Friday, March 12, 2010

எங்கள் தோழர் வேலுச்சாமி

murder

 

முதலில் 20.2.10 மற்றும் 12.3.10 ஆகிய இரு தினங்களில் தீக்கதிரில் வந்த செய்திகளை வாசிக்க வேண்டுகிறேன்.

20-02-2010 தீக்கதிர் செய்தி

பள்ளிபாளையத்தில் பாலியல் வர்த்தக பயங்கரம் : கடன் வலையில் சிக்கிய இளம்பெண்ணின் அவலம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் சுமார் 20 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி வாழ்கின்றனர். இப்பகுதி ஏழைத் தொழிலாளிகள் அன்றாடம் தங்களது வாழ்க்கையை ஓட்ட கடனை உடனை வாங்கி தட்டுத் தடுமாறி நிற்க வேண்டிய நிலையே உள்ளது.
இவர்களின் வறுமையைப் பயன்படுத்தி தறி உரிமையாளர்கள் அட்வான்ஸ் பாக்கி என்ற பெயரில் சுமார் ரூ1 லட்சம் வரை கொடுத்து இரவு பகலாக 12 மணி நேரம் தொடர்ந்து வேலை வாங்குகின்றனர். அதுவும் மாதம் ஒரு முறை அமாவாசை தினத்தன்று மட்டும் இந்த தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். மற்ற நாட்களில் தவறாமல் வேலைக்கு செல்ல வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றாலோ நல்லது கெட்டது என வெளியில் சென்றாலோ தர்ம அடி கிடைக்கும். பாக்கியும் திருப்பி கொடுக்க முடியாமல், உரிய கூலியும் இன்றி அல்லல்படும் அவலம் அன்றாடக் காட்சியாக இங்கு இருந்து வருகிறது. தொழிலாளர் சட்டங்கள் கூட கிட்ட நெருங்குவதில்லை. இதனால் ஒரு சாண் வயிற்றுக்காக தனது கிட்னியை விற்ற அவலமும் அரங்கேற்றப்பட்டதும் இப்பகுதியில்தான்.
விலைவாசி உயர்ந்த அளவிற்கு கூலி உயரவில்லை. வீட்டு வாடகை, மின் கட்டணம் உள்ளிட்டவையும் உயர்த்தப்பட்டன. சுய உதவிக்குழுக்கள், மைக்ரோ பைனான்ஸ் என பல வந்தாலும், கந்து வட்டி மற்றும் உள்ளூர் பைனான்சியரிடம் கையேந்துவதைத் தவிர வேறு வழியில்லை. அக்ரஹாரம் பகு
தியில் மட்டும் சுமார் 18 கந்துவட்டி கடைகள் உள்ளன. பண்டு என்ற பெயரில் வழங்கப்படும் கடனை 10 வாரத்தில் வட்டியுடன் திருப்பி செலுத்தி விட வேண்டும். ஒரு வாரம் தவறினாலும், மறு வாரம் கொடுக்கும் பணம் கணக்கில் சேராமல் அபராதமாகக் கருதப்படும். வார வட்டி என்பது ரூ.50ஆயிரம் வரை வழங்கப்படும். ஒரு ஆயிரம் ரூபாய்க்கு ரூ.200 வட்டி வீதம் வாரம் தவறாமல் வட்டி செலுத்த வேண்டும். அத்தக்கூலிக்கு குடும்பத்துடன் வேலை செய்யும் விசைத்தறி தொழிலாளி வாரவட்டி மட்டுமே செலுத்த முடியும். அசலை செலுத்தவே முடியாது.
இந்த இருள் சூழ்ந்த சூழல்களை ஒரு கயவர் கூட்டம் தங்களின் வக்கிரத்திற்கு பயன்படுத்தி குளிர்காய்ந்து வருகிறது. வக்கிரத்தோடு நிற்பதில்லை. அதனை இணையதளத்தில் விலை பேசி விற்று ஊர் மேய விட்டுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கொடுமையின் கோரமுகம் தற்போது வெட்ட வெளிச்சமாகி அப்பகுதியில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
