ஒரு காலத்தில் சமூக சீர்திருத்த இயக்கமாகப் பிறந்த திராவிட இயக்கத்திலிருந்து கிளை பிரிந்த திமுக இப்போது வெறும் பணபலத்தையும் (இது எப்படி வளர்ந்தது என்பது தனியாகப் பேசப்பட வேண்டியது) அராஜகத்தையும் மட்டுமே நம்பி நிற்கும் நிலைக்குத் தாழ்ந்து விட்டது.அதன் அடையாளச்சின்னமாக அஞ்சாநெஞ்சன் அண்ணன் அழகிரி திகழ்கிறார்.மதுரையில் அவரைத் தோற்கடிப்பது என்பது தமிழகத்தில் ஜனநாயகத்தை மீட்கும் போராட்டமாக திமுகவையேகூடக் காப்பாற்றும் போராட்டமாக இன்று எல்லோராலும் புரிந்துகொள்ளப்படுகிறது.
ஆகவே தமிழ்வீதிக்கு அடிக்கடி வர இயலாமல் வேறு வேறு வீதிகளில் சுற்றிக்கொண்டிருக்கிறேன்.அன்பர்கள் பொறுத்தருள வேண்டும்.
இன்னுமொரு செய்தி...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
மாநிலக்குழு
57/11, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,மதுரை-625001
பத்திரிகைச்செய்தி:28-4-09
கவிஞர் மதியழகன் மீது தாக்குதல்:தமுஎகச கண்டனம்______
புதுக்கோட்டை மாவட்ட தமுஎகச பொருளாளராகவும் தீக்கதிர் நிருபராகவும் பணியாற்றும் கவிஞர் சு.மதியழகன் நேற்று திமுகவினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருமங்கல பாணியில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் என்கிற இடத்தில் திமுகவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாணி விருந்தைப் புகைப்படம் எடுக்க எல்லாப் பத்திரிகையாளர்களும் சென்றுள்ளனர்.அப்போது திமுகவினரால் பத்திரிகையாளர்கள் துரத்தப்பட்டுள்ளனர்.தீக்கதிர் நிருபரான கவிஞர் மதியழகனை மட்டும் திமுகவினர் தனிமைப்படுத்தி உள்ளே இழுத்துச்சென்று கடுமையாகத் தாக்கியுளனர்.கேமிராவை உடைத்துள்ளனர்.கடுமையான காயங்களுடன் கவிஞர் மதியழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கவிஞர் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப்போட்டியில் இந்த ஆண்டு பரிசு பெற்ற கதையை எழுதியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அராஜகத்தையும் பணத்தையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு களம் இறங்கியுள்ள
திமுகவினரின் இக்கொடூரமான தாக்குதலை தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது. இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதும் எழுத்து சுதந்திரத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே தமுஎகச பார்க்கிறது.தமிழகத்தின் சகல பகுதி எழுத்தாளர்களும் கலைஞர்களும் இத்தாக்குதலை கண்டிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனக் காவல் துறையைக் கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட செய்தியை தங்கள் இதழில் வெளியிடுமாறு வேண்டுகிறோம்
அருணன் ச.தமிழ்ச்செல்வன்
மாநிலத்தலைவர் பொதுச்செயலாளர்
33 comments:
தோழர்,
நேற்று தோழர் லீலாவதி, தற்போது தோழர்கள் நன்மாறன், தோழர் சு.மதியழகன்... தொடர்கதையாகவே போகிறது. இனிமேலாவது நாம் திமுகவோடு கூட்டணி அமைக்காமல் இருந்தால் நல்லது. எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்று இதுவரை பார்த்தது போதும்.
அருமை நண்பா
பகிர்வுக்கு நன்றி சார். என் பதிவில் உங்கள் பதிவுக்குச் சுட்டி தந்துள்ளேன்.
http://deepaneha.blogspot.com/2009/04/blog-post_27.html
பிரியாணி விருந்து போட்டத போட்டோ பிடிச்சு நரேஷ் குப்தாட்ட குடுக்க போன முன் பெஞ்சு செட்டு தயிர்சாதம் நீங்கதானா...
ஏனுங்க•.. ந்ந்திகிராமத்துல உங்க சிபிஎம் தோழரு பல பெண்கள பாலியல் பலாத்காரம் பண்ணி நிலத்த முதலாளிக்கு குடுக்க வச்சு ரோம்ப காலம் ஆகல•.. கேட்டா குற்றம் சாட்டின அப்பாவி பெண்கள் எல்லாம் நக்சலைட்டு ம்ம்தா அப்பிடிம்பீங்க•..இதோட ஒப்பிட்டா பிரியாணி எல்லாம் ஒரு மேட்டராங்க•. சும்மா ஜோக் பண்ணாதீங்க•..
தமிழ்வீதிக்கு வராம நீங்க போற வீதியில உங்களோட உலா வர்ற உற்சவ மூர்த்தி பேரு புரட்சித்தலைவியா... அப்போ புரட்சிய எப்போ பண்ணப் போறீங்க•..
இந்த வகையான ஜனநாயகத்தை நினைத்தாலே பயமாக உள்ளது.
"எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்று இதுவரை பார்த்தது போதும்"
Good comment, Many common people expect that CPIM should not join with other parties like DMK, ADMK or other bourgouise parties.
Sorry to type in English
Hariharan
"குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனக் காவல் துறையைக் கேட்டுக்கொள்கிறோம்."
தமிழ்ச்செல்வன், காவற்துறை நடவடிக்கை எடுக்குமென நம்புகிறீர்களா என்ன? 16ஆம் திகதிக்குப் பிறகு தமிழகம் என்னவாகுமோ என்றெண்ண...
//அராஜகத்தையும் பணத்தையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு களம் இறங்கியுள்ள?????????//
மக்கள் புரிந்துக்கொண்டு சரியான பாடம் கொடுப்பார்களா? இல்லை பிரியாணிக்காக சோரம் போவார்களா?
தோழர் சுப்பு,
தேசம் தீப்பற்றி எரிகிற போது நான் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்கொண்டுதான் தீயை அணைப்பேன் என்று அடம்பிடிக்க நாம் என்ன 68 ஆம் ஆண்டுகளின் நக்சல்பாரிகளா?
கிடைக்கும் சாக்கடையையும் கூடப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்.நாளைக்கே திமுகவோடும் சேர்ந்தும் ஒரு அரசியல் இயக்கம் நடத்த வேண்டி வந்தால் நடத்தத்தான் செய்வோம்.நம்மை அடிக்காத கட்சி ஏதாவது இந்தியாவில் உண்டா காங்கிரஸ் துவங்கி நக்சல்பாரி வரை எல்லாக்கட்சிகளும் நம் ஊழியர்கலைக் கொலை செய்துள்ளன.தாக்கியுள்ளன.
