அழகிரியார் மாவட்டத்தில் நாடாளுமன்றத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததும் அதற்கான விஞானப்பூர்வமான ஏற்பாடுகளைச் செய்து ஒரு புதிய தொழில்நுட்பத்தை அண்ணன் உலகுக்கு அளித்ததும் அனைவரும் அறிந்த பழைய செய்திகள். இப்போது மேலும் மேலும் பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.அவற்றில் என் மனதைத் தொட்ட ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்கிறேன்.
அநேகமாக அழகிரி மாவட்டத்தின் 70 சதவீத வாக்காளர்களுக்கு கவர் பெண் போலீசார் மூலமும் மற்றும் பொருத்தமான அரசுத்துறை நபர்கள் மூலமும் (effective use of govt machinery – இதில் 60 ஆண்டு ஆல் இண்டியா அனுபவம் உள்ள காங்கிரசெல்லாம் அண்ணனிடம் பிச்சை வாங்க வேண்டும்) போய்ச்சேர்ந்துள்ளது.சத்தமில்லாமல் எல்லோரும் வாங்கிக்கொண்டார்கள்.வாங்க மறுத்தால் அண்ணனுக்கு எதிர் வாக்கு என்று அடையாளப்படுத்தப்பட்டுவிடும் அபாயம் கருதியும் பலர் மறுக்கவில்லை.மார்க்சிஸ்ட் ஊழியர்கள் குடியிருக்கும் பகுதிகளில் யாருக்குமே பணப்பட்டுவாடா நடக்கவில்லை.பிடிபடும் அபாயம் இருந்ததால்.அதன் காரணமாக சனியன் போல இவன் ஒருத்தன் இங்க வந்து குடியிருக்கான் பாரு. அண்ணன் மூலம் நமக்குக் கிடைக்க வேண்டிய ‘பெனிபிட்’ எதுவும் கிடைக்காமப் போகுது பாரு என்று கட்சி ஊழியர்கள் unpopular ஆன கதையும் பரவலாக நடந்துள்ளது.
பொதுவாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவுத்தளங்களாக இருக்கும் தொழிற்சங்கப் பகுதி மற்றும் மத்தியதர வர்க்கம் இம்முறை அதிமுகவுடன் அவர்கள் நின்றதால் வாக்களிக்கவில்லை.அதிமுக கடந்த ஆட்சியில் உண்டாக்கிய காயம் இன்னும் அவர்களுக்குஆறவில்லை. பணம் வாங்குவதில் அவர்கள் எந்தக் கூச்சமும் படவில்லை என்பதை எழுதக்கூசத்தான் செய்கிறது.அரசு ஊழியர்,ஆசிரியர்,சஃபாரி போடும் அரசு அதிகாரிகள் என எல்லோருமே சந்தோசமாகக் கவர்களை வாங்கிக்கொண்டுள்ளனர்.
ஆனால் மேலூர் வட்டம் மேலவளவு கிராமத்தில் வாழும் 39 தலித் (பறையர் சமூகத்தினர்) குடும்பங்கள் “முருகேசன் கொலை செய்யப்பட்ட வழக்கு உட்பட எங்கள் வாழ்விலும் தாழ்விலும் தொடர்ந்து எங்களோடு உடன் நிற்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கே நாங்கள் வாக்களிப்போம்.” என்று பகிரங்கமாகக் கூறி ராத்திரி வீடுகளுக்குள் போடப்பட்ட 39 கவர்களை காலையில் திமுக அலுவலகத்துக்குத் திருப்பி அனுப்பி விட்டுள்ளனர்.
பெல்ட்டுகளுக்குள் தொப்பைகளை மறைக்கும் மத்திய தர வர்க்கம் அரசியலற்றுக் கைநீட்ட – மேலவளவு மக்கள் உறுதியான அரசியலுடன் நின்றது அனல்பறக்கும் பாலையில் ஓர் அருஞ்சுனையாய் நம்பிக்கை தருகிறது.