அக்ரஹாரம் பகுதியில் பிரபல நடிகரின் பெயர் கொண்ட ஒருவர் நடத்தி வரும் பைனான்சில் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண் கடன் வாங்கியிருக்கிறார். வாங்கிய கடனுக்கு வாரா வாரம் வட்டியை கொண்டு போய் கொடுக்க வேண்டும். அப்படி ஓரிரு வாரம் கொடுக்க அந்த ஏழை குடும்பத்தால் முடியவில்லை. பைனான்ஸ் நிறுவனத்தினர் நெருக்கவே அந்த ஏழைப்பெண் இரு நாள் அவகாசம் கேட்டிருக்கிறார். சொன்னது போல் சில்லரை உள்ளிட்டு வீட்டில் இருந்த காசுகளை துடைத்து எடுத்து வட்டியை கொடுத்து விட்டு வருமாறு தனது மகளை ( சமீபத்தில் திருமணமான ) அனுப்பியுள்ளார்.
ஆனால் பைனான்ஸ் உரிமையாளரோ வறுமையின் கொடுமையைப் பயன்படுத்தி அந்த பெண்ணை விலைபேசியுள்ளார். பணத்தை கட்டமுடியாத கையறு நிலையில் கண்கலங்கி நின்ற அந்தப் பெண்ணை அப்படியே இழுத்து கொண்டு போய் ஓர் அறையில் அடைத்து தனது பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவரை விட்டு அலங்கோலப் படுத்தியிருக்கின்றனர். அப்போது அந்த அலங்கோலங்களை அந்த பைனான்ஸ் உரிமையாளரே வீடியோவில் பதிவு செய்தும் இருக்கிறார். அப்போது இந்த நான்கு சுவத்தோடு உங்கள் கடனும் கழிந்து விட்டது என கூறி அனுப்பியுள்ளனர்.
ஆனால் இதோடும் இந்த கொடுமை முடிவு பெறவில்லை. எடுத்த வீடியோவை அந்த பைனான்ஸ் உரிமையாளார் ஒரு இணைய தளத்திற்கு விலைபேசி விற்றுள்ளார். அந்த இணைய
தளத்தில் தற்போது அந்த இளம் பெண்ணின் அலங்கோலங்கள் . . . அலைந்து திரியும் காமக்கிறுக்கர்களின் கண்களுக்கு விருந்தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தகவலறிந்த தாய் கதறிக் கொண்டு நியாயம் கேட்க ஒவ்வொரு வாசலாக இறங்கி ஏறிக்கொண்டிருக்கிறார்.......
இதுவரை இப்பகுதி தொழிலாளர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக கிட்னியை விற்று வந்தனர். இப்போது காமவெறி பிடித்த மிருகங்களால் பாலியல் அலங்கோலப்படுத்தப்பட்டு பச்சை உடம்பு காட்சி பொருளாக விற்பனை செய்யப்படுகிறது. இதிலும் என்ன கொடுமையென்றால் இந்த ஏழைப் பெண்களை அந்த இணையதளங்கள் பாலியல் தொழிலாளர்கள் என்று சித்தரித்து தங்களின் வக்கிரத்திற்கு நியாயம் தேட முயற்சிக்கின்றன.
இதுபோன்ற குற்றங்கள் சைபர் கிரைம் என்று அழைக்கப்படும் குற்றப்பிரிவில்தான் வருகிறது. இத்தகைய குற்றங்களில் பாலியல் ரீதியான வக்கிரங்கள்தான் முதலிடம் பிடிக்கிறது என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இப்படி அப்பாவிப் பெண்கள் சிக்கிக் கொள்வது பற்றி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் உ. வாசுகியிடம் கேட்டபோது, ‘‘இது போன்ற கொடுமைகள் அரங்கேற்றப்படுவது வன்மையான கண்டனத்திற்கு உரியது. சம்பந்தப்பட்டவர்களை கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் இன்றைய கால கட்டங்களில் சைபர் கிரைம் குற்றங்கள் பல வடிவங்களில் அதிகரித்து வருகிறது. இணையதள பாலியல் வக்கிரங்களை தடுத்திட மத்திய அரசு தனிச்சட்டம் இயற்றிட வேண்டும். அதில் ஈடுபடும் கிரிமினல்களை கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்,’’ என்று குறிப்பிட்டார்.