பீகாரில் நக்சல்பாரிகளுடன் கூட்டணி அமைத்து சிபிஐ,சிபிஎம் போட்டியிடுகின்றன.வங்கத்தில் அவர்கல் செய்துவரும் அட்டூழியங்களையும் நந்திகிராம் என்னும் ஊரில் நிலம் எடுக்கும் திட்டமே இல்லை என அரசு அறிவித்த பிறகு நில மீட்பு இயக்கத்தை மம்தா தலைமையில் நக்சலைட்டுகள் துவக்கி சகல பாவங்களையும் செய்தார்கள்.அதற்காக பீகாரில் அவர்களோடு நாம் கூட்டணி சேர்வதை தவிர்க்கவில்ல்லையே?
யாரோடு சேர்ந்து அரசியல் போராட்டம் நடத்துவது என்பதை மாறிக்கொண்டே இருக்கும் தேச நிலைமையும் மாறிக்கொண்டே இருக்கும் முதலாளித்துவக்கட்சிகளின் நிலை பாடுகளும் நம் சொந்த பலமும்தான் தீர்மானிக்கின்றன.
தொழிலாளி வர்க்க நலனுக்கு அதிகபட்சம் உகந்தது எது என்று பார்த்து அவ்வப்போதைய நிலைமைக்கேற்ப முடிவெடுப்பதுதான் சரி.
உணர்ச்சிவசப்பட்டு எந்நேரமும் டென்சனாக அலைவது நம் பாதை அல்ல.அது 68இல் பிரிந்துபோனவர்களின்பாதை.
ஒரிஸ்ஸாவில் நக்சல்பாரிகள் ஒரு அயோக்கிய இந்துத்வ் சாமியாரைப் போட்டுத்தள்ளினார்கள்.விளைவு? பல்லாயிரம் கிறித்துவ மக்கள் தாக்கப்பட்டார்கள்.பெண்கல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள்.கொலை செய்த நக்சலைட்டுகள் ஆரெஸெஸ்காரன் இதைச்சாக்கிட்டு சிறுபான்மை மக்களைத் தாக்குவான் என்கிற நிலைபாட்டில் யோசிக்கவில்லை.அல்லது அப்படித்தாக்குதல் வந்தால் அதிலிருந்து மக்களைக் காக்கிற வலு நமக்கு இருக்கிறதா என்கிற கணிப்பும் நக்சல்களுக்கு இல்லை.உணர்ச்சிவயப்பட்ட கொலை இன்று எத்தனை ஆயிரம் அப்பாவி மக்களுக்கு வினையாக முடிந்துவிட்டது.
தாக்கினால் திருப்பித்தாக்கும் வலுவும் மனநிலையும் நமக்கும் உண்டு.பல இடங்களில் செய்தும் இருக்கிறோம்.ஆனால் அதையும் பொதுவிதியாக நாம் வைக்க முடியாது.சூழலைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
சொந்தக்காலில் நிற்கும் வளர்ச்சியை எட்டும்வரை நாம் நிலைமைக்கேற்ப மக்கள் நலன் காக்கப் பல நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.
பதிவுக்கு நன்றி
to anony
வலைப்பக்கங்களில் பேர் சொல்லாமல் மறைந்திருந்து சாணி எறிவது ஊர்களில் மறைந்திருந்து மக்கல் மீது குண்டு எறிந்துவிட்டு ஓடுவது ஒரிஸ்ஸாவில் ஒரு சாமியாரைப்போட்டுத்தள்ளி ஓராயிரம் கிறித்துவ மக்களின் துயரங்களுக்குக் காரணமாக இருப்பது புரட்சித்தலைவி மம்தாவிடம் பாடம் கேட்பது அத்வானியுடன் கூட்டணி அமைத்து வங்கத்தில் மார்க்சிஸ்ட்டுகளை எதிர்ப்பது போன்ற பயங்கர புரட்சிகலைச் செய்ய நீங்க இருக்கும் போது எங்ககிட்ட ஏன் சாமி புர்ர்ரட்சியைத் தேடுறீங்க?
தமிழ்நதிக்கு
வருகைக்கு நன்றி.
நாளை மாலை தாக்குதலைக் கண்டித்துப் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.தேர்தல் மூலம் மட்டும் அடிப்படை மாற்றம் வந்துவிடாது என்று தெரிந்தும் தேர்தலில் பங்கெடுப்பது ப்பொலத்தான் இதுவும்.
ஹரிகரன்
தனியாக நிற்க வேண்டும் என்கிற குரம் மிகச் சன்னமானது.தனியாக 73இல் நின்று ஒரு இடர்த்தில்கூட டெப்பாசிட் கிடைக்கவில்லை சிபிஎம்முக்கு.தனியாக நின்று நம் கொள்கையைக் காப்பாற்றிக்கொள்ளலாம்தான்.ஆனால் இப்போதைய தேவை காங்கிரசும் பாஜகவும் ஆட்சிக்கு வராமல் தடுப்பது.அதற்கு என்ன செய்தால் நல்லது என்று யோசிப்பதுதானே ஒரு அரசியல் கட்சியின் சரியான பாதை?
கொஞ்சம் யோசித்துப்பாருங்களேன்.பதிவுக்கு நன்றி
ஆ.ஞானசேகரனுக்கு
பொறுத்திருந்து பார்ப்போம்.
தீபாவுக்கும் சுரேஷுக்கும் நன்றி
ஏனுங்க பக்கத்து நாட்டுல மனுசன் நாயா தெருவிலே சாகிறான்.
நீங்க தோழருங்க "கிள்ளுறான் சார். அடிக்கிறான் சார்"ன்னு அஞ்சாங்கிளாசு பையனுங்க பேச்சுல நிக்கிறீங்க.
பின்னே என்ன மயிருக்கைய்யா இலக்கியமும் தத்துவமும். லெனினும் மார்க்சும் மாவோவும் இன்னிக்கு வந்தா ஒங்க ராம் முதலா ஒங்க வரைக்கு போடா மசிரேன்னு சுட்டு தள்ளிட்டு போவானுங்க.
மனுசனை மனுசனா காணத்தெரியாமே இலக்கியம் வளக்குறானுகளாம். எழவு வீட்டுக்காயா எலக்கியம். புடுங்கி எலக்கியம்!
\\சொந்தக்காலில் நிற்கும் வளர்ச்சியை எட்டும்வரை நாம் நிலைமைக்கேற்ப மக்கள் நலன் காக்கப் பல நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.\\
நீங்கள் சொல்வது சரி. ஆனால் மக்களுக்கு இந்நிலை புரியுமா? அவர்களின் கேள்வி - நீங்களும் மாற்றி மாற்றி அணி மாறிக்கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். இது போன்ற பிம்பத்துடன் நாம் எப்போது சொந்தக்காலில் நிற்க முடியும்?
