தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
மாநிலக்குழு
11,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625011
421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018
நக்கீரன் அலுவலகத்தின் மீது தாக்குதல்
தமுஎகச கண்டனம்
முதல்வர் ஜெயல்லிதா அவர்கள் மீது அவதூறுச் செய்தி வெளியிட்ட்தாக்க் கூறி சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகத்தை அதிமுக தொண்டர்கள் 300 பேர் திரண்டு சென்று தாக்கி அங்குள்ள பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர்.ஒரு சட்ட மன்ற உறுப்பினர் தலைமையில் இந்த அராஜகம் நிகழ்ந்துள்ளது.பத்திரிகையில் செய்தி வெளியிட்டால் அதன் மீது கருத்து மாறுபாடு இருக்கும் பட்சத்தில் சட்டபூர்வமாக வழக்குத்தொடுத்தோ பிரஸ் கவுன்சிலில் முறையிட்டோ எதிர்ப்பைத் தெரிவிக்க ஜனநாயகப் பூர்வ வழிகள் பல இருக்க அதையெல்லாம் கைவிட்டு இப்படி நேரடித் தாக்குதலில் ஆளும் கட்சியினரே இறங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது.முதல்வர் அவர்களும் இச்செயலைக் கண்டனம் செய்யாத்து வருத்த்துக்குரியது. திருச்சியில் நக்கீரன் பத்திரிகையை எரித்தபோது அதிமுக தொண்டர் ஒருவர் தீக்காயத்துக்கு ஆளானதும் நடந்துள்ளது.இத்தகைய கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வன்முறைகளை தமுஎகச வன்மையாக்க் கண்டனம் செய்கிறது.
அதே சமயத்தில் பரபரப்பான வியாபாரத்துக்காக செய்திகளை வெளியிடுவதில் எந்த எல்லைக்கும் செல்ல்லாம் என்கிற நக்கீரனின் போக்கை ‘பத்திரிகை சுதந்திரம்’ என வரவேற்க முடியாது என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்
ச.தமிழ்ச்செல்வன் சு.வெங்கடேசன்
மாநிலத்தலைவர் பொதுச்செயலாளர்
மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்/வலைத்தளத்தில் வெளியிடுமாறு வேண்டுகிறோம்
சு.வெங்கடேசன்
9-1-2012
1 comment:
தலைப்பு நக்கீரனுக்கும் தமிழக அரசுக்கும் கண்டனம் என்றே இருக்கவேண்டும். இப்படி தலைப்பு வைப்பதின்மூலம் நீங்கள் நக்கீரனை தூக்கிப் பிடிக்கிறீர்கள் இல்லையா. ஒரு முதல்வர் ஆட்டுக்கறி தின்றால் என்ன மாட்டுக்கறி தின்றால் என்ன...அதான் செய்தியா...நக்கீரன் பத்திரிக்கையாளரா இல்லை கசாப்புக்கடைக்காரரா.அட்டைப் படத்தில் கறியைப் பத்திப் பேச.
Post a Comment