Thursday, June 11, 2009

ஏப்ரல்மாதச் சூரியனைப் பிழிந்த சாறு..

solitude-1 நேற்றுத் தற்செயலாக பழைய ‘வேர்கள்’ இதழ்களைப் (பைண்டிங்) பார்த்துக்கொண்டிருந்தபோது இரண்டு விளம்பரங்கள் கவனத்தை ஈர்த்தது.அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத்தோன்றியது.அந்த விளம்பரம்:

I

செப்டம்பர் 97 இல் வெளிவருகிறது

கமலாதாஸ் கதைகள்

கமலாதாஸின் படைப்புக்கள் சில சமயம் ஒரு பழைய ஆல்பத்தைப்போல

இழந்துபோன துக்கத்தில் நம்மை ஆழ்த்துகிறது.வேறு சமயம் ய்தேச்சையாய் நம்மைக் கடந்துபோகும் ஒரு காட்சியமைப்பாய் சுற்றுப்புறம் பற்றி நமது கருத்தாக்கங்களைக் காயப்படுத்துகிறது.இளமைக்கால நினைவுகளின் அழுத்தி வைக்கப்பட்ட தேம்பலில் கரைந்து போகும் தருணத்திலும் ஓர் அறுவைச்சிகிச்சை நிபுணணின் உற்சாகத்தோடு காதல், தாம்பத்தியம் பற்றிய அங்கீகரிக்கப்பட்ட நம்பிக்கைகளைக் கீறி அறுக்கும் வேளையிலும் முற்றிலும் தனித்துவத்தை வெளிக்கொணர்கிறது.

1956ல் இருந்து கமலாதாஸ் எழுதிய படைப்புகளின் தேர்ந்தெடுத்த தொகுப்பு

ஒரு குறு நாவலும் பதின்மூன்று சிறுகதைகளும்

மொழிபெயர்ப்பு : நிர்மால்யா

பக்கங்கள் 168 விலை ரூ.45

இது ஒரு வேர்கள் வெளியீடு

II

கமலாதாஸ் கதைகள்:தமிழில் நிர்மால்யா

வௌவால்கள் சுற்றித்திரியும் பழைய நாலப்பாட்டு வீட்டின் அந்தி வேளைகள்,தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட ஒரு வேலைக்காரிப் பெண்ணின் விடை தெரியாத நிசப்தம்,படுக்கையில் காட்டெருமையின் வீரியத்தை வெளிப்படுத்தும் காதலன் உடம்பின் அடங்காத மூச்சிறைப்பு,கிளாசில் பிழிந்தெடுத்த ஆரஞ்சுச் சாற்றைப் போன்ற ஏப்ரல் மாதச்சூரியன்,நிர்வாண மனிதர்கள் நடனமாடும் பம்பாய் தெருவில் கோடைக்கால இறுதியில் வந்து சேரும் சிறிய மழை,மரணத்தைக் கண் முன் பார்த்த நாட்களில் தலையில் அறைந்தவாறு வரும் மருத்துவமனைப் படுக்கையின் மருந்து நெடி , மஞ்சள் துணி போர்த்தப்பட்ட நெருக்கமானவரின் பூதவுடல் போன்ற சுடர்விடும் நினைவுச்சித்திரங்களிலிருந்து உந்துதலும், உயிர்ப்பும் பெற்ற பதினான்கு சிறுகதைகள்

மேற்கண்ட இரு விளம்பரங்களை கமலாதாஸ் காலமாகி நிற்கும் இந்த நாட்களில் தற்செயலாகக் காணக்கிடைத்த இந்த நிமிடம் அபூர்வமான ஒரு மனநிலையைத் தந்துகொண்டிருக்கிறது.

வேர்கள் என்கிற பத்திரிகை மற்றும் அது முன்வைத்த இலக்கிய இயக்கம் இவ்விரண்டின் மீதும் இந்த நிமிடத்தில் மீண்டும் அளப்பரிய மரியாதை உண்டாகிறது.இராமலிஙம் என்கிர அந்த மகத்த்தான மனிதரும் அவரோடு துணை நின்ற நெய்வேலி நண்பர்களும் 90களில் நடத்திய வேர்கள் இயக்கம் இடையில் நின்று போனாலும் அது இதோ இந்த நிமிடத்திலும் மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்தியபடி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.ஆகவே சிறு சிறு கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு சமயங்களில் மனம் சோர்வடைந்துபோகும் அன்பர்கள் மனம் துவள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.நமக்கு என்றைக்கும் அழிவில்லை.

மேலே கண்ட விளம்பரப்படி கமலாதாசின் கதைகளை வேர்கள் வெளிக்கொண்டு வர முடியவில்லை.வேறு யாரேனும் கொண்டு வந்தார்களா என்பதும் எனக்குத் தெரியவில்லை.வந்திருந்தால் அது இன்று மீண்டும் மறுபதிப்பு வந்தால் நல்லது.விபரம் தெரிந்த நண்பர்கள் தெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.புத்தகம் வராவிட்டாலும் கூட இந்த விலம்பரத்தின் வரிகள் கமலாதாசின் எழுத்தின் சாரத்தைப் பிழிந்து தந்துள்ளன எனலாம்.நிர்மால்யாதான் இவ்வரிகளை எழுதியிருக்க வேண்டும்.அவர் இப்போது எங்கிருக்கிறார் என்ன செய்துகொண்டிருக்கிரார் என்பதும் நான் அறியமாட்டேன்.