 
 

தீக்கதிர் 12.3.2010 செய்தி

பள்ளிபாளையத்தில் கந்துவட்டி கும்பல் வெறியாட்டம்: சிபிஎம் ஊழியர் வேலுச்சாமி படுகொலை

நாமக்கல், மார்ச் 11-
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கந்து வட்டி கும்பலின் அட்டூழி யத்தை அம்பலப்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சி.வேலுச்சாமி (வயது 38) புதன்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
விசைத்தறித் தொழில் நகர மான பள்ளிபாளையத்தில் உள்ள அக்ரஹாரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கிளைச் செயலாளராக இருந்தவர் சி.வேலுச்சாமி. விசைத்தறி தொழில் நகரமான பள்ளிபாளையத்தில் 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் இருக்கின்றனர். இப் பகுதியில் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு விசைத்தறி தொழிலாளி குடும்பம் ஒன்று கந்து வட்டி கும்பலிடம் கடன் வாங்கியுள்ளது. வாங்கிய கட னைச் செலுத்த முடியாத நிலையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண், கந்து வட்டி உரிமையாளர் வீட்டுக் குச் சென்று வட்டிப் பணத் தைக் கொடுத்திருக்கிறார்.
பாலியல் வக்கிரம்
கடன் தர முடியாத நெருக் கடி நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அந்த பெண்ணை கந்து வட்டி கும்பல் ஓர் அறையில் அடைத்து வைத்து அடியாள் ஒருவர் மூலம் பாலி யல் வன்கொடுமைக்கு உட் படுத்தியுள்ளனர். மேலும் இந்த கொடுமையை வீடியோவில் பதிவு செய்து இணையதளத் திற்கு விற்றுள்ளனர். இணை யதளத்திலும், செல்போன் களிலும் இந்த காட்சி பரவி வரு வதை அறிந்து அந்த குடும்பத் தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கந்துவட்டி கும்பலின் பாலி யல் வக்கிரத்திற்கு ஆளான குடும்பத்தினர், மார்க்சிஸ்ட் கட்சியின் உதவியை நாடி வந்தனர். இதையடுத்து அப்பகு தியின் சிபிஎம் கிளைச்செய லாளராக இருந்து வந்த வேலுச் சாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் ஒன்றியக் குழு மூலம் காவல் துறையின் கவனத்துக்குக் கொண்டு சென் றார். பெண் தொழிலாளியை பாலியல் வன்முறைக்கு உட் படுத்தி இணையதளத்தில் பரப் பிய அந்த கும்பலை கைது செய்து சட்டப்படி தண்டிக்க முயற்சி மேற்கொண்டார். இது குறித்து தீக்கதிர் நாளிதழிலும் கடந்த பிப்ரவரி 20ம் தேதி செய்தி கட்டுரை வெளியானது. இதன் தொடர்ச்சியாக அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து வேலுச் சாமிக்கு கந்து வட்டி கும்பல் கொலை மிரட்டல் விடுத்து வந்தது. இது குறித்தும் காவல் துறையிடம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் புகார் செய்யப்பட் டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவக்குமார் ஜாமீனில் வெளியே வந்திருக் கிறார்.
கொலை மிரட்டல்
இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சிவக் குமாரின் கூட்டாளிகளான ராஜ்கமல், அருண் ஆகிய இரு வரும் அக்ரஹாரத்தில் உள்ள வேலுச்சாமியின் வீட்டுக்கு வந்து அவரது தம்பி ஜம்புவி டம், வேலுச்சாமி எங்கே என்று கேட்டு மிரட்டிச் சென்றனர். வேலை விஷயமாக வெளியே சென்றிருந்த வேலுச்சாமி இரவு 7 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது மேற்படி சம்பவத்தை குடும்பத்தார் தெரிவித்தனர்.
உடனடியாக வேலுச்சாமி, அவரது தம்பி ஜம்புவுடன் புறப்பட்டு பள்ளிபாளையம் காவல் நிலையத்துக்குச் சென்று சிவக்குமார் கும்பல் தன்னை கொலை செய்ய முயற்சிப்ப தால், பாதுகாப்பு வழங்கும்படி மனுக் கொடுத்தார். காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்து வேலுச்சாமி, ஜம்பு மற் றும் சதீஷ் ஆகிய மூவரும் இரு சக்கர வாகனத்தில் அக்ரஹாரத் துக்கு திரும்பிக் கொண்டிருந் தனர்.
வெட்டிக்கொலை
அப்போது இரவு சுமார் பத்தரை மணியளவில் ராஜவீதி சந்திப்பில் ஜம்புவும், சதீஷூம் முன்னால் போய்க் கொண்டி ருந்தபோது, சற்று தள்ளி பின்னால் வந்து கொண்டிருந்த வேலுச்சாமியை எட்டு பேர் கொண்ட கும்பல் திடீரென வழி மறித்து அரிவாளால் சர மாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. உடனே அவரது உடல் ஈரோடு அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல் லப்பட்டது.
கொலை செய்யப்பட்ட வேலுச்சாமிக்கு சித்ரா என்ற மனைவியும், தாரணி(11), ரேணுகா(8) என இரு மகள் களும், வினோத் (7) என்ற மகனும் உள்ளனர்.

