Monday, October 19, 2009

மு.சித்ராதேவிக்கு உதவுங்கள்

யார் சிரித்தால் தீபாவளி என்கிற என் முந்தைய பதிவைப் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து அமிர்தவர்ஷினி அம்மா எனக்கொரு மின்கடிதம் அனுப்பினார்கள்.கவிதா என்கிற அந்த பட்டாசு விபத்தில் கைகளும் முகமும் சிதையுண்ட பெண்ணுக்கு அவருடைய வெளிநாடுவாழ் நண்பர்கள் மூலம் உதவிகள் செய்ய விரும்புவதாகவும், ஆகவே அந்தப்பெண்ணின் முழு முகவரி மற்றும் தேவைகள் பற்றி அறியத்தருமாறு கேட்டிருந்தார். உண்மையிலேயே தாயுள்ளத்தோடு அவர் எழுதிய வரிகள் என்னை நெகிழ வைத்தன. ஆகவே கவிதா என்று நான் குறிப்பிட்ட மு.சித்ராதேவி பற்றிய விபரங்களை அவருக்கு இ மெயிலில் அனுப்பாமல் இங்கேயே எல்லோருக்குமாகப் பதிவு செய்கிறேன்.சித்ராதேவியின் புகைப்படத்தையும் தந்துள்ளேன்.

சித்ராதேவிக்கு உதவ விரும்பும் உள் மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் நேரடியாக அவருடைய குடும்பத்தாரைத் தொடர்பு கொண்டு உதவிகள் செய்திட வேண்டுகிறேன்.

பெயர் – மு.சித்ராதேவி /வயது - 17

தாயார் –சுந்தராம்பாள். தந்தை – க.முனியசாமி

முகவரி – 109/44 பி. புதுத்தெரு,

அம்மன் கோவில்பட்டி பாகம்,சிவகாசி வட்டம்

விருதுநகர் மாவட்டம்,தமிழ்நாடு,இந்தியா

பின் கோடு-626123

கல்வித்தகுதி- ஏழாம் வகுப்பு (இடை நிற்றல்-விபத்து காரணமாக

முகத்தில் ஏற்பட்ட காயம் சக மாணவர்கள்

பயந்ததன் காரணமாக பள்ளி செல்லவில்லை)

உடன் பிறந்தோர்- மு.கார்த்தீஸ்வரி (24)-மணமாகிவிட்டது

மு.மகாலட்சுமி(22)-மணமாகவில்லை

மு.ராஜா (21)- மணமாகவில்லை-(ரூ 1200

மாதச்சம்பளத்துக்கு ஒரு மருந்துக்கடையில் பணி புரிகிறார்)

தந்தை திரு.க.முனியசாமி சிவகாசியில் ஒரு அச்சுக்கூடத்தில் தொழிலாளி அவருடைய மாத வருமானம் ரூ 2500/-

வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.

சித்ரா தேவிக்குத் தேவைப்படும் உதவிகள் – தொடர்ந்து அவரைப் பராமரிக்க வருமானம்-அவரால் கைகளைப் பயன்படுத்த முடியாது.

3 அறுவைச்சிகிச்சைகள் செய்தால் செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.மருத்துவச்செலவுகளுக்கு உதவி தேவை.தொடர்ந்து படிக்க வேண்டும் என்கிர ஆர்வமும் சித்ராதேவிக்கு இருக்கிறது.

யார் என்ன உதவி செய்ய முடியுமோ செய்யுங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

தொடர்புகளுக்கு : 91 9952500713

தோழர் சுகந்தி ( அனித்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்)-செல் -919442432659

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

6 comments:

ஆ.ஞானசேகரன் said...

//சிறு துரும்பும் பல் குத்த உதவும்.//

நல்ல விடயம்... உதவிகள் கிடைக்கட்டும்

மண்குதிரை said...

thank you sir,

அமிர்தவர்ஷினி அம்மா said...

பதிவிட்டதற்கு நன்றி சார். இன்னும் நிறைய பேரால் நிறைய உதவிகள் கிடைக்கக்கூடும்.

நட்புடன் ஜமால் said...

உதவிகள் நிச்சியம் உண்டு ...

தமிழ் அமுதன் said...

நன்றிகள்...! உதவிகள் நிச்சயம் கிடைக்கும்..!

RAMYA said...

நல்ல விஷயம்தான் நிச்சயம் கிடைக்கும்!