சரி... உங்களது வழிக்கே வருகிறேன். தற்போது அதிமுகவோடு அணி அமைத்துள்ளோம். தேர்தலுக்குப் பின்னர் பிஜேபி பதவியைப் பிடிக்க வாய்ப்பிருந்தால் அதிமுக நிச்சயம் அவர்களோடு போய்விடும். அதே போல்தான் காங்கிரஸ் கூடவும். திமுகவை அவர்கள கழட்டிவிட்டால், அதிமுகவிடம் நிறைய எம்பிக்கள் இருந்தால் இதுவும் நடக்கும். அப்போது நம் முயற்சி வீண்தானே?
அதுவும் தற்போது திமுகவும், அதிமுகவும் பாசிசத்தின் உச்சியில் இருக்கின்றன. இந்நிலையில் கூட்டணி தேவையா?
எனவேதான் திமுக, அதிமுகவுடன் கூட்டணி என்பது சரியல்ல என்று தோன்றுகிறது.
யோவ் அனானி, அதான் அண்ணன் கோவிக்கிறார்ல, பேசாம போவியா...சும்மா நச்சு நச்சுனு சங்கடப்படுத்திக்கிட்டு. 'சிங்கள ரத்னா'இந்து ராம் கூட உள்ளதெல்லாம் ஒரு high class நட்புய்யா. உனக்கெல்லாம் என்ன புரியும்?
நீங்க வாங்க தோழர், நாம டீ குடிச்சிட்டு கட்சி வேலையப் பாப்போம்.
நண்பரே மாறி மாறி கட்சிகளோடு கூட்டணி வைப்பதற்கு கொள்கை என்பது உங்களது தோளில் கிடக்கும் துண்டா என்ன ... என்று கேட்டால் கேட்டவன் நக்சலபாரி அல்லது டென்சன் பார்ட்டின்னு சொல்றது நேர்மையான நடைமுறையா... சொல்லுங்கள்...
நக்சல்பாரிகளை மட்டுமா கட்சியை கேள்வி கேட்ட 67 ன் மாணவர்களை கல்கத்தா நகர வீதி முனைகளில் பிணங்களாக தொங்க விட்ட ஒரே கட்சி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிதான்... மார்க்சிஸ்டுகளை கொன்றவர்களில் நக்சல்பாரிகளும் உண்டுதான்... ஆனால் முதலாளிகள் வாழ்வதற்காக விவசாய குடும்ப்ப் பெண்களை பாலியல் வல்லுறவு செய்த யாரும் நக்சல்பாரி அமைப்புகளில் கிடையாது...
ந்ந்திகிரமாத்தில் நீங்க நிலம் எடுக்கவில்லை என அறிவித்த பிறகுதான் மக்கள் அல்லது உங்கள் வாதப்படி நக்சலைட்டுகள் போராட ஆரம்பித்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம்... ந்ந்திகிராம மக்கள கேணயன்னு நினைக்கின்றீர்களா.. அவங்க ஊர்ல வந்து யாரோ ஒருத்தன் கலவரத்த தூண்டி போலீச வரவைச்சா மக்கள் பிடிச்சுக் குடுத்தாத்தானே அந்த ஊரு நிம்மதியா இருக்க முடியும்... இப்படி எளிய உண்மை அந்த மக்களுக்கு புரியாதா... அது புரியவில்லை என்றால் இதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத அளவில்தான் மேற்கு வங்கத்தில் மக்களது சமூக அறிவை நீங்கள் வளர்த்துள்ளீர்களா...
பீகாரில் நீங்கள் கூட்டணி அமைத்தவர்கள் நக்சல்பாரிகள் அல்ல•. லிபரேசன் போன்றோர் அன்று சாரு வை எப்படி விமர்சனம் இல்லாமல் நீங்கள் புரட்சித்தலைவியை ஏற்றுக் கொண்டது போல ஏற்றுக் கொண்டு செயல்பட்டார்களோ அதே போல இந்த பன்றித் தோழுவததிலும் நுழைய ஆசைப்பட்டு என்ஜிஓ க்களோடு இணைந்து உங்களைப் போலவே பணியாற்றும் ஒரு என்ஜிஓ ஆக மாறி விட்டார்கள்... எங்க ஊருல கூட ஒரு வட்டிக்கடைக்கார்ரு இருக்காரு... அவரு கூடத்தான் எழுபதுகளில் புரட்சி நக்சல்பாரின்னு பேசுனவரு... அதுக்காக இன்னிக்கு அவரு என்ன அப்படிங்கிறதுதான முக்கியம்...
புரட்சித்தலைவி யோடு சேர்ந்த்து தொழிலாளி வர்க்கத்துக்கு எப்படி உகந்த்து... அந்த அம்மா தனி ஈழத்த அமைக்கப் போறோம்னு சொல்லுது... நீங்களும் அத ஒத்துக்குறீங்களா...
அந்த அம்மா ராமர் பாலத்த இடிக்க கூடாதுங்குது... ராமர் பாலம் னு ஒன்னு இருக்குறத நீங்களும் ஒத்துக்குறீங்களா...
இப்படி மூடநம்பிக்கையோடு கூட்டணி வைத்துக்கொண்டு அமைப்பு பெயரில் மாத்திரம் முற்போக்கு என்ற வார்த்தை வைத்திருப்பது அயோக்கியத்தனம் என்றால் நாங்க அனானிங்க நக்சலைட்டுங்களா.. என்னங்க மார்க்சிஸ்டுகளின் நியாயம் மட்டும் அநியாயமா இருக்கு..
-mani
தொழிலாளி வர்க்க நலனுக்கு உகந்த ஒன்றைத்தான் தேர்ந்தெடுப்பீர்களா... அப்படியானால் இந்திய அளவில் கிராமங்கள்தான் எண்பது சதவீத்திற்கும் அதிகமாக உள்ளது... அங்குள்ள பெரும்பான்மை மக்கள் விவசாயிகள்... நமது நாடு கூட விவசாயத்தை அதிகமாக செய்கின்ற மக்களை உடையது என நினைக்கின்றேன்... அந்த விவசாய வர்க்க நலனை கண்க்கில் கூட எடுக்க மாட்டீர்களா...
அந்த விவசாய வர்க்கத்தில் சர்க்கரை அதிப்ர் லாபியில் உள்ள முதலாளிகளின் முக்கிய புள்ளி சரத் பவார்... அவரஐ பிரதமராக்க புரட்சி தலைவி ஆதரவு தெரிவிக்கின்றாரே... உங்களுக்கும் சம்மதமா...
தமிழ்!
தங்களுக்கு கிடைக்கும் நேரத்தை இந்த அனானிகளுக்கு பதில் சொல்லி வீணடிக்க வேண்டாம் என்பது என் கருத்து.