ஆனால் மேற்கண்ட இரண்டாவது விளம்பரத்தில் உள்ள ஒரு வரி மாற்றப்பட வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.கிளாசில் பிழிந்தெடுத்த ஆரஞ்சுச் சாற்றைப்போன்ற ஏப்ரல் மாதச் சூரியந் என்கிற வரிதான் அது. அவருடைய ஒரு கவிதை இப்படித்துவங்கும் The April sun squeezed like an orange in my glass –அவ்வரியிலிருந்தே இவ்விளம்பர வரி எடுக்கப்பட்டதெனில் மொழிபெயர்ப்பு சரி செய்யப்படவேண்டுமல்லவா?

சரி.

கமலாதாசின் கவிதை ஒன்று ‘வேர்கள் ‘அக்-டிச-96’ இதழில் வந்தது.அதைக் கீழே தருகிறேன்:-

சில வாசகர்களோடு

இரண்டு வார்த்தை

போனிலும் கடிதத்திலும்

விஷம் கக்குபவர்களே

என்னை வெறுப்பவர்களே

உங்கள் இகழ்ச்சியை நான்

கடந்து வாழ்கிறேன்.

என் கவிதை கோழி –எச்சத்தைத் தண்ணீராய் கழித்ததைப்

போல இருக்கிறது என எழுதி அறிவித்த நண்பரே,

என் புகைப்படம் தனக்கு சுய இன்பம் செய்ய

கொஞ்சமும் உதவவில்லை எனத் தெரிவித்த

அறியப்படாத இளைஞனே

உங்கள் மனதின் அகோரத்தையும்

நான் கடந்து வாழ்கிறேன்

என் இலக்கியப்படைப்புகள் குறிக்கோள் இல்லாதவை

எனத் தெரிவிக்க மட்டும்

மதியம் உறங்கிக் கொண்டிருந்த

என் கணவரை எழுப்பி என் வீட்டு

வாசற்படிக்கு வந்த அறிவுஜீவி,

நான் உங்கள் ஏளனத்தையும் கடந்து வாழ்கிறேன்.

ஆம்,இதோ நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

சிரிக்கிறேன்,பாடுகிறேன்,உறங்குகிறேன்

தூக்க மாத்திரைகளைத் தேடி மருந்துக்கடைகளில்

ஏறி இறங்குவதில்லை நான்

நீங்கள் ஒவ்வொருவரும் மண்ணாகிவிடும்போதும்

மிஞ்சியிருப்பேன் நான்

மையால் கருமைப்படுத்திய என் இரு விழிகளுக்கும்

தொலைவில்-வெகு தொலைவில், ஒரு வற்றாத

நீர் நிலையைப்போல என் கண்ணீர்

தேங்கி நிற்கிறது

இருப்பினும் நான் அழுவதை நீங்கள்

காணமாட்டீர்கள் ஒரு போதும்.

(தமிழில்-நிர்மால்யா)

கவிதை எழுதவோ அல்லது ஏது காரணமாகவோ பொது வெளியில் வந்து உலவும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது போன்ற ஒரு கவிதை எழுத அவசியம் இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கிறேன்.எவ்வளவு மோசமான ஓர் ஆணாதிக்கச் சுழலில் நாம் வாழ விதிக்கப்பட்டிருக்கிறோம்.

வாழ்க வேர்கள்!

வாழ்க கமலா அக்கா!

8 comments:

Krishnan said...

கமலாதாஸ் அவர்கள் மாதவிக்குட்டி மற்றும் கமலாசுரையா ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார்...

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

கோகுலன் said...

நல்ல பகிர்வு பதிவு தமிழ்செல்வன் ஸார்..

//நீங்கள் ஒவ்வொருவரும் மண்ணாகிவிடும்போதும்
மிஞ்சியிருப்பேன் நான்
மையால் கருமைப்படுத்திய என் இரு விழிகளுக்கும்
தொலைவில்-வெகு தொலைவில், ஒரு வற்றாத
நீர் நிலையைப்போல என் கண்ணீர்
தேங்கி நிற்கிறது
//

இந்த வரிகள் எனை பெரிதும் கவர்ந்தன.

நன்றி.

சேரல் said...

ஒரு பெண் படைப்பாளியை இப்படியொரு உச்சநிலையிலான கோபத்துக்கு ஆட்படுத்துவதுதான் நம்மால் ஆகக்கூடி செய்ய முடிந்திருக்கிற செயலா?

நல்ல ஓர் ஆக்கத்தினை அளித்திருக்கிறீர்கள். நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

காத்தவராயன் said...

மண்ணிக்கவும் தமிழ்ச்செல்வன் சார்..... இந்த பதிவிற்கு சற்றும் தொடர்பில்லாத பின்னூட்டம் இட்டதற்கு.

தாங்கள் எழுதிய "வெயிலோடு போய்" சிறுகதை புத்தகமாக வெளிவந்துள்ளதா? வெளிவந்துள்ளது எனில் புத்தகத்தின் பெயர், வெளியிட்ட பதிப்பகத்தின் பெயர் போன்ற விவரங்களை தெரிவிக்க முடியுமா?
புத்தகமாக வெளிவரவில்லை எனில் உங்கள் தமிழ்வீதியில் பிரசுரிக்கலாமே?

ஏன் கேட்கிறேன் என்றால்..... சிறுகதையை படித்த பின்னர் "பூ" படத்தை பார்க்கலாம் என எண்ணி அதனை பார்க்காமல் காலம் தாழ்த்தி வருகிறேன், நண்பர்கள் வட்டாரம், இணையதளத்தில் தேடியும் சரியான தகவல் கிடைக்கவில்லை.

Anonymous said...

It is a disgusting fact that women in public space receive not only criticism on her ideas and views but awful comments which are of sexual nature... kamala das is no more.. but what she said about the society is true.. many more kamalas should replace her..

pavithra

Deepa said...

Please come back to this page. Looking forward to your writings.

Raman said...

Comrade,
Why there is a loooooong Gap. Please come back soon

Raman