அதேபோல உத்தப்புரம்,பாப்பாப்பட்டி, கீரிப்பட்டைப் பகுதி தலித் மக்கள் மார்க்சிஸ்ட்டுகள் பக்கம் உறுதியாக நின்றுள்ளனர்.ஆனால் அக்கிராமங்களுக்கு பக்கத்து கிராமங்களில் வாழும் தலித் மக்கள் கூட மார்க்சிஸ்ட்டுகளுக்கு வாக்களிக்கவில்லை. ஏனெனில் கலைஞர்தான் முதன் முறையாக திருமாவளவனுக்கு 2 சீட் கொடுத்து எங்கள் இனத்தை கௌரவப்படுத்தியுள்ளார்.அந்த நன்றியை நாங்க மறக்க முடியுமா என்று பகிரங்கமாகக் கூறியுள்ளனர்.
மக்களின் சமூக மனதின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள இத்தேர்தல் நல்ல பல பாடங்களை வழங்கியுள்ளது.சரி. அஞ்சாநெஞ்சருக்கு மத்திய ஆட்சி தம்பிக்கு மாநில ஆட்சி அப்போ கனிமொழிக்கு என்னா? ஏமாத்திட்டாரே கலைஞர் என்று கனிமொழிக்காக கண்ணீர் உருளப் பேசுபவர்கள் நிறையப்பேர் உள்ளனர்.அரண்மணை அரசியலில் அதிகாரம் கிடைக்காத இளவரசிகளுக்காகவும் இளவரசர்களுக்காகவும் கண்ணீர் விட்டு அழுத நம் முன்னோர்களின் வாரிசுகளாக இன்றும் அம்மனநிலை தமிழ்ச்சமூகத்தில் தொடர்கிறது.
பார்த்தால் ஜீன்ஸ்களோடும் லேப்டாப்புகளோடும் ஒரு நவீன சமூகம் போலத்தான் நம் தமிழ்ச்சமூகம் வெளிப்பார்வைக்குத் தெரிகிறது.ஆனால் தொடர்ச்சியான திராவிடக்கட்சிகளின் முயற்சியால் அவர்கள் சங்கம் மருவிய காலத்திலேயே இருத்திவைக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது.
இதையெல்லாம் மீறி மதுரையில் மோகன் சுமார் 3 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார் என்பதும் ஒரு முக்கியமான செய்தியாகும்.
14 comments:
//பணம் வாங்குவதில் அவர்கள் எந்தக் கூச்சமும் படவில்லை என்பதை எழுதக்கூசத்தான் செய்கிறது.அரசு ஊழியர்,ஆசிரியர்,சஃபாரி போடும் அரசு அதிகாரிகள் என எல்லோருமே சந்தோசமாகக் கவர்களை வாங்கிக்கொண்டுள்ளனர்.//
வருத்தப்பட வேண்டியதும்.. அதேசமயம் சிந்திக்கப்பட வேண்டிய விடயம்
//ஆனால் மேலூர் வட்டம் மேலவளவு கிராமத்தில் வாழும் 39 தலித் (பறையர் சமூகத்தினர்) குடும்பங்கள் “முருகேசன் கொலை செய்யப்பட்ட வழக்கு உட்பட எங்கள் வாழ்விலும் தாழ்விலும் தொடர்ந்து எங்களோடு உடன் நிற்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கே நாங்கள் வாக்களிப்போம்.” என்று பகிரங்கமாகக் கூறி ராத்திரி வீடுகளுக்குள் போடப்பட்ட 39 கவர்களை காலையில் திமுக அலுவலகத்துக்குத் திருப்பி அனுப்பி விட்டுள்ளனர்.//
ஆழும் வர்க்கத்தினரால் உண்டாக்கப்படும் இடைஞ்சலுக்கு இவர்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கப்படும். இதுபோல தருனங்களில்தான் நாம் சிந்தனையை கோட்டைவிட்டுவிடுகின்றோம் என்பது முக்கியம்... ஆபத்தான சமயங்களில் யார் இவர்களுக்கு பாதுகாவலாக இருப்பது? எதோ தாழ்த்தப்பட்ட சமுகம்தானே என்று கைகட்டி விடப்படுவதும் பல இடங்களில் பார்த்த விடயம்......
சோழர் பரம்பரையில் ஒரு மத்திய மந்திரி, செல்ல ,பேர்சொல்லும் பிள்ளைக்கு,வருங்கல அரியனை ஏற்பாடு,கொஞ்சும் கனிக்கு பாவம் அவள் எதிகாலம் ஒரு ?.
