Wednesday, March 3, 2010

நித்யானந்தம் என்கிற இளைஞன்

nithya5 சன் நியூஸ் தொலைக்காட்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிய சுவாமி நித்யானந்தாவின் படுக்கையறைக்காட்சியை நானும் பார்த்தேன்.இந்துத்வா ஆசாமிகள் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி அவசர அவசரமாக அவர் அல்ல எங்கள் அடையாளம் என்று பிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்னைகளுக்குப் பொருளாதாரத் தளத்தில் அல்லது அரசியல் தளத்தில் தீர்வுகாணப் போராட வேண்டும். அதற்குத் தயாராகாத மக்கள் பண்பாட்டுத்தளத்தில் சாமி,கோயில்,பூஜை என்று தீர்த்துக்கொள்ள முயலும் பழக்கம் அபினியைப்போல மயக்கிக்கொண்டிருக்கும் நம் சமூகத்தில் இதுபோன்ற சாமியார்கள் வருவதும் சமயங்களில் பிடிபடுவதும் சகஜம்.

எனக்கு அக்காட்சியை பார்த்தபோது நித்யானந்தா என்கிற அந்த 33 வயது இளைஞனின் மீது பச்சாதாப உணர்வு ஏற்பட்டது.பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. அவனும் சாதாரண மனிதன்தானே.சின்னப்பையனான அவன் அவனோடு விரும்பி உறவு கொள்ளும் பெண்ணோடு இருக்கும் கணத்தைப் படம் பிடித்து ஊருக்கே காட்டுவது நாகரிகமாக எனக்குப்படவில்லை.காஞ்சி சாமிகள், பிரேமானந்த சாமிகள் போல பெண்களிடமிருந்து அவன் வல்லந்தம் செய்ததாக புகார் வராமல்- அவர்கள் இருவரும் காதலால் ஒருமித்தது போன்ற ஒரு வீடியோ காட்சியைக் காட்டும் போது அய்யோ பாவம் அவன் என்கிற உணர்வுதான் முதலில் எனக்கு ஏற்பட்டது.

அவன் பிரம்மச்சர்யத்தை ஊருக்கு உபதேசம் செய்பவனாக இருந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையை இப்படி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறான் என்பதற்காக அவனைக் குற்றம் சாட்டலாம்.அது சரி.கோடிக்கணக்கான சொத்துக்கு தலைவனாக இருப்பதில் இதுவரை எந்த விதிமீறலும் இல்லாமலா இருந்திருக்கும்? அதைப்பற்றியெல்லாம் தோண்டி எடுத்து வெளியே போட்டு அவனைக்கிழிக்கலாம். இவனை மட்டுமல்ல இவனைப்போல ஊரை ஏமாற்றும் அத்தனை சாமியார்களின் சொத்துக்குவிப்புகளும் கிழிக்கப்பட வேண்டும்.அத்தனையும் ஏமாந்த எளிய மக்கள் கொடுத்த சொத்து.ஆட்சியில் இருப்பவர்களே சாமியார்களிடம் மோதிரம் வாங்கிக்கொண்டு திரியும்போது அவர்களின் பொருளாதாரக்குற்றங்களை யார் கேள்வி கேட்பார்கள்?

அதிலும் இந்த நித்யாப் பையன் அமெரிக்கா ,ஐரோப்பாவெல்லாம் போய் கார்ப்பொரேட் கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்களின் மன அழுத்தங்களை சரி செய்ய தியான வகுப்புகள் நடத்துகிறவன்.பன்னாட்டுக் கம்பெனிகளோடு தொடர்புடையவன்.தமிழகப் போலீஸ் போய் அவனைக்கைது செய்தாலும் சுலபமாக வெளியே வந்து விடுவான்.

பாலியல் குற்றம் இல்லாமலே ஏராளமான பிற குற்றங்கள் புரியாமல் சட்டத்தை ஏமாற்றாமல் எந்தச்சாமியாரும் கோடிக்கணக்கான சொத்துக்களைச் சேர்க்க முடியுமா? சாயிபாபா,அமிர்தானந்தா தொடங்கி எத்தனையோ ஆனந்தாக்களும் கிறித்துவ சாமியார்களும் இந்தத் திசையில் விசாரிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டுப் பிடிபட வேண்டியவர்களாவர்.