ஆரோக்கியமற்ற வார்த்தைகளை உபயோகித்து, மிக மோசமாக கொச்சைப்படுத்துவதையே நோக்கமாக கொண்டுஇருக்கிறார்கள். முழுநேரமும், வலைப்பக்கங்களில், முற்போக்காய் யார் எழுதினாலும் அங்கு வந்து உட்கார்ந்து சேற்றை வாரி இறைப்பதே தொழிலாக வைத்திருக்கிறார்கள்.
நந்திகிராம் பிரச்சினையை வேகமாக ஊடகங்கள் ஊதிய தருணம் உங்களுக்குத் தெரியும். அணு ஒப்பந்த விவகாரத்தில், இடதுசாரிகள் முழுக்க முழுக்க அமெரிக்கா எதிர்ப்பு நிலை கொண்டபோது, ஒரு சர்வதேச சூழ்ச்சிகருக்கொண்டது. பாராளுமன்றத்தில் இவர்களுக்கு இருக்கும் செல்வாக்கை குறைக்க வேண்டும் என சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. அதற்கு கிடைத்த தீனிதான் நந்திகிராம். புலம்பெயர்தல் போன்ற விஷயங்களில் மக்களின் நுட்பமான உணர்வுகள் குறித்து புரிதல் இல்லாமல் அரசு நடந்து கொண்டது அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது.
அதை ஊதி, ஊதி பெரிதாக்கினார்கள். அமெரிக்காவின், இந்தியாவின் பெருமுதலாளிகளின் அபிலாஷைகளை நிறைவேற்ற பெரும் கூட்டணி அமைந்தது. அந்த அபிலாஷையே இந்த அனானிகளுக்கும் இருப்பதுதான் விநோதம்.
இவர்கள் மோடியை, மன்மோகனை, அத்வானியை ஒப்புக்கு நாலு கெட்ட வார்த்தைகளால் வசவு செய்துவிட்டு, இடதுசாரிகளை பக்கம் பக்கமாக கிண்டல் செய்வார்கள். யாரைக்காட்டிலும் இவர்களுக்கு மாக்சிஸ்டுகள் மீது தீராத வெறுப்பு இருப்பது அவர்களது வார்த்தைகள் பூராவும் நிறைந்திருக்கும்.
உங்கள் அரசியல் பார்வை, அவர்களுக்குத் தெரியாதா, என்ன. என்ன சொன்னாலும், எழுதினாலும் இப்படித்தான் இருப்பார்கள். நேர்மையான, ஆரோக்கியமான விவாதங்களுக்கு வர மாட்டார்கள். இலக்கியம் வளர்ப்பது குறித்து அவர்கள் உபயோகித்திருக்கும் சொல்லாடல்கள் நாகரீகமாகவா இருக்கிறது?
இவர்களுக்கு நேரம் செலவழிப்பது பயனற்றது. எனவே பதில் தரவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் சித்தாந்த விவாதம் செய்ய மார்க்சிஸ்டு கட்சி உங்களுக்கு பழக்கவில்லையா மாதவராஜ்... அவதூறு எது என கூட அறியமுடியாதா உங்களால்.. விவாதிப்பதற்கே ஜனநாயகப் பூர்வமாக நீங்கள் இல்லாத போது உங்கள் தோழர்கள் எந்த அளவு படிக்காத மக்களிடம் ஜனநாயகப்பூர்வமாக இருந்து இருப்பீர்கள் ந்ந்திகிராமத்தில் சிங்கூரில் என புரிந்து கொள்ள முடிகின்றது...
நந்திகிராமத்தின் ஏழை கூலி விவசாயிகளை அமெரிக்கா தூண்டி விட்டதா... பயங்கரமான சதிவலை போலத் தெரிகின்றதே... எதற்கும் திஹெக் நீதிமன்றத்தில் நேர்மையான முறையில் வழக்கு பதிவு செய்யுங்கள்... இவல்லையென்றால் இதனை அவதூறு என சீர்குலைவுவாதிகள் சொல்லி விடப் போகிறார்கள்..
பாராளுமன்றத்தில் உங்களது செல்வாக்கு என்ன சீட்டா அல்லது விவாதிக்கின்ற முறையா இல்லன்னா சோம்நாத் சட்டர்ஜியா... ஏங்க சிறுவிவசாயி க்கு ஒரு ஏக்கர் நிலம் மாத்திரம் இருக்கு... அத்ப் பிடுங்குனா அது மார்க்சிஸ்டு அரசா இருந்தா அந்த விவசாயிகள இழப்பு நுட்பமான உணர்வா...
மன்மோகன் அத்வானி போன்றோர் எதிரிகள். அது தெளிவாக தெரிகின்றது... ஆனால் நம்மவர்கள் என்ற போர்வையில் சுற்றும் உங்களை கொள்கை என ஒன்று இருப்பது போல பேசுவதால் தான் விமர்சனம் செய்கின்றோம்... விமர்சனம் இருப்பதாலே அது ஆரோக்கியமற்ற விவாதம் என சொல்ல முடியாது... இன்ஃனும் சரியாக சொல்வது எனில், விமர்சனம் இல்லாத விவாதம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. விமர்சனங்கள்தான் விவாத்த்தை தூண்டும்.
சேற்றை வாரி இறைப்பதும், லாஜிக் இல்லாமல் புரட்சித்தலைவிக்கு காவடி தூக்குவதை நியாயப்படுத்துவதும்தான் மாதவராஜ் மற்றும் தமிழ் செல்வனின் விவாதமுறையில் காண முடிந்தது.
ஒருவர் தமது அரசியல் பார்வை இன்ன இன்ன முறையில் மக்களுக்கு பயன்படும் என்பதால் இதனைத் தேர்வு செய்தேன் எனச் சொல்வதுதான் நேர்மையான செயல்... மற்றபடி நான் நக்சல்பாரி என்பதோ, மார்க்சிஸ்டு என்பதோ மற்றவர்கள் தெரிந்து கொண்டு அதனை விமர்சிக்காமல் அதாவது சம்பந்தப்பட்டவரின் மனம் நோகாமல் பேச வேண்டுமானால் அதனை நேர்மையானவர்கள் செய்ய முடியாது என நினைக்கிறேன். முதுகு சொறிபவர்கள் வேண்டுமானால் உங்களோடு விவாதிக்கலாம்...
இலக்கியம் மக்களுக்காகத்தான் என நினைக்கிறேன்... மார்க்சிய பார்வையல்ல இது அல்ல என நினைத்தால் யாரும் விவாதிக்கலாம் மாதவராஜ் கூட•..
//
குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனக் காவல் துறையைக் கேட்டுக்கொள்கிறோம்.
//
இதெல்லாம் என்னைக்கு நம்ம நாட்டில நடந்திருக்கு?