இது சோழர் பரம்ரை- தென் நாட்டு சாம்ராஜ்யம் . அடுத்த முறை சோழ பேரரசு அகண்டம் செய்யப்படும் நம்மை ஆண்ட வெள்ளையர்க்கோட்டை லண்டனில் இடம் பிடித்து பங்கு பெரும் போது கொஞ்சும் கனிக்கு இலக்கிய மந்திரி கூடுதலாக தொழில்துறை அறிவிக்கபடும் - அப்போது சோழ பரம்பரை உலகை ஆலும் .அதுவும் போதது ஆதலால் ஜனநாயக பெருசு அமெரீதக்காவில் .அக்கவுண்ட்டில் இல்லாத புள்ளைக்கு இடம் கிடைக்கும்
இதனால். தமிழன் உலகாண்ட பெருமை வரலாறு பேசும்
சோழர் பரம்ரை நாளை உலகை ஆளும்
பெருமை தடுக்கும்,
வெருக்கும்,மறுக்கும் எல்லறையும் ,
அடிப்போம், முடிப்போம்,
ஆதலால் தமிழர்களே ,தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும்,
கட்டுமர மகமிதப்பேன் , கவிழ்ந்துவிடமட்டேன்,
அதில் ஏரி எனது சோழர் பரம்ரை பயணம் செய்யும் .
சோழர் பரம்பரையில் ஒரு மத்திய மந்திரி, செல்ல ,பேர்சொல்லும் பிள்ளைக்கு,வருங்கல அரியனை ஏற்பாடு,கொஞ்சும் கனிக்கு பாவம் அவள் எதிகாலம் ஒரு ?.
இது சோழர் பரம்ரை- தென் நாட்டு சாம்ராஜ்யம் . அடுத்த முறை சோழ பேரரசு அகண்டம் செய்யப்படும் நம்மை ஆண்ட வெள்ளையர்க்கோட்டை லண்டனில் இடம் பிடித்து பங்கு பெரும் போது கொஞ்சும் கனிக்கு இலக்கிய மந்திரி கூடுதலாக தொழில்துறை அறிவிக்கபடும் - அப்போது சோழ பரம்பரை உலகை ஆலும் .அதுவும் போதது ஆதலால் ஜனநாயக பெருசு அமெரீதக்காவில் .அக்கவுண்ட்டில் இல்லாத புள்ளைக்கு இடம் கிடைக்கும்
இதனால். தமிழன் உலகாண்ட பெருமை வரலாறு பேசும்
சோழர் பரம்ரை நாளை உலகை ஆளும்
பெருமை தடுக்கும்,
வெருக்கும்,மறுக்கும் எல்லறையும் ,
அடிப்போம், முடிப்போம்,
ஆதலால் தமிழர்களே ,தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும்,
கட்டுமர மகமிதப்பேன் , கவிழ்ந்துவிடமட்டேன்,
அதில் ஏரி எனது சோழர் பரம்ரை பயணம் செய்யும் .
இனி எப்போதும் சிபிஎம் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாது என்று தில்லியிலுள்ள சிபிஎம் தலைமை அறிவிக்குமா.திமுகவுடன் இனி ஒரு நாளும் கூட்டணி இல்லை என்று சிபிஎம் தமிழ்நாட்டுச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றுமா.
தமிழ் நாட்டில் காங்கிரஸ்,திமுக,அதிமுக அல்லாத
அணியை அமைக்க சிபிஎம் முயற்சி செய்யலாம்.அதை விடுத்து திமுக/அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டு உருப்படாமல் போகிறது சிபிஎம்.
மேலவளவு, பாப்பாப்பட்டி,கீறிப்பட்டி போன்ற இடங்களைத் தவிர்த்து மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மற்ற இடங்களில் பணம் அவர்களை விழுங்கியதா ? அல்லது நமது அரசியலை மறுக்கும் அளவுக்கு தலித் மக்கள் அரசியல் படுத்தப்பட்டுள்ளார்களா ?
என்பதை சிந்திக்க வேண்டும். மத்தியத்தர வர்க்கம் அதிமுக ஏற்படுத்திய வலியிலிருந்து இன்னும் மீளவில்லை என்பது முற்றும் உண்மை.
