிடுங்க.பொழச்சிக் கிடந்தா என்னைக்காவது பாப்போம்.

Anonymous said...

ம•க•இ.க வினரின் பாடல்களை கேசட்டுகளாகப் போட்டு த•மு.எ.ச சம்பாதித்துக் கொண்டு இருக்கிறதே.. அதனை எப்போது நிறுத்துவீர்கள்..
-Mani

ச.தமிழ்ச்செல்வன் said...

மணி சார் ம.க.இ.க பாட்டுகளை வித்து த.மு.எ.க.ச. சம்பாதிக்குதுன்னு எழுதறப்போ உங்களுக்கே சிரிப்பு வரலியா? உங்க பாட்டுகள் மீது உங்களுக்கு மதிப்பு இருக்க வேண்டியதுதான் ஆனா இது ரொம்ப ஓவராத் தெரியலே?

சரி.இருந்தாலும் என் வலைத்தளத்தில் எழுதிவிட்டதால் பதில் சொல்லுகிறேன். எங்களிடம் உறுப்பினராக உள்ள 16000 பேரில் ஒருவர்கூட இத்தகைய ஈனத்தொழில் செய்யவில்லை.நாங்கள் நடத்தும் விழாக்களில் கலை இரவுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதால் இதுபோல pirate செய்து CD விற்பவர்கள் அங்கேயும் வந்து கடை விரித்திருக்கலா.அப்பேர்வழிகள் எங்கள் பாடுகளையும்கூட pirate செய்து விற்பதைக் கண்டுபிடித்து கண்டனம் செய்திருக்கிறோம்.

எங்கள் உறுப்பினர் அப்படிச் செய்வதாக முகவரியுடன் ( உங்கள் முகவரி கேட்க மாட்டேன்) தகவல் தந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

Anonymous said...

கரிசல்குயில் கிருஷ்ணசாமியின் பாடல்கள் என்ற தலைப்பில் வந்த அந்த கேசட்டில் ம•க•இ.க பாடல்கள் உள்ளது. இவர் உங்களது அமைப்பின் உறுப்பினர்தான் என நினைக்கிறேன்... உங்களது மேடைகளில் இவரே அந்தப் பாடல்களைப் பாடியுள்ளார். மதுரையிலிருந்து வெளிவருகின்றது.

ச.தமிழ்ச்செல்வன் said...

கரிசல்குயில் கிருஷ்ணசாமியின் பாடல்கள் என்று இதுவரை ஒரு கேசட் கூட நாங்கள் வெளியிட்டதில்லை.எவனோ pirate செய்து எல்லாப்பாட்டுகளையும் கலந்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான்.அதிச் செய்தவன் ம.க.இக்.க காரனாகக்கூட இருக்கலாம் என்று விதண்டாவாதம் பேசமாட்டேன்.

எம் மீது நீங்கள் கொண்டுள்ள அளப்பரிய அவமரியாதை உணர்வை ஒரு கணம் ஒதுக்கி வைத்துவிட்டு சம கால வியாபாரப் புத்தி பற்றிய யதார்த்தமான அறிவோடு யோசித்தால் இது உங்களுக்கும்கூட எளிதாகப் புரியும்.

Anonymous said...

ம•க•இ.க• பாடல்களைத் திருடி தமுஎச அமைப்பினர் கேசட்டை ராம்ஜி ஆடியோஸ் மூலமாக வெளியிட்டனர்.
அதன் ஒரு பிரதியை 1994ல் தூத்துக்குடி சார்லஸ் திரையரங்கத்திற்கு அருகில் நடந்த தமுஎச கலை இரவில் சிவப்பு சட்டை அணிந்த தோழர்கள் விற்றுக் கொண்டு இருந்தனர். நானும் ஒரு பிரதி வாங்கினேன். தற்போது வேறு ஒருவரது வெளியீடாக வருவதாக அறிந்தேன். ஆனால் அதற்கான ஆதாரம் கையில் இல்லாத்தால் எதுவும் கூறவில்லை.