 
 

இந்தச் செய்திகள் வேறு ஊடகங்களில் பெரிதாக வெளியிடப்படவில்லை என்பதை வேதனையுடன் பார்க்கிறோம்.அவர்களுக்கு ‘கவர்’ பண்ண வேறு ஆயிரம் செய்திகள் இருக்கும்.இதில் என்ன பரபரப்பு இருக்கிறது.

பள்ளி பாளையத்தில் பந்த் நடத்தப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி 15 ஆம் தேதி தோழர் வேலுச்சாமி கொலையைக் கண்டித்து இயக்கம் நடத்துகிறது.நான் விசாரித்தபோது பாதிக்கப்பட்ட அப்பெண்மணி அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் கொல்லப்பட்ட தோழர் வேலுச்சாமியும் கொலையாளிகளான அந்தக் கந்துவட்டிக்கும்பலும் ஒரே சாதியினர்(உறவினர்) என்பதும் தெரிய வந்தது.

இணையதளம் போன்ற நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும் கூட சாதி சார்ந்தும் பொருளாதார ஏற்றத்தாழ்வுடனும் இயங்கும் ஒரு சமூகத்தில் ஆதிக்க சக்திகளுக்கே –ஆதிக்கத்தை நிலை நாட்டவே பயன்படும் என்பதற்கான இன்னுமொரு குரூர உதாரணமாக இந்தப் பள்ளிப்பாளையம் பாலியல் வன்முறையும் நம் தோழரின் படுகொலையும் அமைந்துவிட்டது.

தாரணி,ரேணுகா,வினோத் என்கிற அப்பிஞ்சுக்குழந்தைகளின் முகத்தை நினைக்க மனம் நடுங்குகிறது.அவர்களுக்கு என்ன வார்த்தை சொல்லி நம்மால் தேற்ற முடியும்?இதுதானடா செல்வங்களே நாங்கள் பேணிக்காத்து வளர்த்து வைத்துள்ள சமூக ஏற்பாடு.அக்குழந்தைகள் தங்கள் பிஞ்சுக்கரங்களை எம் முகத்தில் அறைந்து அழுவதாக ஒரு காட்சி என் மனதை வெட்டி வீழ்த்திக்கொண்டே இருக்கிறது.

இச்சமூகத்தை உடைத்து நொறுக்காது நம் தலைமுறை கடந்து சென்றால் எதிர்காலம் நம் மீது காறித்துப்பும்.

13 comments:

haran said...

வேலுச்சாமி போன்ற வீரர்களைப் பற்றி அறியும்போது, குற்ற உணர்வில் என் தலை தாழ்ந்துவிடுகிறது. தலைவனை இழந்து நிற்கும் அந்தக் குடும்பத்திற்கு என்னால் முடிந்த உதவியினைச் செய்ய விரும்பிகிறேன்.

எனது மின்னஞ்சலுக்கு ( haran13@gmail.com ) தங்களின் தொலைபேசி எண்ணைக் கொடுங்கள்; இதுகுறித்துப் பேச விழைகிறேன்.

தோழரின் குடும்பத்திற்கு என் அனுதாபங்களை தெரிவித்துவிடுங்கள்.

vimalavidya said...

Action is more important than "ARTICLE" AND WORDS.--vimalavidya

ச.தமிழ்ச்செல்வன் said...

to vimalavidya - articles and words are meant only for action.without meaningful words you cannot build up any movement of action.dont underestimate the power of words p-lease

pavithrabalu said...