வழக்கம் போல அஞ்சு வருஷம் வழக்கு நடத்திட்டு, கடைசியா ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்யபடுகிறார்கள் என்ற தீர்ப்பும், அப்பாவை சந்திச்சு பையனும், மற்ற கூட்டாளிகளும் சிரிப்பது போல புகைப்படம் எடுத்து, ஆனந்த விகடன், குமுதத்தில் வெளியிடப்படும்.
மாது..rasa சொல்வதுபோல நாம் ஒன்றும் விவாதிக்கப் பழகாத மூடர்கள் அல்ல.மணி,சண்டாளச்சாமி மற்றும் அனானிகள் தங்கள் அரசியல் என்ன என்பதைச் சொல்லாமல் ஏதோ தாங்கள் மொதுமக்கள் போல ஒரு தொனியில் பேசுகிறார்கள்.நம்மை provoke செய்வதும் தங்கள் அரசியலை எழுதிவைக்க மார்க்சிஸ்ட்டுகளை அவதூறு (rasa மன்னிக்க -அவதூறை அவதூறு என்றுதான் சொல்ல முடியும்)செய்ய வலைத்தளத்தில் திட்டமிட்டு இயங்கிகிறார்கள் என்பது எல்லோருக்குமே புரியத்தான் செய்கிறது.என்றாலும் பதில் ஒன்றை நாமும் பதிந்து வைப்போமே.வேறு யாராவது படித்தால் உதவட்டுமே.
இலங்கைத் தமிழர் இக்கதிக்கு ஆளாகி நிற்பதில் பாசிச இலங்கை அரசுக்கு உள்ள பங்குக்குக் குறையாத பங்கு புலிகளுக்கும் இருப்பதாக 87இலிருந்து கூறி வருகிறோம்.என்றாலும் தினம் ஒரு நிலை எடுப்பவர்களைக்கூட இவர்கள் கொண்டாடி விடுவார்கள் போல .நம்மை அவதூறு செய்வதி மட்டும் உற்சாகத்துடன் செய்து வருகிறார்கள்.
டென்சன் பார்ட்டிகளை டென்சன் பார்ட்டிகள் என்றுதான் சொல்ல முடியும்.நக்சல்களை நக்சல்கள் என்றுதான் சொல்ல முடியும்.மொத்தமுள்ள நக்சல் குரூப்புகள் எத்தனை ? அவர்கள் ஒவ்வொருவரின் கொள்கை நிலைபாடு எனென என்று நக்சல் தோழர்கள்தான் ஒரு பட்டியல் போட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.பீகாரில் இருப்பது நாங்க இல்லே. வங்கத்தில் இருப்பது வேறே.ஆந்திராவில் இருப்பது வேறே என்பதை மக்களுக்குச் சொன்னா குழப்பம் இருக்காது.
இலங்கைப்பிரச்னையை வெறும் emotional பிரச்னையாக ஆக்கியது இவர்கள்தான்.
நீங்கள் சொல்வதுபோல இவர்களுக்குப் பதில் எழுதுவது வேஸ்ட்.நக்கல் தவிர வேறு என்ன கண்டார்கள் பாவம் வாழ்க்கையில்.
ஒரிஸ்ஸாவில் சாமியாரைப் போட்டுத்தள்ளி கிறித்துவ மக்களுக்குச் சொல்லொணாத் துயரை உண்டாக்கிய அந்த குரூப் எந்த நக்சல் குரூப் என்று மணி சார் அல்லது சண்டாளச்சாமி அல்லது கண்ணியமிக்க அனானிகள் யாரவது சொல்லுங்களேன்
தமிங்கலத்தை (வேஸ்ட்,ஓவர்...)மக்கள் மொழியாக ஏற்றுக் கொண்ட கண்ணியமிக்க ச.த அவர்களுக்கு,
முதலாவதாக, சண்டாளச்சாமி நக்சல் அல்லர். அதற்கான தகுதி இருப்பதாகவும் நினைக்கவில்லை. உங்களை நக்சல்கள் தவிர யாரும் கேள்வி கேட்பதே இல்லையா என்ன, கொடுமைதான். அது போக, 'பொதுமக்கள் போல...'என்றொரு வரி, உங்களுடையது. என்ன சொல்ல? யார் பொதுமக்கள்? உங்கள் பார்வையில் அரசியலற்றவர்கள்தாம் பொதுமக்களா? என்றால், சண்டாளச்சாமி பொதுமக்களில் சேர்த்தியில்லை. அல்லது, அரசியல் இயக்க சார்பற்றவர்களா - என்றால், அப்பாட, சண்டாளம் பொதுமக்களில் ஒன்றுதான். நம்பலாம். உங்களைப் போல எந்த இயக்கத்தோடும் இணைத்துப் பார்த்து பெருமைப்பட்டுக் கொள்ள நமக்கு வக்கில்லை.
போகட்டும். ச.த, ஒடுக்குமுறையை எதிர்த்தால் பாசிச அரசு என்ன பூச்சொரிந்து சந்தனமா பூசும்? - ஈழ மக்கள் இப்போது படும் துன்பங்களுக்கெல்லாம் புலிகளும் ஒரு காரணம் - என்னவோரு மகத்தான கண்டுபிடிப்பு! இது வெறும் கண்டுபிடிப்பு மட்டுமல்ல, இந்திய ஏகாதிபத்திய அரசினது குரல், இந்து ராம், அமார்க்ஸ், ஓஞாநி, சோராமசாமியினரின் குரலும் கூட. உங்கள் தர்க்கத்தை நீட்டித்தால், பாலஸ்தீனர் படும் துன்பத்துக்கெல்லாம் யாசர் அராபத் இயக்கத்தவரும் காரணம். தென்னாப்பிரிக்க கறுப்பினத்தவர் பட்ட கொடுமைக்கு மண்டேலா இயக்கத்தவரும் ஒரு காரணம். ஒடுக்கப்படும் மக்கள் உள்ள நாடுகள் பூராவும் அவர்கள் அரசபயங்கரவாதத்தால் தாக்கப்படுவதற்கு அரசை எதிர்த்து ஆயுதம் தாங்குபவர்கள்தான் காரணம். இப்படியெல்லாம் நீங்கள் முன்பு எங்கேயும் சொன்னதாக நமக்கு நினைவில்லையே?
ச.த, எல்லா பின்னூட்டங்களையும் அனுமதிப்பதற்கு முதலில் உங்களுக்கு நன்றி. மற்றபடி கண்ணியமான வார்த்தைகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிறார் உங்கள் ஆசான். பின்னூட்டங்களை மட்டுறுத்தலின் முற்போக்கு அரசியல் அறிந்தவர் அவர். கீழ் கண்ட பின்னூட்ட வரிகளை படித்துப் பாருங்கள்.