மக்களை மயக்குவதற்கும் மனித மனங்களை கார்ப்பொரேட்டுகளின் சரக்குகளுக்கேற்ப தகவமைப்பதற்கும்தான் நவீன அபினிகளாக நாங்கள் வந்து விட்டோமே நீ என்ன எனக்குப் போட்டியாக என்று சன் டிவிக்குக் கோபம் வந்துவிட்டது போலும்.அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுத் தாளித்து விட்டார்கள்.

ஒரு விரிவான பகுத்தறிவுப் பண்பாட்டு இயக்கத்தை ( முன்னெப்போதையும் விட இப்போது வலுவாக) நடத்த வேண்டிய காலமாக இன்றைய காலம் இருக்கிறது.

20 comments:

Anonymous said...

Please write about the nadigar sangam issue few months back- how will nadigar sangam reacct now?
*****************************
Few months back nadigar sangam condemned the newspapers and an editor was arrested for publishing news abt the actress...Surya/vivek/superstar/sathyaraj/vijaykumar/sarathkumar etc said all actresses pathini they are homely etc etc...Now will they have spine/GUTS to condemn SUN TV? ask for the arrest of Kalanidhi maran?
Superstar next movie producer Sun tv will he condem sun network?

Will nadigar sangam condemn the act and protect the actress??

Dei ippo sun tv ethira kandanam sollunga parpom? actor surya enga...ippo sollu SUN TV EENA PAsanga potrukaanganu sollu ...
Nadigar sangam aambilaina sollatum parpom???

Usual saamiyar matteru vidungapa..most samiyars are POLI only...makkal anubava pattu adivangi appurama thirunthuvaanga...

Namma NAdigai matteruku varuvom..intha Vivek engappa..SUN Tv kandichu pesa sollunga...parkalam??

சீ.பிரபாகரன் said...

நித்யானந்தன் என்ற சாமியார் காதலிலும் காமத்திலும் ஈடுபடக்கூடாது என்று ஏதாவது சட்டம் உள்ளதா? இந்த பாலுறவு காட்சி சன் பிக்சர்ஸாலும் நக்கீரன் டாக்கீசாலும் பரபரப்பாக எதற்காக வெளியிடப்படுகிறது?

ஒரு நபரின் பாலுறவு காட்சியை யாருடைய அனுமதியும் இன்றி வெளியிட இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?

இந்தப்படம் எப்போது யாரால் எடுக்கப்பட்டது?

இப்போது இதை வெளியிடவேண்டிய அவசியம் என்ன?

சன் குடும்பத்திற்கும் நித்தியானந்தனுக்கும் என்ன பிரச்சனை?

சமூகத்தைப் பற்றியோ பொது ஒழுங்கு பற்றியோ எப்பொதுமே கவலைப்படாத மாறன் குழுமம் நித்தியானந்தத்தை மட்டும் கிழிப்பது ஏன்?

இப்படி பல கேள்விகள் பரவலாக தற்போது எழுகின்றன. பொருத்திருந்து பார்ப்போம்...

எதிர்காலத்தில் கண்கள் பனித்து... இதயம் இனித்து... மாறன் குழுமமும் நித்தியானந்தனும் பல்லிளிக்கும் காட்சிகளும் பார்க்கலாம்.

ப.கந்தசாமி said...

நேற்று இரவு 8.30 க்கு சன்நியூஸ் ஒளி பரப்பியதிலிருந்து ஒரு பதிவரும் தூங்கியிருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். பதிவெழுத, பின்னூட்டம் போட, வரும் பின்னூட்டங்களுக்கு எதிர்வினை போட என்று எல்லாப்பதிவர்களும் ஓவர்டைம் டூட்டி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சன் டிவி ஏதாவது ஓவர்டைம் அலவன்ஸ் கொடுக்குமா? அவர்களுக்கு இந்த மாதிரி விளம்பரம் இனி எப்போது கிடைக்குமோ?

யுவன் பிரபாகரன் said...

அப்படியே கார்பொரேட் கம்யூனிஸ்டுகளை பத்தி ஒரு கட்டுரை எழுதிடுங்க தலைவரே

vinu said...

மிக சரியான பதிவு... பிரச்சனையின் அடிப்படையை அலசி ஆராய்ந்த பதிவு. அதே போல ஒரு நீல படத்தை நாம் வீட்டு குழந்தைக்கு காண்பித்த சன் டிவி ஒரு தரமற்ற டிவி. சன் டிவி க்கு கடுமையான கண்டனம்.

ஜோதிஜி said...

அற்புதமான உங்கள் பார்வைக்கு நன்றி

Anonymous said...