அழகிரியார் திருமங்கலத்தை மதுரையிலும் வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ளார் என்பது இந்திய சமுகத்தால் மௌனமாக மட்டுமல்லாமல் வெளிப்படையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜனநாயகம் ஹைஜாக் செய்யப்பட்டுள்ளதை ஜனநாயகத்தின் அனைத்துத் தூண்களும் அங்கீகரிக்கும் விதமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றன. இந்திய ஜனநாயகம் எழுபதுகளில் சந்தித்த சவாலை விட தற்பொழுதைய சவால் மிகப்பெரியது.எழுபதுகளில்
அரசியல் என்பது ஒரு வியாபாரம். அதில் அதிக முதலீடு போடிபவனே ஜெய்கமுடிய்ம். அதே நேரம் நம் வாழ்கை ஏற்கனவே குத்தகை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. அது இறப்பு பட்டுமே அல்ல, பலர் செய்த கொடுமையை அவர் இந்த காலத்திலேயே அனுபவிபர். நியூட்டன் மூன்றாவது கூற்று மாறுவதில்லை.
பினராய் விஜயன் அமைச்சராக இருந்தபோது ஜனநாயகப் பூரவமாக ஊழல் செஞ்சதாவும் அதற்கு விசாரணை நடத்த கவர்னர் அனுமதி கொடுத்த்தாகவும் அதற்கு எதிராக கேரள தோழர்கள் போராடுவதாகவும சொல்றாங்களே... இது திட்டமிட்ட சதியா... அழகிரி வேற விஜயன் வேறயா
i criticise periyaar அவர்களே இது ஒரு குழப்பமான சூழல் .எந்தக் கட்சியையும் நம்பாமல் சிபிஎம் தனித்து வளர்ச்சி அடைந்தால் மட்டுமே சில விஷயங்கள் சாத்தியம். சிபிஎம் தனித்துப் போட்டியிட்டு ஒரு முறை அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த வரலாறு உங்களுக்குத் தெரியாதா?
சிபிஎம் மாறுவதில்லை.திமுக,அதிமுக கட்சிகள்தான் மாறுகின்றன.பாஜகவின் நண்பராக திமுக இருக்கும்போது அவர்கள் சிபிஎம்மை விட்டுப் போகிரார்கள்.எப்போதுமே மாறுவதும் தாவுவதும் அவர்கள்தான்.சிபிஎம் சின்னக் கட்சி என்பதால் இவர்கல்தான் மாறுவதாக உங்களுக்குத் தோற்றம் கிடைக்கிறது.
என்னைப்பொறுத்தவரை திமுக,அதிமுக எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் எப்போது என்ன நிலை எடுப்பார்கல் என்பது தெரியாது.அவர்களுக்கு ஆட்சிதான் முக்கியம்.நாடோ மக்களோ அல்ல.ஆகவே அவ்வப்போதைய நிலைமைக்கேற்ப அக்கட்சிகளைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்.இவர்கலைப் பொறுத்து ஒரு நிரந்தர முடிவை இடதுசாரிகல் எடுக்க முடியாது.அதை த்தேச நிலைமைகல்தான் முடிவு செய்யும்.
மக்கள்தாசன் அவர்களே, தலித் மக்கள் திருமாவுக்கு 2 சீட் கொடுத்து தங்களை திமுக கௌரவப்படுத்திவிட்டதாக நினைப்பதில் தவறில்லை.தங்களின் அடையாளமாக அவர்கள் திருமாவைக் கருதும்போது அவர்களின் பார்வை சரிதான்.திருமாதான் அவர்களின் உண்மையான பிரதிநிதியாக இப்போதும் வாழ்கிறாரா என்பதுதான் நம் கேள்வி.
நன்மாறனின் கழுத்துக் காயம் இன்னும் சரியாகவில்லை, ஆனால் சிபிஎம் மலர் செண்டுகள் கருனாநிதியை வருடிக்கொடுக்கதுவங்கி விட்டனவே
மக்கள் ஒரு விஷயத்தில் தெளிவாகவே இருக்கிறார்கள்.
நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளுங்கள்.. அதில் கொஞ்சமாவது எங்களுக்குக் கொடுங்கள். அதன் பின் நாங்கள் எதையும் கேட்க மாட்டோம் என்று..
அதுதான் இந்தத் தேர்தலில் நடந்தேறியுள்ளது.
உண்மைத்தமிழன் சொன்னதும் சரிதான்.தணிகாசலத்தின் வருத்தம் எனக்கும் வந்தது.
Post a Comment