தோழரே

படித்த பின்பு ஏற்பட்ட உணர்வுகளைப் பகிர வார்த்தைகளில்லை.. எவருடனும் பேசுவதற்கு கூட மனம் விழையவில்லை...
நாம் எத்தகைய சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கையில் மனம் கூசிப் போகிறது,,

எதைப் பற்றியும் கவலையில்லாமல் தேடிச்சோறு நிதம் தின்று வீணர்களாய் திரிகிறோம் என்ற குற்றஉணர்வு மேலோங்குகிறது...

வேலுச்சாமி தோழரின் களப்பணி போற்றுதலுக்குரியது... ஆனால், கோரப்பசியில் உள்ள ஆதிக்க கும்பலை என்ன செய்வது?

Dr.Rudhran said...

இச்சமூகத்தை உடைத்து நொறுக்காது நம் தலைமுறை கடந்து சென்றால் எதிர்காலம் நம் மீது காறித்துப்பும்
i share your angry grief

தோழன் said...

உங்கள் எழுத்துக்களைப் பார்த்து செயலிலும் இறங்க நிறைய ‘மனிதம்’ நிரம்பியவர்கள் இங்கு இருக்கிறார்கள் தமிழ். சித்ராதேவிக்கு உதவி செய்தது போலவே வேலுச்சாமிக்கும். ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காமலிருக்க உங்கள் வார்த்தையில் “வீதியில் இறங்கிப் போராடாமல் விடிவு இல்லை” நாகநாதன்.

Sindhan R said...

விமல வித்யா சொல்வது சரியே .. எழுத்துக்களைக் காட்டிலும் செயலே முக்கியம் .. பொருளற்ற வார்த்தைகளை எழுதுவதே பிழைப்பாகக் கொண்டிருப்பவர்களுக்கு அது பொருந்தும்.

ஆனால் இந்தப் பதிவு அப்படியானதா?. அநீதியை எதிர்த்த கம்யூனிஸ்ட் போராளியை லாப வெறி பிடித்தவர்கள் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். அந்த அநீதியை மக்கள் முன்பு அம்பலப்படுத்தும் பிரச்சாரம், அதற்கு எதிராக மக்களை அனிசேர்க்கும் ஒரு செயலாகும் ..

இந்த இடத்தில் விமல வித்யா ”செயல்” எனும் பொருளில் வேறொன்றைச் சொல்லியிருக்கலாம் .. அத்தகைய ”செயல்” சமூகத்தை எழுச்சியடைய வைக்க உதவுமானால் செய்வதில் ஏதும் தயக்கமில்லை.. ஆனால் பதில் “செயலின்” வடிவம் மக்கள் ஒன்றிணைவதை தடுத்து ஒட்டுமொத்த இயக்கத்தை தனிமைப்படுத்தும் என்பதே நமது அனுபவம். பூடகமான செய்தி விமல வித்யாவிற்கு புரிந்திருக்கும்.

சமூக மாற்றம் என்பதை, சமூக செயல்பாடுகளின் மூலம்தான் வென்றெடுக்க முடியுமேயன்றி, தனி நபர் சாகசங்கள் மூலம் அல்ல .. தனி நபரின் தியாகத்தை, சமூக எழுச்சியக்கான உத்வேகமாய் மாற்றும் பிரச்சாரமே மேற்கண்ட செய்தி .. அவை வெற்று வார்த்தைகளும் அல்ல ...

Itsdifferent said...

We have been trying to create a microfinance organization exactly to relieve people of these kind of menace. I read here that it is not working. Is there anyone who can do some investigation on why Microfinance is not working and write about it?

Anonymous said...

தோழர் லீலாவதி,தோழர் நன்மாறனின் கழுத்து(கத்திகுத்து),இப்போ தோழர் வேலுச்சாமி..இதுக்கு முன்னால எத்தனை பேரோ..!! இனிமே எத்தனை பேரோ..!!