//எனக்கு அக்காட்சியை பார்த்தபோது நித்யானந்தா என்கிற அந்த 33 வயது இளைஞனின் மீது பச்சாதாப உணர்வு ஏற்பட்டது.//

அதே பச்சாதாப உணர்வு உ.ரா. மீது உங்களுக்கு வராதுதான் வருத்தமளிக்கிறது.....

Anonymous said...

Prompt!!

உடன்பிறப்பு said...

நித்தியானந்தா பற்றி வந்த பதிவுகளி மிகவும் நாகரீகமாக இருக்கிறது உங்கள் பதிவு

Ashok D said...

மூன்றாவது பத்தி நிறைவாய் இருந்தது, அது உங்கள் வயதின் பக்குவத்தினால் வந்துவிழுந்ததாய் இருக்கலாம். மனதில் நிறைய வார்த்தைகள் வந்துபோனது, பிறகு அமைதி படர்ந்தது :)

(வினவிலிருந்து வந்தேன்)

Unknown said...

பகுத்தறிவு மிக்க பதிவு. பாவம் அந்த பையன். ஆம்.

kalyani said...

yemarubavargal irukkumvarai intha maathiri yemaarrum samiyaargal vanthukonduthaan iruppaargal.

Anonymous said...

ஊடக நியதி, ஊடகங்களுக்கான சமூகக் கடமை... இதெல்லாம் நமது தின, வார, மாத... இன்னபிற பத்திரிக்கைகளால் மறக்கப்பட்டு நீண்ண்ண்ட காலமாச்சு. சன் டிவி ஒன்னும் விதிவிலக்கல்ல. நித்யானந்தா விவகாரம் சன் டிவியில் தமிழன்னைக்கு தினமும் சார்த்தப்படும் தமிழ்மாலையில் கோர்க்கப்பட்ட லேட்டஸ்ட் பூ... அவ்வளவுதான். ஒரு காலத்தில் மிட் நைட் மசாலா போட்டு நள்ளிரவிலும் தமிழ்த்தொண்டாற்றிய தயாநிதி கலாநிதி உதயநிதி...இத்யாதி குடும்பத்தின் லேட்டஸ்ட் மிட் டே மசாலாதான் நித்யானந்தா ரஞ்சிதா நீலப்படம். எனது கேள்வி இதுதான்:
1 ) இந்த முழுநீல மசாலாவை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பார்த்துகே களித்தது போல கருணாநிதி, கலாநிதி, உதயநிதி, அந்தநிதி, இந்தநிதி, மாறன், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி குடும்பத்தாரும் தங்கள் மகன், மகள், பேரக்குழந்தைகளோடு பார்த்தார்களா?
2 ) புவனேஸ்வரி விவகாரத்தில் வெகுண்டு எழுந்து தினமலர் ஆசிரியர் மேல் நடவடிக்கை எடுக்க கருணாநிதியை குறைந்த கால அவகாசத்தில் சந்தித்த தமிழ் திரை உலகின் அறிவாளிகள், கவரிமான்கள், தங்கள் சக சகோதரியான ரஞ்சிதாவின் மானத்தை காப்பாற்றும் பொருட்டு சன் டிவியின் மீதும் ...நிதிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு உடனடியாக கருணாநிதியை சந்திப்பார்களா?
3 ) பெண்ணுரிமை பேசுவதில் இப்போது களத்தில் முன்னாள் நிற்கும் பெண்ணுரிமை போராளி கனிமொழி, இந்த விசயத்தில் சும்மா இருக்க மாட்டார் என நம்புவோம். அவர் ரஞ்சிதா என்ற பெண் விசயத்தில் என்ன கருத்தை கூறப்போகின்றார்? சன் டிவி வாசலில் பெண்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவார் என நம்புகின்றேன். தவிர சமீப காலங்களில் கனிமொழியை உயர்த்திப்பிடிக்கும் தமிழ்ப்படைப்பாளிகள் இந்த விசயத்தில் கனிமொழியோடு துணை நிற்பார்கள் என்றும் நம்பலாமா?
சார்லி

Subu said...