//இதையும் குறிப்பிட மறந்து விட்டீர்களே மாதவ்..,
'தமிழர் தாயகத்திற்கான அரை நூற்றாண்டுக் கால விடுதலைப் போராட்டமென அங்கீகரிக்க மாட்டோம் (சிபிஎம்). ஆனால் ஈழ மக்கள் - அய்யய்யோ இல்லை இல்லை, இலங்கைத் தமிழர் பாதிக்கப்படுவதை நினைத்தால்தான் அளுவாச்சியாக இருக்கிறது. (சிபிஎம் முற்போக்கு! எழுத்தாளர்கள்)//
இதில் என்ன கண்ணியமற்ற, ஆபாச சொற்கள் உள்ளன? சில பதிவுகளில் நாம் கவனித்திருக்கலாம். இன்னாரிடமிருந்து... இப்பின்னூட்டம் இன்ன காரணத்திற்காக இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது என்றிருக்கும். அதுகூட (கண்ணியம்?) உங்கள் ஆசானிடம் கிடையாது அவருக்கு கோபம் வருகிறதா, பதில் சொல்ல பிடிக்கவில்லையா, தூக்கேய்...
எதிர்வினைகளில், குருவே..ஆசானே..அண்ணனே..தோழரே காலைல ஏந்து உங்கள் பதிவைக் கண்டதும் ரோமாஞ்சனம், கண்ணில் நீர் மல்கியது, பார்த்தீர்களா நம் மக்கள் எப்படி இருக்கிறார்கள், நீங்கள் எவ்வளவு நல்லவர், மேதை என்ற மாதிரியான சுகமான பின்னூட்டங்கள் மட்டும்தான் கண்ணியமானவை என்றால், பாலகுமாரன், ஜெயமோகன் போன்றோருக்கு வரும் (அவர்கள் பிரசுரிக்கும்) கடிதங்கள்தாம் தகுதியானவை. அதைதான் மாதுவும், நீங்களும் எதிர்பார்க்கிறீர்களா?
(சாமியாரை நானோ,என் குடும்பத்தவரோ, நண்பர்களோ கொல்லவில்லை, ச.த, நன்றி.)
இங்கே சம்பந்தம் இல்லாமல் நமது நேரத்தை வீண் அடிப்பவர்கள் இவர்கள்தான் தோழர்
பொறுக்கி தின்ன வாய்சவடாலும் எதிர்புரட்சிக்கு மகஇகவும்
நாங்க மாவோவைச் சொன்னாலும்
மகஇக எஸ்.ஓ.சி பின்னால் நின்னாலும்
இலக்கு ஒண்ணுதான் தோழர்.
அரை காலனித்துவ
அரை முதலாளித்துவப்
அரை நிலபிரப்புத்துவப் போதையில்
மூழ்கிக் கிடக்கும் மக்களை
மகஇக கலைக்குழு பாதையிலேயே போய்தான்
அப்படியே புடிக்கணும் !
தோழர் . மக்கள் இன்னும் தயாராய் இல்லை
அது வரைக்கும் ?
ஓட்டு போடாதிங்க!
அப்புறம் பாருங்க.. நேரா புரட்சிதான் !
கேட்டவரை அதிரச்சியடைய
டோட்டலாய் விளக்கினார் தோழர்
யாருமே கட்சியில் இல்லாட்டாலும் - சி.பி.ஐ. மகஇக எஸ்.ஓ.சி
தன் கொள்கையை மட்டும் இழக்காது.
மக்கள் விரோதிகள் எவரும் இனி
(மமதா மாவோஸ்ட் கூட்டுபோல)
மகஇக விலக்கி விட்டு
அரசியல் நடத்த முடியாது !
யாருமே எங்கள ஏதுக்களனாலும் தமிழ்நாட்டுல
இருக்கிற நாலுபேரும் தடுத்தாலும்
சாருமஜீம் தாரு சபதம் முடிக்காமல் மகஇக அடங்காது.
அப்புறம் எப்போது புரட்சி?
அது இருக்கட்டும் தோழரே சி.பி.ஐ. மகஇக எஸ்.ஓ.சி
வரலாற்று ஸ்டேட்டஜியே வேற:
அன்று சாருமஜீம் தாருயை அடையாளம்
கண்டோம் அவரிடம் வந்த
அத்தனைபேரையும் கொன்றோம்.
கம்யுனிஸ்ட் கட்சி உள்ளே இருந்தே
இடது சீரகுலைவை மோப்பம் பிடித்தோம்.
அப்படியே படிப்படியாய்
தனிக்கடையை விரிச்சோம்.
அப்புறமா மேற்கு வங்க நக்சல்பாரி கிராமத்தில்
ஆட்சியைப் பிடிச்சோம்.
அடுத்தது புரட்சி ?
பின்னே ஆயுதம் வன்முறை இல்லாமல்
சோசலிசம் படைக்க முடியாது என்பதை
சாரும் மஜீம்தாரு தலைமையில் அழித்தொழிப்பு என்று சொல்லி
அப்பாவி மக்கள ஏமாத்தி கொண்ணு போட்டோம் !
கல்லாவை வென்றெடுக்க
தனி தனியாக 82 கடை விரிச்யோம்
அமெரிக்காவிடம் நல்ல பேர எடுக்கு
புதுசு புதுச இயக்கம் வைச்சோம்
மகஇக என்.ஜீ.ஓ ஆரம்பிச்சோம் !
காசு சேரத்து கம்யுட்டர வாங்கி
இனையத்தில் சிபிஎம் ஆதிக்கம் ஒழிச்சோம்
சரி புரட்சி எப்போது ?
அட ! மமதாவை வென்றெடுத்தோம்
நந்திகிராமத்தில் நம்ம கட்டுப்பாட்டில் நுழைச்சோம் !
பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் காக்க
52 சிபிஎம் தோழர்களை கொண்று போட்டோம்.
பிஜேபினு பேதம் பார்க்காமல்
அத்வானி அரவனைத்துகிட்டோம்.
வர்க்கப் பகைமையை ஒழிக்கத்தான்
சிங்கூர் நந்திகிராமில்
விவசாயி தொழிலாளி வாழ்வை ஒழிச்சோம்
அத்வானிக்கு கொடுத்த உறுதி மொழிப்படி
குஜராத்துக்கு கம்பெனியை மாத்தினோம் !
இதுவா புரட்சி !
இது மட்டுமா ! பாரப்பண ஆதிக்கத்தை ஒழிக்க
பாரப்பண தலைமையை ஏதுக்கிட்டோம்.
இட ஒதுக்கீடு தலித்துகளுக்கும்
பிற்பட்டவர்களுக்கும் கொடுக்க
கூடாதுன்னு புரட்சிக்காக
அந்தப் பிரச்சனையை புதைச்சோம்.
புலிகளை பாசிஸ்ட்டுகள் என்று சொன்னோம்
யாரும் கவணிக்கதால்
புலிகளை ஆதரிச்சி காசு பணமும்
போராட்டத்தின் தலைமையும் பெற்றோம் !