இனிமே தட்டித்தான் கேக்கனும்
சன்டை போட்டு வாங்கனும்
போராடித்தான் பொழைக்கனும்
வாதாடித்தான் வாழனும்....
.....
.....
காக்கா கழுகு தூக்காமலும்
கவனமா இருக்கனும்.. (கிய்யா கிய்யா கோழிகுஞ்சு பாடலிலிருந்து)
...
....
...
கடைசி இரண்டு வரிகளின் அர்த்தம்,அகிம்சைவாதி காந்தியிடம் பாடம் படிப்பதை குறைத்து மறுபடியும் சேகுவேராவிடம் படிக்கத் தொடங்கினால் புரியலாம். வன்முறை தவறுதான்...ஆனால் தற்காப்பு? சகமனிதர்களை நேசிக்கிற மிக மிக குறைவாய் இருக்கிற மனிதர்களின் பாதுகாப்பு? அதற்கான வன்முறை????????????????

Anonymous said...

/இந்தச் செய்திகள் வேறு ஊடகங்களில் பெரிதாக வெளியிடப்படவில்லை என்பதை வேதனையுடன் பார்க்கிறோம்.அவர்களுக்கு ‘கவர்’ பண்ண வேறு ஆயிரம் செய்திகள் இருக்கும்.இதில் என்ன பரபரப்பு இருக்கிறது/
உண்மைதான். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போலீஸ் துரத்தி மாணவர்கள் அநியாயமாக செத்தது, பள்ளிபாளையம் பாலியல் தொந்தரவு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா... இதெல்லாம் நம்ம பத்திரிக்கைகளுக்கு ஒரு செய்தியா என்ன? நித்யானந்தாவுடன் உறவு கொண்ட நடிகைகள் யார் யார் என லிஸ்ட் போடவே நேரம் போதவில்லை. நம்ம முதல்வருக்கோ தமிழ் மக்களுக்கு (தமிழ் மக்கள்னா ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, அந்த நிதி, இந்த நிதின்னு நீங்க புரிஞ்சுக்கணும்)
எல்லாம் செஞ்சாச்சு, ஓய்வெடுப்போம் என்ற மனநிலை வந்தாச்சு, த்ரிஷா, அசின், ஸ்ரேயா, நமீதா... என புடை சூழ ஒரே ஆட்டபாட்டம்தான். புதிய சட்டசபை வளாகமோ இனிமேல் ராஜராஜசோழன் போல காலத்துக்கும் தானைத்தலைவர் புகழ் பாடும். இப்படியாகத்தான் நம் தமிழகத்தில் பேசுவதற்கும் 'பார்ப்பதற்கும்' ஆயிரம் விஷயங்கள் இருக்குது. (அது சரி, புதிய சட்டசபை வளாகம் திறந்ததுக்கு தீக்கதிரில் இப்படி ஒரு முதல் பக்க கொட்டை எழுத்து செய்தி தேவையா? அப்பிடி என்னதான் புதூசா அந்த கட்டடத்துல சாதிச்சிடப் போறாங்க?)
களத்தில் வீழ்ந்த போராளி வேலுச்சாமிக்கும் அந்த அப்பாவிப் பெண்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.....இடப்பட்டுள்ள பின்னூட்டங்கள் கனல் கொப்பளிப்பவை. நம்பிக்கை இன்னும் வற்றவில்லை.
இக்பால்

நட்புடன் ரமேஷ் said...

பிரியமுள்ள தமிழ் மாதவாரஜ்க்கும் உங்களுக்கு ஒரே பின்னூட்டத்தை அனுப்பி உள்ளேன்
கடந்த முறை நான் பள்ளிப்பாளையம் வாலிபர் சங்க நிகழ்வுக்கு சென்றிருந்த போது காவேரி வாலிபர் சங்க அலுவலத்தில் வேலுவுடன் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. இந்த கொலையில் முதல் குற்றவாளிகள் காவல்துறையினர்தான். அவர் தனது உயிருக்கு குறிவைக்கப்பட்டதை அறிந்து, காவல் நிலையாத்தில் புகார் கொடுத்தும் அவரை பலி கொடுத்திருக்கிறோம். 1999 ஆம் ஆண்டு நான் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளராக இருந்த போது இதேபோன்று கள்ள்சாராயத்தை எதிர்த்த தோழர்கள் குமார் ஆனந்தன் என்ற இரண்டு தோழர்கள் வெட்ட்டி படுகொலை செய்ய்ப்பட்டது நினைவுக்கு வந்தது.
நிச்சயம் பதில் சொல்வோம். தியாகங்கள் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இத்தகைய தியாகிகளின் தியாகத்திற்கு நீங்கள் சொன்ன களப்போராட்டங்களே தீர்வாக இருக்கும்

vasan said...