///1 ) இந்த முழுநீல மசாலாவை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பார்த்துகே களித்தது போல கருணாநிதி, கலாநிதி, உதயநிதி, அந்தநிதி, இந்தநிதி, மாறன், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி குடும்பத்தாரும் தங்கள் மகன், மகள், பேரக்குழந்தைகளோடு பார்த்தார்களா?///

உங்க கேள்வி நல்ல கேள்வி தான். ஆனா கேட்கும் இடம் சரியில்லை

ஆமாம் எல்லா நிதியும் உக்காந்து பாத்தோம்ன்னு சொல்லிப்போட்டா என்ன செய்ய ? அவங்க என்ன கடுப்பாட்டுக்கு எடுத்துக்காட்டா ? சும்மா டமாசுக்குத்தான் எழுதியிருப்பீங்க ...இல்லை ??!!!

///2 ) புவனேஸ்வரி விவகாரத்தில் வெகுண்டு எழுந்து தினமலர் ஆசிரியர் மேல் நடவடிக்கை எடுக்க கருணாநிதியை குறைந்த கால அவகாசத்தில் சந்தித்த தமிழ் திரை உலகின் அறிவாளிகள், கவரிமான்கள், தங்கள் சக சகோதரியான ரஞ்சிதாவின் மானத்தை காப்பாற்றும் பொருட்டு சன் டிவியின் மீதும் ...நிதிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு உடனடியாக கருணாநிதியை சந்திப்பார்களா?///

அண்ணே !! (இல்லை தம்பியா ??) நெசமாவே டமாஸ் தூள் கெளப்புரீங்க.. கருணாநிதியின் பேரன் மீது ந்டவடிக்கை எடுக்க கருணாநிதிக்கும் பையன்களுக்கும் தான் .... சும்மா சும்மா நீங்களும் ...

ஒரே வழிதாண்ணே

சாதி சங்கம், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனர் சங்க, ஆசிரியர் சங்கம், வங்கி ஊழியர் சங்கம், செருப்பு தைப்போர் சங்கம், செருப்பு வாங்குவோர் சங்கம் (அதாங்க நுகர்வோர் சங்கம் ) ..அந்த சங்கம் ..இந்த சங்கம் போல, சாமியார்கள் சங்கம் ஆரம்பிச்சு சாமியார்கள் எல்லாம் போராடுவது தான் ...ஒரே வழி

சந்தடி சாக்கில இந்த இடுனர் பல சாமியார்கள் பெண்களை என்னாவோ செஞ்சார்கள்ன்னு ஒரு போடு போட்டார் பாருங்க ...

இப்ப அரசே ரேப் கேஸ்ல தான் இறங்கி இருக்குது

Anonymous said...

Very reasonable post.

Anonymous said...

அடுத்தவர் மீது உள்ள குறைகளை பெரிது படுத்தும் இந்த மக்கள், என்று தன் மீது உள்ள குறைகளை கவனிக்க ஆரம்பிக்கிறார்களோ, அன்று தான் நமது சமுதாயம் முன்னேறும். ஊரார் கதைகளில் ஆர்வம் காட்டுவதை விட்டு விட்டு , போய் பிள்ளைகளை படிக்க வைங்கப்பா.

- ராஜன்

Tamil Nanban said...

miga sareyana paarvai.

Anonymous said...

intha suntv niruvanathukku hindu mathatthil nadakkum thavarukal mattum than kannukku therikiratha matra mathangalai patri pesa sollungal parpom iniyavathu thirunthuma intha sun tv.

சுப. முத்துக்குமார் said...

//எனக்கு அக்காட்சியை பார்த்தபோது நித்யானந்தா என்கிற அந்த 33 வயது இளைஞனின் மீது பச்சாதாப உணர்வு ஏற்பட்டது.பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. அவனும் சாதாரண மனிதன்தானே.சின்னப்பையனான அவன் அவனோடு விரும்பி உறவு கொள்ளும் பெண்ணோடு இருக்கும் கணத்தைப் படம் பிடித்து ஊருக்கே காட்டுவது நாகரிகமாக எனக்குப்படவில்லை.// அந்தப்பெண் (ரஞ்சிதா) அங்கேயும் போய் அந்த ஆணுக்கு்க் கால் அமுக்கிவிட்டுக்கொண்டும் அந்த "நித்யானந்தம் என்ற இளைஞனுக்கு" பணிவிடை செய்து கொண்டுமிருக்கிறாளே என்றுதான் முதலில் எனக்குப் பட்டது.

காதர் அலி said...

நவீன அபினியாக நாங்கள் இருக்கும் போது நீ எதற்கையா? சன் குழுமத்துக்கு சரியான சவுக்கடி.நித்யானந்தாஜி அடுத்த நிகழ்வுக்கு கேமரா இல்லாம பார்த்துக்கங்க.