அந்தக் காலத்தில் ம•க•இ.க என்ற அமைப்பு என் அறிவுக்கு எட்டியவரையில் 1996 வரை தூத்துக்குடியில் அறிமுகமாகவில்லை..

ச.தமிழ்ச்செல்வன் said...

சிவப்புச்சட்டை போட்டவனெல்லாம் சிபிஎம்தான் என்று நீங்கள் நம்புவது மகிழ்ச்சியளிக்கிறது.ஆதாரம் ஏதுமில்லாமல் ஊகத்திலேயே இத்தனைநாள் திருடிவிட்டார்கள் விற்றுப் பிழைக்கிறார்கல் என்றெல்லாம் ஒரு பெரிய அமைப்பின் மீது அவதூறு பரப்பிவிட்டீர்கள்.பரவாயில்லை இப்போதும் கேட்கிறேன் உங்கள் கைவசம் உள்ள கேசட்டை ஒரு பிரதி எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பினால் அதில் உள்ள குரலை வைத்துக்கூட யார் பாஅடியது என்று எங்களால் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும். தமுஎகச மாநில மைய அலுவலகம்,57/11,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625001.

தவிர ராம்ஜி என்பவர் ம.க.இ.க ஆதரவாளர் என்றும் தஞ்சாவூரில் ஒரு ம.க.இ.க கூட்டத்தில் எம்மைத் தாக்கி ஆவேசமாகப் பேனார் என்றும் கேள்விப்பட்டேனே தலைவா?

Anonymous said...

சிவப்பு சட்டை போட்டவன் எல்லாம் சிபிஎம் என்று நம்புவதற்கு எதுவுமில்லைதான். ஆதிபராசக்தி கோவிலுக்கும் அந்த கலர் டிரஸ்ஸ்ல் தான் போகிறார்கள். பச்சை டிரஸ் போட்டு போயஸ்தோட்டத்து ஆதிபராசக்தியை பார்க்க போன சிபிஎம் தோழர்கள் கூட இருக்கிறார்கள்தான்.

ஆனால் தனது கூட்டம் ஒன்றில் சிவப்பு சட்டை போட்டு கடைவிரித்து இருந்தால் எந்த கம்யூனிஸ்டு கட்சியும் குறைந்த பட்சம் அவர்கள் யார் என்பதை தெரிந்து கொண்டு அவர்கள் ஏதாவது தகிடுத்த்தம் செய்தால் அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என கருதுகிறேன். கார்த்திக் கூட்டத்திற்கும் உங்கள் கூட்டத்திற்கும் உள்ள மிக முக்கிய வித்தியாசம் அது என நினைக்கிறேன்

அதில் பாடியுள்ள குரல் கரிசல்குயில் என அறியப்படும் கிருஷ்ணசாமி என்பவர். பிரதியை விட ஒரிஜினல் கேசட்டை தருவதுதான் முறை அதனை மக்க்ள மன்றத்தில் முன்னர் தாம்பரத்தில் பாடியபோது கையும் களவுமாக பிடிபட்டதுபோல தருகிறேன்.

ராம்ஜி ஆடியோஸ் அல்லது ராம்ஜி என்ற பெயரில் பல ஆடியோ நிறுவனங்கள் மதுரையில் இருப்பதாக அறிகிறேன். அவற்றில் ஒன்று நாட்டுப்புற ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் கூட இயங்குகிறது. மற்றபடி ராம்ஜி பாலன் பற்றிதான் நீங்கள் குறிப்பிட்டீர்கள் என நினைக்கிறேன். எனக்கு கூடத்தான் தமிழ்செல்வன் என்ற ஒரு கல்லூரிக்கால நண்பன் ஒருவன் இருந்தான். அறிவுநாணயம் மிக்க அவன் எப்போதும் லாஜிக் உடன்தான் பேசுவான் .. அதற்கு என்ன செய்ய‌

-mani