ஈழத்தமிழருக்காய் உயிரகளை எரித்து கசிந்து
பிண வாடை எடுத்த சுடுகாட்டில் அஞ்சாமல்
முன்நின்று வசுலித்த எங்கள் போரத்தந்திரம் சும்மாவா ?
இதிலென்ன புரட்சி ?
அன்ட பிசரண்ட அகிலம் அதிர - எங்கள்
ஆயுத கிடங்கில் புதிய கலாச்சாரத்தில்
புதிய ஜனநாயகத்தில் நாக்குழறி
முத்துக்குமார போன்ற அப்பாவி
இளைஞர்கள் 11 பேரின் படுகொலையில்
எச்சு ஊறி புலிகள் பின்னால் திரளுகையில்
என்ன ஒரு கேள்வி இது !
எத்தனை முறைதான் ஓதுவது !
அடைந்தால் தனி நாடு அடையாவிட்டால்
சுடுகாடு என்று கோசம் போட்ட
தலைவர்களால் முடியாததை
இலங்கை பிரச்சனை
முன்வைத்து தமிழ்நாட்டை தனியாக
பிரிக்கபோகிறோம் ஓட்டுப பொருக்காத
கட்சியா ஆட்சி செய்ய போகிறோம்
நாம இல்லாமல்
யாராவது இனி அரசியல் நடத்த முடியுமா ?
போதும் எப்போதுதான் புரட்சி ?
வந்தது கோபம் தோழருக்கு :
அட ! என்னங்க
இவ்வளவு தூரம் விவரம் சொல்கிறேன்
இன்னும் விளங்காமல்
எங்களிடம் வந்து புரட்சி புரட்சின்னா. ?
சுத்த புரியாத ஆளா நீங்கள் !?
எங்க கட்சி பேரே எங்களுக்கு
தெரியாது கட்சி திட்டமே கிடையாது
ஆனா ஓன்னு ஓட்டுபோடாதே புரட்சி செய்
காலனியம் பேசுவோம்!
ஏகாதிபத்தியம் எதிர்ப்போம்னு
சொல்லுவோம்!
இருந்தாலும் எங்க புரட்சி
குண்டு சட்டிக்குள்ளத்தான்!
அதாங்க எங்க எல்லையெல்லாம்
தமிழ்நாட்டுக்குள்ள மட்டும்தான்
எங்களது அகில இந்திய தலைமையெல்லாம்
தமிழ்நாட்டுக்குள்ள மட்டும்தான்!
அப்புறம் என்ன இருக்கவே இருக்குது
வாய்ச்சவடால் அகில இந்திய புரட்சிய
நடத்திட வேண்டியதுதான்.
பங்காரு அடிகளாரின் சிவப்பு படைக்கு
போட்டியா நாங்க இப்ப
கும்பமேளா நடத்தத் துவங்கிட்டோம்
முதலாளித்துவ பயங்கரவாத
மாநாடு நடத்துவோம்
வரக்கூட்டத்தை அப்படியே
லபக்கென்று பிடித்துக்கொண்டு
இலங்கைக்காக ஒரு ஆர்ப்பாட்டம்
நடத்துவோம்!
அய்யோ இந்தப் புரட்சிக்குத்தான்
இந்தக் கத்தா?
தமிழ்......... மக்களோடு எந்த தொடர்பும் இல்லாத இந்த கூட்டத்துடன் நாம் நம் நேரத்தை வீணடிப்பது உசிதமல்ல, நீங்கள் கூறுவது போல் இவர்கள் எத்தனை குழுக்கள், அவர்களின் கொள்கைகள் என்ன என இவர்கள் ஒரு Tabular வெளியிட தயாரா.. அதற்கு நாம் கூட நிதி உதவி செய்யலாம்.. இவர்கள் வெளியிட்டால் நம்க்கு தொல்லை மிச்சம்.. இவர்கள் ஏதாவது அக்கப்போரு செய்ய நாம் தான் ஜனங்களிடம் வியாகியானம் செய்ய வேண்டியது உள்ளது.
பொது ஜனங்களுக்கு பாஅவம் நக்சல் யாரு கம்யுனிஸ்டு யாரு என தெரியாது அனைத்தையும் குழப்பியடித்து விடுகிறார்கள்.. முதளாலித்துவ ஊடகங்கள், சோ- சு.சாமி வகையறாக்கள் வேறு பல நேரங்களில் எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றிச் செல்வார்கள்.
தமிழ்நாட்ல ரெண்டு பத்திரிக்கையை நடத்திக் கொண்டு அதன் மூலம் ஒரு காகித புரட்சியை செய்ய முயலும் பகல் கனவிலிருந்து இவர்களை யார் உசுப்பி விடுவார்களோ????????
இது தேர்தல் காலம், அதுவும் நம் ஊரில் தேர்தல் களம் கொஞ்சம் அதிகமாகவே சூடு பிடித்துள்ளது. இந்த நேரத்தில் நம்மை சூழ்ந்துள்ள அரசியலை பற்றி பேசலாமா......
அரசியலில் சமூக அக்கறையுள்ளவர்களின் பங்கேற்பு குறைந்து காணப்படுகிறது. அதுவே அரசியலில் கிரிமினல்களின் வருகைக்கு வழிவகுத்து விட்டது. 2004 நாடாளுமன்றத்தில் ஐந்தில் ஒருவர் (22.1%) கடுமையான கிரிமினல் பின்புலம் சார்ந்தவர் என்பதை பல ஆய்வுகள் வெளிபடுத்தின. கொலை, கொள்ளை, பலாத்காரம், ஆட்கடத்தல் என அடுக்கடுக்காய் குற்றங்கள் புரிந்தவர்கள். நம் ஊர் வேட்பாளர் இப்படியான ஒரு கிரிமினலாக இருக்க கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் நம் தொகுதியையும் ஊரையும் பாதுகாக்கும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக மதுரையில் நடந்த சில சம்பவங்களை மனதில் அசை போட்டுப் பார்க்கலாமா. இந்த சம்பவங்கள் மதுரை நகரத்தின் வரலாற்றில் பெரும் சாதனைகள் தானா என்பதை வாக்காளர்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆசியாவின் பெரும் பணக்கார குடும்பத்தில் தகராறு வருவது சகஜமான ஒன்றே. இவர்களின் அதிகார வெறியை நிருபிக்க- நிலைநாட்ட வழக்கம் போல் கட்சி கடிதம் எழுதாமல் இந்த முறை கருத்துக் கணிப்பை வெளியிட்ட தினத்தில் அந்த பத்திரிக்கையில் பணிபுரிந்த அப்பாவிகள் மூன்றுபேரின் கதியென்ன ஆனது? குடும்பச் சண்டையில் தினகரன் ஊழியர்களின் உயிர் பறிக்கப்பட்டது. கொலைகாரர்களுக்கு பதவிகள், தலைமையின் கவனிப்புகள் குடும்பப் பிரச்சனை முடிந்ததும் தினகரன் சம்பவம் குழிதோண்டி புதைக்கப்படது. தினகரன் சம்பவத்திற்கு உங்கள் தீர்ப்பு என்ன??