Let the LEFT parties take up this issues. English visual media and other neutral media to open their eyes on this kind of misrule. Mayawathi`s 25 year party celebration can be compared with Mr. Azhagiri`s Birthday bash and any of our CM`s star studed function. But no one has exposed or expressed such excess to the nation. So many things are happening in the gray shades. The press have to bring to the light. This audacity should be brought to public by all means thru mass media.

Samikkannu said...

முதலாளித்துவ கட்சிகளில் எதுவும் இன்று ஓர் அரசியல் நிறுவனமாக இல்லவே இல்லை;அனைத்தும் அடி முதல் நுனி வரை அப்பட்டமான, கூச்சநாச்சமற்ற அயோக்கியர்களின் கூடாரங்களே!அதுவும் திராவிட/தலித் கட்சிகள் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்கிற ஒவ்வொன்றும் மிகவும் அருவருப்பூட்டக்கூடிய வகையில் காசுக்காக எதையும் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் செய்யச் சற்றும் தயங்காத தலைவர்களையும், தொண்டர்களையும் கொண்டவையாக பரிணமித்துள்ளன; ஓட்டாண்டிகளாக இருந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் ஆரம்பத்தில் நூதனமாகவும், அதன் பிறகு மிகவும் வெளிப்படையாகவும் அரசுக் கருவூலத்தையும், ஆற்று மணல், காட்டு மரம், கருங்கல் எனக் கண்ணில் தெரிகிற, கைக்குக் கிடைக்கிற அத்தனைப் பொதுச் சொத்துகளையும் வாரிச் சுருட்டியவண்ணம் வலம் வந்துகொண்டுள்ளார்கள்; அவர்களுக்கு ஆதரவாக அரசு நிர்வாகத்தை முற்றிலும் ஊழல்மயமாக்கிவிட்டார்கள்;காவல் நிலையங்கள் குற்றவாளிகளின் மனமகிழ் மன்றங்களாக மாறிவிட்டன;சாதி, மதச் சழக்கர்களாக, முடைநாற்றம் வீசுகிற மூட நம்பிக்கைகளின் மொத்த வியாபாரிகளாகப் பகுத்தறிவுப் பகலவனின் "பாதந் தாங்கிகள்' எனப் பம்மாத்துப் பண்ணியவர்கள் இன்று வெட்கமின்றி வீதி உலா வருகிறார்கள்! கண்ணகிக்குச் சிலை வடித்தவர்கள் சிதம்பரம் பத்மினி தொடங்கி ஈரோடு வரை தமிழச்சிகளின் மானத்தை விலைபேசிக் கொண்டிருக்கிறார்கள்! நாடு நகரமெங்கும் தொழில்முறைக் கொலைஞர்கள் காசுள்ளவர்களின் கைக்கூலிகளாக-முக்கியமாக ஆளூங்கட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறையினரின் அரவணைப்புடன்- கோர நர்த்தனம் ஆடிவருகிறார்கள்! மொத்தத்தில் அன்று மார்க்சியத் தலைவர் B.T.ரணதிவே அவர்கள் எச்சரித்ததைப் போன்று அரசியலும், இன்று புதிய பொருளாதாரக் கொள்கையின் செல்லப் பிள்ளையாம் நுகர்வு கலாசாரத்தின் பரவலால் ஒட்டுமொத்த சமூகமும் கிரிமினல் மயமாகிவிட்டது.அதன் விளைவுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் மார்க்சிஸ்டுகள் மட்டுமே முன்னிற்பதால் இத்தகைய இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். ஒரு காலத்தில் சிறிய கட்சியாக இருந்தபோது-- 1970களில் என்னைப் போன்றோர் திராவிட இயக்கங்களிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்த காலத்தில்--கம்யூனிஸ்ட் என்றாலே பயங்கரவாதி எனப் பயமுறுத்தியவர்கள் இன்று அவர்களைக் கிள்ளுக் கீரைகளாகப் பந்தாட முடிவது எதனால் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
மாணவர்களையும், இளைஞர்களையும்,மாதர்களையும் அவரவர் அமைப்புகளில் திரட்டுவது மட்டுமின்றி அரசியல்படுத்தினால்தான் இனி இத்தகைய கயவர்களின் கொட்டத்தை அடக்கவியலும்.