இந்தியாவின் உள்ளாட்சி செயல்பாட்டில் முன்னுதாரணமாக் செயல்பட்ட மதுரையை சேர்ந்த கவுன்சிலருக்கு என்ன கதி நேர்ந்தது? மக்களின் அடிப்படை கோரிக்கையான தண்ணீர் பிரச்சனையை கையில் எடுத்து செயல்பட்டவரின் ரத்தம் வீதிகளில் தண்ணீராய் ஒட விட்டவர்கள் யார் என்பது உங்களுக்கு நினைவு படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த கொலையை செய்தவர்களை தண்டனை காலத்திற்கு முன்பே விடுதலை செய்து அவர்களுக்கு பெரும் விழா எடுத்த தி.மு.க வினர் நம் மக்கள் கோரிக்கைகளை தீர்க்கப் போகிறவர்களா அல்லது கிரிமினல்களின் கோரிக்கைகளின் பாதுகாவலர்களா.
தமிழகத்தின் மூத்த அமைச்சராக திகழ்ந்த தா.கிருஷ்ணன் அவர்கள் காலை தன் வீட்டிலிருந்து கிளம்பி ஜாகிங் சென்றார்.. அவர் இன்று வரை வீடு திரும்பவில்லை. அவர் கதி என்ன என்பது மதுரை வாக்காளர்களுக்கு நன்கு தெரியும். மக்கள் மனங்களில் உண்மை சுடர்விட்டு எரிய, நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை வழங்கியது என்பதை நாம் அறிவோம். அது நீதியின் தீர்ப்பு, மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கவேண்டிய நேரம் இது. கட்டாயம் மக்கள் என்றும் கிரிமினல்களை கொண்டாட மாட்டோம் என்பதை நிருபிக்க வேண்டிய காலம் இது.
மதுரை நகரத்தில் வருடந்தோறும் ஜனவரி 30 அன்று சட்டம் ஒழுங்கு விடுமுறை எடுத்து அருகில் உள்ள கொடைக்கானலுக்கு ஒய்வெடுக்க சென்று விடும். பள்ளி குழந்தைகளிடம் கூட நீங்கள் ஜனவரி 30 என்றால். உடன் அவ்ர்கள் அண்ணன் பிறந்த நாள் என்பார்கள். பாட திட்டதில் கூட ஜனவரி 30 காந்தி ஜெயந்தி அல்ல அழகிரி பிறந்த நாளே என திருத்தம் செய்ய உடன்பிறப்புகள் மு.கருனாநிதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு மட்டும் வசூல் செய்யப்படும் தொகை 100 கோடியை தாண்டும், தர மறுப்பவர்கள் மதுரை நகரத்தில் தொழில் செய்ய இயலாது. கேட்ட தொகை தரமறுத்து ஜாய் ஆலுக்காசஸ் நகை கடை முன்பு யானை சைசில் பள்ளம் ஒரு வார காலத்திற்கு பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்டது.
இன்று அரசியலில் குடும்ப நலன், கிரிமினல்களின் நலன், சுய நலன் என பலவித வைரஸ்களின் ஆக்கிரமிப்பு பெருகிவிட்டது. இத்தகைய சக்திகளின் அரசியல் பிரவேசத்திற்கு நாடும் நாமும் பெரும் விலை கொடுத்து வருகிறோம். வேலையின்மை, விலைவாசி உயர்வு என சாமானிய ஜனங்களின் கஷ்டங்கள் பல தீர்க்கப்படவேண்டி காத்து நிற்கிறது. நம் அரசை, அரசியலை தீர்மானிக்க வாக்கும் தேர்தலும் ஜனநாயகம் நமக்கு வழங்கியுள்ள பெரும் ஆயுதங்கள். அதனை விலை பேச உங்களிடம் பலர் வீடு தேடி வருகிறார்கள், கொள்கையின் மீது அரசியலின் மீது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்த இவர்கள் தங்களிடம் உள்ள ஊழல் செய்து குவிக்கப்பட்ட பணத்தை கொண்டு நம்மை விலை பேச வருகிறார்கள். நம்மை அடிமைகளாக்கி இவர்கள் நிரந்தமான எஜமானர்களா மாற பதவி வெறி பிடித்ததுவருகிறார்கள்.
இது நாம் நம் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய தறுனம்
கிரிமினல்களை விரட்டுவேம்!!!! பொறுப்பானவர்களை தேசம் ஆட்சி செய்ய அழைப்போம்
ஜனநாயகம் காப்போம்!!!!வாக்குரிமை நம் பிறப்புரிமை !!!!
வணக்கம்.
தழிழக அரசியல் போக்கு எனக்கு நீண்ட நாள் பரிச்சயம் உண்டு(மலேசியாவில் பிறந்து இருந்தாலும்). அண்ணா,காமராசர் காலங்களில் அரசியல் எதிர்ப்பு விவாதங்கள் வார்த்தைகளில் இருந்தது. இன்று அதன் பரினாம வளர்ச்சியைப் பார்க்கும் போது அதிர்ச்சி + மலைப்பு வருகிறது. இந்த அரசியல் வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்....?
thozhrar indha anony sandalasamt vagaiyarakkalukkaga naeraththai veenakkavaendam ivargal verum kaagithappuligal -alla-puunaigal.
thozhrar indha anony sandalasamt vagaiyarakkalukkaga naeraththai veenakkavaendam ivargal verum kaagithappuligal -alla-puunaigal.
அன்புத்தோழர்க்குவணக்கம் தமிழ்வீதியை ஆரம்பநாள் முதல் படிக்கிறேன் மிக்க மகிழ்ச்சி.தமு க எ ச எழுத்தாளர்கள் அனைவரும் ஓர் இயக்கம் போல இனைய தளப் பக்கங்களைத் தொடங்கி அதில் பதிவுகளை,தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். வரப்போகும் பாராளு மன்றத் தேர்தலில் நமது படைப்பாளிகள் பங்கு மகத்தானது
அன்புத்தோழர்க்குவணக்கம் தமிழ்வீதியை ஆரம்பநாள் முதல் படிக்கிறேன் மிக்க மகிழ்ச்சி.தமு க எ ச எழுத்தாளர்கள் அனைவரும் ஓர் இயக்கம் போல இனைய தளப் பக்கங்களைத் தொடங்கி அதில் பதிவுகளை,தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். வரப்போகும் பாராளு மன்றத் தேர்தலில் நமது படைப்பாளிகள் பங்கு மகத்தானது
என்னசெய்ய தமிழனாய் பிறந்து தொலைத்து விட்டோம்.அனுபவிக்கிறோம்
Post a Comment